Advertisment

தலை குனிய வைக்கும் அரிவாள் கலாச்சாரம்! -வெட்டப்பட்ட பள்ளி மாணவன்!

ss

ந்து நாட்கள் விடுமுறை, சித்திரை ஆண்டுப் பிறப்பிற்குப் பின் ஏப்-16 அன்று பள்ளிகள் திறக்கப்பட் டன. நெல்லையின் பாளை வ.உ.சி. மைதானம் பக்கமுள்ள அந்த தனியார் மெட்ரிக் பள்ளியில் பாளை, மேலப்பாளையம் கே.டி.சி. நகர் சுற்றுப்பட்டு கிராமப் பகுதிகளின் மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

அன்றைய தினம் அப்பள்ளி யில் வகுப்புகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. மதியம் நெருங்கு கிற வேளையில் 8-ஆம் வகுப்பிலிருக் கும் மாணவர்களுக்கு சமூக அறி வியல் பாடங்களை எடுத்துக்கொண் டிருந்தார் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆசிரியை ரேவதி.

Advertisment

ss

வகுப்பு முடியப்போகும் நேரம் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக் கிடையே திடீரென வாக்குவாத மேற்பட்டிருக்கிறது. ஒரு மாணவர் தனது பேக்கில் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவரின் தோள்பட்டை, கழுத்து, முதுகுப் பகுதியில் மாறி, மாறி வெட்ட... வகுப்பு மாணவர்களிடையே கூச்சல் குழப்பம். வெட்டுப்பட்ட மாணவன் ரத்தம் பீறிட கதறிக் கொண்டிருக்க, வகுப்பு முடிந்து வெளியே கிளம்பிய ஆசிரியை ரேவதி அலறல் சத்தம் கேட்டு பதற்றமாகத் திரும்பியவர், ஓடிப் போய் அரிவாளும் கையுமாக நின்ற மாணவனைத் தடுத்திருக்கிறார். அவர்மீது கோபமாகத் திரும்பிய மாணவன் ஆசிரியையும் இடது கையில் வெட்டியிருக்கிறான்.

Advertisment

இதையடுத்து பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் திரண்டுவந்து காயமடைந்த மாணவனை மீட்டு அந்தப் பகுதி யிலுள்ள ssதனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த் துள்ளனர். காயம்பட்ட ஆசிரியை ரேவதியும் அங்கே அனுமதிக் கப்பட்டிருக்கிறார். வெட்டிய 13 வயதே ஆன 8-ஆம் வகுப்பு மாணவனோ கொஞ்சம்கூடப் பதற்றமில்லாமல் அருகிலுள்ள பாளை காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறான். இச்சம்பவத்தால் பாளையே பதட்

ந்து நாட்கள் விடுமுறை, சித்திரை ஆண்டுப் பிறப்பிற்குப் பின் ஏப்-16 அன்று பள்ளிகள் திறக்கப்பட் டன. நெல்லையின் பாளை வ.உ.சி. மைதானம் பக்கமுள்ள அந்த தனியார் மெட்ரிக் பள்ளியில் பாளை, மேலப்பாளையம் கே.டி.சி. நகர் சுற்றுப்பட்டு கிராமப் பகுதிகளின் மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

அன்றைய தினம் அப்பள்ளி யில் வகுப்புகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. மதியம் நெருங்கு கிற வேளையில் 8-ஆம் வகுப்பிலிருக் கும் மாணவர்களுக்கு சமூக அறி வியல் பாடங்களை எடுத்துக்கொண் டிருந்தார் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆசிரியை ரேவதி.

Advertisment

ss

வகுப்பு முடியப்போகும் நேரம் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக் கிடையே திடீரென வாக்குவாத மேற்பட்டிருக்கிறது. ஒரு மாணவர் தனது பேக்கில் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவரின் தோள்பட்டை, கழுத்து, முதுகுப் பகுதியில் மாறி, மாறி வெட்ட... வகுப்பு மாணவர்களிடையே கூச்சல் குழப்பம். வெட்டுப்பட்ட மாணவன் ரத்தம் பீறிட கதறிக் கொண்டிருக்க, வகுப்பு முடிந்து வெளியே கிளம்பிய ஆசிரியை ரேவதி அலறல் சத்தம் கேட்டு பதற்றமாகத் திரும்பியவர், ஓடிப் போய் அரிவாளும் கையுமாக நின்ற மாணவனைத் தடுத்திருக்கிறார். அவர்மீது கோபமாகத் திரும்பிய மாணவன் ஆசிரியையும் இடது கையில் வெட்டியிருக்கிறான்.

Advertisment

இதையடுத்து பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் திரண்டுவந்து காயமடைந்த மாணவனை மீட்டு அந்தப் பகுதி யிலுள்ள ssதனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த் துள்ளனர். காயம்பட்ட ஆசிரியை ரேவதியும் அங்கே அனுமதிக் கப்பட்டிருக்கிறார். வெட்டிய 13 வயதே ஆன 8-ஆம் வகுப்பு மாணவனோ கொஞ்சம்கூடப் பதற்றமில்லாமல் அருகிலுள்ள பாளை காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறான். இச்சம்பவத்தால் பாளையே பதட்டப்பட்டுக் கொண்டிருக்க சம்பவ இடம் வந்த மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பள்ளியிலிருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

அதில் வெட்டுப்பட்ட 8-ஆம் வகுப்பு மாணவன் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன். அவனை வெட்டிய சக மாணவன் பாளையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவன் என தெரியவந்திருக்கிறது.

