sss

ரஜினி ரசிகரின் "உழைப்பாளி' உணவகம்!

டெங்கு காய்ச்ச லுக்கு பலியாகிக் கொண்டிருந்த ஏழை- எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு sssகுடிநீர், பப்பாளி இலைச்சாறு கொடுத்து பல்வேறு உயிர்களைக் காப்பாற்ற காரணமாக இருந்தவர் டாக்டர் வீரபாபு.

தற்போது, ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பாக 20 ரூபாய் உணவகத்தை தொடங்க இருக்கிறார். ரஜினி நடித்த ‘உழைப்பாளி’ என்ற தலைப்பையே உணவகத்திற்கு சூட்டியிருக்கிறார்.

ஏற்கனவே, சென்னை மாநக ராட்சி வளாகத்துக்குள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக 15 ரூபாய்க்கு சாப்பாடு மற்றும் பல்வேறு பாரம்பர்யமிக்க ஆரோக்கியம் நிறைந்த பதார்த்தங்களை மிகவும் குறைந்தவிலைக்கு விற்பனை செய்துவந்தவர் டாக்டர் வீரபாபு. இதனால், ஒருநாளைக்கு 1,000 பேர் பயன் பெற்றார்கள்.

தற்போது அதை விரிவுபடுத்தி இருக்கும் திட்டம்பற்றி வீரபாபு விடம் கேட்டபோது, ""நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரது, மன்றத் தின்மூலம் ஒரு சாதாரண ரசிகனாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்ய இருக் கிறேன். அதன், முதல்கட்டம்தான் உழைப்பாளி உணவகம். சென்னை மணப்பாக்கத்தில் உணவகம் த

ரஜினி ரசிகரின் "உழைப்பாளி' உணவகம்!

டெங்கு காய்ச்ச லுக்கு பலியாகிக் கொண்டிருந்த ஏழை- எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு sssகுடிநீர், பப்பாளி இலைச்சாறு கொடுத்து பல்வேறு உயிர்களைக் காப்பாற்ற காரணமாக இருந்தவர் டாக்டர் வீரபாபு.

தற்போது, ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பாக 20 ரூபாய் உணவகத்தை தொடங்க இருக்கிறார். ரஜினி நடித்த ‘உழைப்பாளி’ என்ற தலைப்பையே உணவகத்திற்கு சூட்டியிருக்கிறார்.

ஏற்கனவே, சென்னை மாநக ராட்சி வளாகத்துக்குள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக 15 ரூபாய்க்கு சாப்பாடு மற்றும் பல்வேறு பாரம்பர்யமிக்க ஆரோக்கியம் நிறைந்த பதார்த்தங்களை மிகவும் குறைந்தவிலைக்கு விற்பனை செய்துவந்தவர் டாக்டர் வீரபாபு. இதனால், ஒருநாளைக்கு 1,000 பேர் பயன் பெற்றார்கள்.

தற்போது அதை விரிவுபடுத்தி இருக்கும் திட்டம்பற்றி வீரபாபு விடம் கேட்டபோது, ""நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரது, மன்றத் தின்மூலம் ஒரு சாதாரண ரசிகனாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்ய இருக் கிறேன். அதன், முதல்கட்டம்தான் உழைப்பாளி உணவகம். சென்னை மணப்பாக்கத்தில் உணவகம் தொடங்கு வதற்கான பணிகள் நடந்துகொண்டி ருக்கின்றன. போதுமான அளவு சாப்பாடு, ஆவாரம்பூ முருங்கை வகை சாம்பார், கொள்ளு பிரண்டை துவையல், பிரண்டை சுண்டை வற்றல் குழம்பு, இஞ்சி மோர் எல்லாம் சேர்த்து 20 ரூபாய்க்கு கொடுக்க இருக்கிறேன். அதுபோக, இயற்கைச் சிற்றுண்டிகள், இதமான சூப் வகைகள் எல்லாமே மலிவுவிலையில் கிடைக்கும்'' என்கிறார் உற்சாகமாக.

-மனோசௌந்தர்

அடாவடி சப்-கலெக்டர்! அசராத மக்கள் பிரதிநிதிகள்!

dd

கன்னியாகுமரி மாவட் டம் பத்மனாபபுரம் சப்- கலெக்டரான சரண்யாஅரி மீது ஏக கடுப்பில் இருக்கின்றனர் பொதுமக்கள். அவர்களின் போராட்டத்தை லோக்கல் போலீஸ் மிரட்டி விரட்ட, பொதுமக்களுக்கு ஆதரவாக ஆகஸ்ட் 20-ந் தேதி பேச்சிப் பாறையில் களமிறங்கினார்கள் மக்கள் பிரதிநிதிகள்.

இதில் எம்.பி. வசந்த குமார், எம்.எல்.ஏ.க்கள் மனோ தங்கராஜ், சுரேஷ்ராஜன், ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஸ் குமார் உள்ளிட்ட 450 பேர்மீது வழக்குப்பதிவு செய்தனர் குலசேகரம் போலீ சார். செப்டம்பர் 13-ந்தேதி தக்க லையில் சப்- கலெக்டர் சரண்யா வின் அலுவல கத்தை முற்றுகை யிட முயன்றதாக, 413 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டது. அடுத்ததாக போஸ்டர் ஒட்டியது, பேஸ்புக்கில் பதிவிட்டவர்களையும் விட்டுவைக்கவில்லை.

