fff

திருட்டுக்கு துணைபோகும் போலீஸ்!

சாத்தூர் – விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த பிள்ளையா ரும், அவருடைய மகன் மாரியப்பனும் கோட்டைப்பட்டி –வைப்பாற்று பகுதியில் ssகடந்த 20-ந் தேதி, அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதற்கு மாட்டுவண்டியில் சென்றனர். பள்ளத்தில் இறங்கி மணல் அள்ளியவர்களின்மீது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்ததில் இருவரும் புதைந்து போயினர். மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றபோது ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூற, சத்தமில்லாமல் விஜயகரிசல்குளம் மயானத்தில் உடல்களை எரித்துவிட்டனர்.

மணல் திருட்டிலிருந்து வைப்பாற்றில் நடக்கின்ற அத்தனை சமூகவிரோதச் செயல்களும் காவல்துறைக்குத் தெரிந்தே மாமூலாக நடந்துவருகின்றன. இந்த இரு உயிரிழப்புகள் உட்பட. எதுவும் தெரியாததுபோல் கமுக்கமாக இருந்த நிலையில்தான், மீடியாக்கள் நோண்டுவதை அறிந்து, சம்பவம் நடந்த ஏழாயிரம்பண்ணை லிமிட்டில் வழக்குப்பதிவு செய்வதா? உடல்களை எரித்த வெம்பக்கோட்டை லிமிட்டில் பதிவு செய்வதா? என்று சீரியஸாக ஆலோசிக்க ஆரம்பித்திருக்கிறது காவல்துறை.

நாம் ஏழாயிரம்பண்ணை காவல்நிலையத்தை தொடர்புகொண்டோம். ""முதலில் வழக்குப்பதிவு செய

திருட்டுக்கு துணைபோகும் போலீஸ்!

சாத்தூர் – விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த பிள்ளையா ரும், அவருடைய மகன் மாரியப்பனும் கோட்டைப்பட்டி –வைப்பாற்று பகுதியில் ssகடந்த 20-ந் தேதி, அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதற்கு மாட்டுவண்டியில் சென்றனர். பள்ளத்தில் இறங்கி மணல் அள்ளியவர்களின்மீது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்ததில் இருவரும் புதைந்து போயினர். மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றபோது ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூற, சத்தமில்லாமல் விஜயகரிசல்குளம் மயானத்தில் உடல்களை எரித்துவிட்டனர்.

மணல் திருட்டிலிருந்து வைப்பாற்றில் நடக்கின்ற அத்தனை சமூகவிரோதச் செயல்களும் காவல்துறைக்குத் தெரிந்தே மாமூலாக நடந்துவருகின்றன. இந்த இரு உயிரிழப்புகள் உட்பட. எதுவும் தெரியாததுபோல் கமுக்கமாக இருந்த நிலையில்தான், மீடியாக்கள் நோண்டுவதை அறிந்து, சம்பவம் நடந்த ஏழாயிரம்பண்ணை லிமிட்டில் வழக்குப்பதிவு செய்வதா? உடல்களை எரித்த வெம்பக்கோட்டை லிமிட்டில் பதிவு செய்வதா? என்று சீரியஸாக ஆலோசிக்க ஆரம்பித்திருக்கிறது காவல்துறை.

நாம் ஏழாயிரம்பண்ணை காவல்நிலையத்தை தொடர்புகொண்டோம். ""முதலில் வழக்குப்பதிவு செய்யவேண்டாம் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதனால், வழக்குப்பதிவு செய்யவில்லை. தற்போது அதற்கான அவசியம் வந்திருக்கிறது. இதுகுறித்துப் பேசுவதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி சாத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். அவர் வந்தபிறகுதான் விவரம் சொல்லமுடியும்'' என்றனர்.

சாத்தூர் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டபோது, "அந்த லைனில் “என்ன விவரம்?' என்று கேட்க, "மணல் திருட்டும் உயிரிழப்புகளும் திட்டமிட்டே காவல்துறையால் மறைக்கப்பட்டிருக்கிறது'’என்று நடந்ததை நாம் விவரிக்க... அனைத்தையும் கேட்டுவிட்டு, ""நான் டி.எஸ்.பி. இல்லை. அவருடைய டிரைவர்'' என்றது அந்தக்குரல். ’""சரி... டி.எஸ்.பி.யிடம் பேச வேண்டியதிருக்கிறது. அவரிடம் விபரத்தைச் சொல்லுங்க''’என்றோம். டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் அடுத்து நம் லைனுக்கு வரவே இல்லை.

மணல் திருட்டுக்குத் துணை போகும் காவல்துறையின் கடமை உணர்வை என்னவென்று சொல்வது?

-ராம்கி

மல்லுக்கு நின்ற லேடி அமைச்சர்!

sssதிருச்சியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடை பெற்றது. மொத்தம் 21 உறுப்பினர்களைத் தேர்ந் தெடுப்பதற்கான இந்தத் தேர்தலில், அமைச்சர்களுக்கு தலா 4, எம்.எல்.ஏ.க்களுக்கு 2 என்கிற விகித அடிப்படையில் பிரிப்பதாக முடிவானது.

