Skip to main content

சிக்னல்!

கடலுக்கு வெண்ணெய், சலத்திற்கு சுண்ணாம்பா?

signal

கடலூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு 4 கோடியே 20 லட்ச ரூபாய் செலவில் நவீன சி.டி.ஸ்கேன் மெஷின், அல்ட்ரா சவுண்ட் சிஸ்டம், மொபைல் டிஜிட்டல் ரேடியோகிராபி, மார்பக புற்றுநோய் அறியும் மோனோகிராம் கருவி ஆகியவற்றை சாம்சங் நிறுவனம் வழங்கியது. கடந்த 14-04-18 அன்று மாவட்ட ஆட் சியர் தலைமையில் அமைச்சர் சம்பத் இவற்றின் பயன்பாட் டைத் தொடங்கிவைத் தார். இதில்தான் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

கடலூர், சேலம், திருச்சி, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் போலவே ஜெயங்கொண்டம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், தொழுதூர் வருகின்ற மாநில நெடுஞ்சாலைகளிலும் விபத்துகள் ஏற்படுகின்றன.

இவ்விபத்துகளில் காயமடைவோரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்கின்றனர். அங்கே சி.டி.ஸ்கேன் போன்ற முக்கியமான உபகரணங்கள் இல்லை. முதலுதவி செய்து கடலூர், சிதம்பரம், முண்டியம்பாக்கம், ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு அனுப்புகின்றனர். அங்கே போய்ச் சேரும் முன்பே பலர் இறந்துவிடுகின்றனர்.

""வசதியுள்ள ஆஸ்பிடல்களுக்கு மறுபடி, மறுபடி உப கரணங்களைக் கொடுக்கின்றனர். கடலூர் மருத்துவமனை யில் ஏற்கனவே உள்ளன. அவற்றை விருத்தாசலம் மருத்துவமனைக்குக் கொடுத்திருக்கலாமே? சிலமாதம் முன்பு சம்பத் ஐ.ஏ.எஸ். தலைமையில் மத்திய ஆய்வுக் குழு வந்தது. ஆய்வு செய்துவிட்டு, "அதிநவீன உபகரணங்கள் விருத்தாசலம் மருத்துவமனைக்கு வேண்டும், பெற்றுத்தர முயற்சிப்போம்' என்று உறுதியளித்துவிட்டுச் சென்றது. ஆனால் இப்போது... கடலூருக்கு கிடைத்திருக்கிறது. விருத்தாசலத்தை வஞ்சித்துவிட்டார்கள். எந்தப் பகுதிக்குத் தேவை என்பதைக்கூட கவனிக்காமல் அரசியல் செய்கிறார்கள்'' ரொம்பவே வருத்தப்பட்டார் பெயர் கூறவிரும்பாத ஒரு டாக்டர்.

-சுந்தரபாண்டியன்

கட்சித்தலைமைக்கே கறுப்புக் கொடி!

signal

"எம்.பி. தேர்தலுக்குத் தயாராக வேண்டும், கோஷ்டி களை ஒருங்கிணைத்து அர வணைத்து கட்சியைப் பலப் படுத்துங்கள்' என்று காங்கிரசின் அகில இந்தியத் தலைமை, மாநிலத் தலைவர் திருநாவுக்கரசருக்கு உத்தர விட்டது.

முதலில் நெல்லை மாவட்ட கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க முடிவு செய்த திருநாவுக்கரசர், ""20-04-18 அன்று வருகிறேன். செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்'' -நெல்லை மாநகர மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியனுக்கு தகவல் அனுப்பினார்.

இதை அறிந்த மாநகரத் துணைத்தலைவர் வேணு கோபாலும், முன்பு திருநாவுக் கரசரால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட தனுஷ்கோடி ஆதித்தனின் ஆதரவாளர் களும் இணைந்து, ""நெல்லை வரும் திருநாவுக்கரசரை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவ தோடு கொடும்பாவியும் எரிப் போம்'' என்று அறிவித்தார் கள்.

""முன்பும் ஒருமுறை இதையெல்லாம் செய்ய முயன்றீர்கள். நான் வேறு பாதையில் வரவேண்டியதாகி விட்டது. இனி கொடும்பாவி, கறுப்புக்கொடியெல்லாம் வேண்டாம். உங்கள் ஆதர வாளர்கள் மீதான சஸ் பெண்ட்டுகளை செயல்வீரர் கள் கூட்டத்தில் நான் வாபஸ் வாங்கிவிடுகிறேன்'' என்று தனுஷ்கோடி ஆதித்தனுக்கு தகவல் சொன்னாராம் திரு நாவுக்கரசர்.

கறுப்புக்கொடி, கொடும் பாவித் திட்டத்தைக் கை விட்டது அந்தக் கோஷ்டி.

20-04-18 அன்று செயல்வீரர்கள் கூட்டத் திற்கு வந்த திருநாவுக்கரசர் எதையெதையோ பேசி னாராம்... கடைசிவரை அந்த ஏழுபேர் சஸ்பெண்ட் விவ காரத்தை தொட்டுக்கூடப் பார்க்காமல் கிளம்பிவிட்டார்.

ஆதித்தன் கோஷ்டி அக்னியாய் கொதித்துக் கொண்டிருக்கிறது.

-பரமசிவன்

அமைச்சர் சொன்ன பஸ் அடுத்த வருஷம் வருமாம்!

signal

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தரேவு, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தையன் கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி, ஆத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து பன்றிமலை ஆடலூர் மலைகளில் உள்ள தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு மினி பஸ்களில்தான் காலையில் சென்று மாலையில் திரும்புவார்கள்.

16-04-18 அன்று 120 கூலித்தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு பன்றிமலையில் இருந்து இறங்கிய மினிபஸ் பிரேக் பிடிக்காமல் ரெட்டிப்பட்டி அருகே தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந் தது. வேளாங்கண்ணி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். எழுபதுக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் களுக்கு உதவி செய்வதற்காகவும், ஆறுதல் கூறுவதற்காகவும் முன்னாள் அமைச்சர் தி.மு.க. ஐ.பெரியசாமியும், இந்நாள் அமைச்சர் அ.தி.மு.க. திண்டுக்கல் சீனிவாசனும் வந்தனர். இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

""மலைப்பகுதிகளுக்குப் போறது கண்டிஷனா இருக்க வேண்டாமா? நல்ல பஸ்ஸா ஒண்ணாவது விடுங்க'' என்றார் ஐ.பெரியசாமி.

""நாளையிலிருந்து இரண்டு புது பஸ்களை விடச்சொல் றேண்ணே...'' என்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மக்கள் முன்னிலையில் உறுதியளித்தார் இந்நாள் அமைச்சர்.

அடுத்த ஐந்தாம்நாள், ""கூலித்தொழிலாளிகளுக்காக இரண்டு புதிய மினி பஸ் இயக்கப் போவதாக உறுதியளித்தீர்களே... இன்னும் விடவில்லையே?'' அமைச்சர் சீனிவாசனிடம் கேட்டோம்.

""மண்டல பொதுமேலாளருக்கு சொல்லிட்டேன். இந்நேரம் விட்டிருப்பார், போய் பாருங்கள்'' என்றார் அமைச்சர். மண்டலப் பொதுமேலாளர் பாஸ்கரனைச் சென்று சந்தித்தோம்...

""அமைச்சர் சொன்னால் உடனே விடமுடியுமா? அடுத்த வருஷம் இந்த மண்டலத்துக்கு புது மினி பஸ் வருதாம். வந்தால் விடலாம். '' தாராளமாகச் சொன்னார் பாஸ்கரன்.

-சக்தி
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்