திற்பரப்பு அருவியின் மேல்பக்கத் தில் வில்லுக்குறி கூட்டுக்குடிநீர் திட் டத்தால், கோடைகாலங்களில் ஏற்கனவே தண்ணீர்ப்பிரச்சனை வாட்டி வதைக்கிறது.

அப்படி இருக்கையில், அழகியபாண்டிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக திற்பரப் பில் கிணறு அமைக்க திட்ட மிட்டிருக்கிறார் சப்-கலெக்டர் சரண்யா அரி.

நீர்நிலை ஆக்கிரமிப்பு களை அகற்றுவ தாகக்கூறி, ஜீரோ பாயிண் டில் உள்ள 52 வீடுகளை கால அவகாசம் கொடுக்காமல் இடித்துத்தள்ளி, அந்தக் குடும்பங் களை நிர்கதியாக்கினார். பேச்சிப்பாறையில் பல ஆண்டு களாக வசித்துவரும் மக்களின் நிலத்தைப் பறித்து, வெளி மாநிலத்தில் இருந்துவந்த ரப்பர்தோட்டத் தொழிலாளர் களுக்கு பட்டா வழங்கியிருக் கிறார். இவையெல்லாம் சரண்யா அரி மீதான குற்றச்சாட்டுகள்.

""சப்-கலெக்டராக சரண்யா அரி பதவியேற்றதில் இருந்தே, மக்கள்விரோத செயல்களில்தான் ஈடுபட்டு வருகிறார். ஆளும் கட்சியினருக்கும், அதிகார வர்க்கத்துக்குமே பணிவைக் காட்டி, மக்களை வஞ்சிக்கிறார்'' என்கிறார்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள்.

சப்-கலெக்டர் சரண்யா அரியோ, ""அரசு மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுகளை மதித்துதான் கடமையை நிறைவேற்றுகிறேன்'' என்று தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். மக்கள் பிரதிநிதி களோ "போராட்டம் தொடரும்' என்கிறார்கள்.

-மணிகண்டன்

புகார் கொடுத்தவருக்கே மிரட்டல்!

dss

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ளது குளந்திரான்பட்டு. இந்தக் கிராமத்தில் சர்வே எண் 244 ல் சுமார் 10 ஏக்கர் பரப்பளவுள்ள வெட்டுக்குளத்தைக் காணவில்லை. அரசாணை 540-ன்படி அந்தக் குளத்தை மீட்டுத்தாருங்கள் என 2017-ல் அரசு அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தார் எழுத்தாளர் துரைகுணா.

எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டாத நிலையில், நீதிமன்றத்தை நாடினார். வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு, வெட்டுக்குளத்தை மீட்க துணிச்சலான அதிகாரிகள் தேவை என்று துண்டறிக்கை விநியோகித்தார் துரைகுணா. இதையடுத்து, வி.ஏ.ஓ. கொடுத்த புகாரின்பேரில், துரைகுணாவை கைது செய்தது கறம்பக்குடி காவல்துறை. இதற் கிடையே சர்வேஎண் 244 முழுமையாக அளக்கப்பட்டு, வெட்டுக்குளம் ஆக்கிரமிப்புக் குள்ளானது கண்டறியப்பட்டது. அதில் நெல், கடலை, தென்னை பயிரிட்டிருந்த விவசாயிகள், ‘முறைப்படி விலைகொடுத்துதான் நிலத்தை வாங்கினோம். இருப்பினும், அறுவடை முடிந்ததும் நிலத்தை ஒப்படைக்கிறோம்’ என்று தெரிவித்தனர். 2 மாதகாலம் அவகாசம் கொடுத்த அதிகாரிகள், அடுத்தநாள் அதிகாலையே வந்து விவசாய நிலத்தை விவசாயிகள் முன்னிலையிலேயே அழித்தொழித்தனர்.

இந்நிலையில், நிபந்தனை பிணையில் வெளிவந்திருக்கும் துரைகுணாவுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரைச் சந்தித்தபோது, ""அப்பாவி விவசாயிகளிடம் நிலத்தை ஏமாற்றி விற்றவர்கள், இடைத் தரகர்கள், அனுமதியளித்த அதிகாரிகள் என யார்மீதும் நடவடிக்கை இல்லை. இதைத் தட்டிக்கேட்பதால் ஊரில் தொழிலதிபர்கள் சிலர் என்மீது கடுங்கோபத்தில் உள்ளனர். குள ஆக்கிரமிப்புக்குக் காரணமான அனைவரின்மீதும் வழக்குத்தொடர இருக்கிறேன். ஆனால், அதற்குள் குளித்தலை சம்பவம்போல் எனக்கும் ஆபத்து வரலாம்'' என்றார் அச்சம்கலந்த குரலில்.

-இரா.பகத்சிங்

nkn270919
இதையும் படியுங்கள்
Subscribe