இந்தப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநகர மா.செ. குமார் மற்றும் புறநகர் மா.செ. ரத்தினவேல் ஆகியோர் இடையே உடன்பாடு எட்டப்பட் டது. லேடி அமைச்சர் வளர்மதியோ "புறநகரில் 4, மாநகரில் 4 என்னுடைய ஆட்களுக்கு வேண்டும்' என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

ss

வேறுவழியின்றி வளர்மதிக் காக மா.செ.க்கள் வளைந்து கொடுத்துப்போக, 18 உறுப் பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், எஞ்சிய 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் கடும்போட்டி நிலவியது. அ.தி.மு.க. மா.செ.க்கள் ரத்தினவேலும், குமாரும் ஒன்றியச் செய லாளர்கள் மூவரை கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தனர்.

ஆளுங்கட்சி மா.செ.க் களே சொல்வதால் சிக்கல் எதுவும் இருக்காது என அடுத்தகட்ட வேலை களுக்கு கூட்டுறவு சங்க அதிகாரிகள் தயாரான வேளையில், "என்னோட ஆட்களுக்குதான் கொடுக் கணும். இல்லைனா சி.எம். வரைக்கும் போவேன்'’என அமைச்சர் வளர்மதி அதி காரிகளிடம் சிடுசிடுத் திருக்கிறார். பொதுவாக ஆளுங் கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் இடையில் தான் இது போன்ற பிரச்சனைகள் வெடிக்கும். அமைச்சரும், ஆளுங்கட்சி மா.செ.க்களும் முட்டிக்கொள்வது சரியாக இருக்காது என்று முடிவு செய்த மா.செ.க்கள் இருவரும் தாங்கள் நிறுத்திய வேட்பாளர்களை வாபஸ் வாங்கினர். லேடி அமைச்ச ரின் பிடிவாதமே ஜெயித்தது.

-ஜெ.டி.ஆர்.

அமைச்சர் பினாமியின் அட்டகாசம்!

வேலை வாங்கித் தருவதாக அப்பாவிகளிடம் பணத்தை வாங்கி ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு நம்மூரில் பஞ்சமில்லை. உணவு அமைச்சர் காமராஜின் பினாமி ஒருவரின்மீது இதே புகாரைச் சொல்லி நம்மிடம் கதறியழுதார் திருவாரூர் பேரளத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி.

sss

தனது விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத அவர், “""மேனாங்குடியைச் சேர்ந்த அம்மா பேரவை ஒ.செ. புகழேந்திதான் எங்களை ஏமாத்தினார். பையனுக்கு வேலை கிடைச்சிட்டா ரெண்டு பொண்ணுங்களைக் கரைசேர்த்திடலாம்னு சொத்தைவித்து கடன்வாங்கி நாலு லட்சரூவா கொடுத்தோம். அப்புறம்தான் அந்தாளுகிட்ட எங்களைப்போல நிறையபேர் ஏமாந்திருக்காங்கன்னு தெரியவந்தது. கந்துவட்டிக் கொடுமையால என் கணவரும் போய்ச் சேர்ந்திட்டாரு. அமைச்சரோ எங்க புலம்பலுக்கு செவிசாய்க்கவில்லை'' என்றார் விம்மியபடி.

புகழேந்தியைப் பற்றி நம்மிடம் விவரித்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், ""அமைச்சருக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கம் என்று சொல்லியே கட்சிக்காரர்களிடம் கெத்துகாட்டும் புகழேந்திக்கு மக்களை ஏமாற்றி, பணத்தை வாங்கி ரொட்டேஷன் விடுவதுதான் வேலையே. கூட்டுறவு சங்கத் தலைவரா இருந்தபோது செத்தவங்க பேர்லயே லோன்போட்டு காசு பாத்தவரு. அம்மா பிறந்த தினத்தப்போ இலவச திருமண விழாவில் போலியா ஆள் ரெடிபண்ணி கமிஷன் வாங்கினவரு'' என்றார் விளக்கமாக.

இதுபற்றி புகழேந்தியிடமே கேட்டபோது, ""நான் 8 பேர்கிட்ட பணம் வாங்கினது உண்மைதான். ஆனால், அதிலிருந்து ஒரு பைசாகூட எடுக்கலை. நெடுஞ் செழியனோட அக்கா மகன் பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டான். இப்போ அவன் வீட்டை எழுதி வாங்கியாச்சு. வீட்டை வித்து காசைத் திருப்பிக் கொடுப்பேன். 32 வருஷ அரசியல் வாழ்க்கை என்னைக் கடனாளியாத்தான் ஆக்கியிருக்கு'' என்றார்.

அமைச்சர் காமராஜை தொடர்புகொண்டால், உதவியாளர் அழைப்பை ஏற்று, லைன் கொடுப்பதாக சொன்னார். அதன்பிறகு நமது அழைப்பை ஏற்கவில்லை.

-க.செல்வகுமார்

nkn011019
இதையும் படியுங்கள்
Subscribe