மேலப்பாளையம் மாணவனும், கிருஷ்ணாபுரம் மாணவனும் வெவ்வேறு சமூகம் சார்ந்தவர்கள். என்றாலும் வகுப்பில் இருவரும் ஒன்றாகவே அமர்ந்திருப்பார்களாம். கடந்த வாரம் நடந்த பரீட்சையின்போது கிருஷ்ணாபுரம் மாணவன் அவனிடம் பென்சில், அழிரப்பர் கேட்க, மறுத்திருக் கிறான் மேலப்பாளையம் மாணவன். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம், முறைப்புகள். இருவரும் சண்டையிட்டிருக்கின்றனர். இதை யறிந்த வகுப்பு ஆசிரியை அவர்கள் இருவரையும் தனித்தனியே அமர வைத்திருக்கிறார். ஆனாலும் இருவரும் ஒருவருக்கொருவர் முறைத்தபடி இருந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே கிருஷ்ணாபுர மாணவன் தனது தாட்டியமான கெத்தால் மாணவர்களை மிரட்டியிருக்கிறான். ஏப் 15 அன்று பள்ளியின் கடைசி நாள். முன்னேற்பாட்டுடன் கிராமத்தி லிருந்து கிளம்பும்போதே அவன் தன் நோட்டில் அரிவாளை மறைத்து பேக்கில் வைத்துக்கொண்டு வந்தவன், அரிவாள் வெட்டுச் சம்பவத்தை நடத்தியிருக்கிறான். இதில் தடுக்கவந்த ஆசிரியை கூச்சலிட்டு ஓடிவந்தபோது அவனது குறி ஆசிரி யை மீது திரும்பியது. இல்லையென்றால் அவன் அந்த மாணவனைத் தீர்த்திருப்பான் என்கிறார்கள்.

கிருஷ்ணாபுரம் மாணவன் எப்போதுமே சக மாணவர்கள் தன்னைக் கண்டு ஒதுங்கி நிற்க வேண்டுமென்ற மப்பிலிருப்பவனாம். யாருக்கும் கட்டுப்படாத விடலை என்றும் சொல்கிறார்கள். போலீசாரின் விசாரணையில்கூட, இன்ஸ்டாகிராம், யூடியுப் பார்த்துத்தான் இவற்றைத் தெரிந்துகொண்டேன் எனத் தெரிவித்திருக்கிறான்.

இந்த சம்பவத்திற்கு பென்சில் பிரச்சினை ஒரு காரணமல்ல என்று சொல்லப்பட்டாலும், வெட்டுப்பட்ட மாணவனின் பெற்றோரும், "பென்சில் விவகாரத்தை நம்ப முடியவில்லை. அவன் வீட்டிலிருந்து கிளம்புகிறபோதே திட்ட மிட்டு ஆயுதத்தோடு வருமளவுக்கு பிரச்சினை முற்றியுள்ளது. வேறு ஏதோ ஒரு பிரச்சினையிருக்கு. அதைப் போலீசார் தீவிரமாக விசாரிக்கவேண்டும்''’ என்கிறார்கள்.

ss

நாம் உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது,

"அந்த கிருஷ்ணாபுரம் மாணவன், தான் இன்ஸ்டா பதிவு பார்த்துத்தான் இப்படிச் செய் தேன் என்று விசாரணையில் உள்ளதைக் கொட்டி யிருக்கிறான். இதற்கு அடிப்படையே ஒரு குறிப் பிட்ட தென்மாவட்ட ரவுடிகள் குரூப் தங்களுக்குப் பிறகு தங்களின் ஹீரோயிசத்தை அடுத்த இளம் தலைமுறையினருக்குக் கடத்துகிறது, தயார்படுத்து கிறது. அதன் வெளிப்பாடுதான் மாணவனின் இந்தச் சம்பவம். தான் எத்தகைய சம்பவத்தில் ஈடுபடுகிறோம் என்பதைத் தெரியாமலே அவன் இதற்கு ஆட்பட்டிருக்கிறான். காரணம் மற்றவர்கள் மத்தியில், தான் ஹீரோவாகணும்... அவர்கள் மருளும்படியாக இருக்கவேண்டும்'' என்ற கெத்து.

அண்மையில் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் வந்த மாணவன் வெட்டப்பட்டது, நீதிமன்றம் அருகில் செட்டிகுளம் கவுன்சிலர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட பயங்கரம், நாங்குநேரி மாணவனுக்கு விழுந்த அரிவாள் வெட்டுக்கள், கே.டி.சி. நகரின் மூன்றடைப்பின் முத்துமனோ கரின் ஆதரவாளரான தீபக் பாண்டி யனை வெட்டிப் போட்ட சம்பவங் களில் எல்லாம் இளம் சிறார்கள் பயன்படுத்தப்பட்டு கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் நடந்த கே.டி.சி. நகர் சம்பவத்தில் நவீன், லெப்ட் முருகன் உள்ளிட்ட நெல்லையின் தென்பக்கப் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் கைதுசெய்யப்பட் டார்கள். இதில் ரவுடி நவீன் கடந்த வருடமே தீபக் பாண்டியனின் கொலைக்குச் சில நாட்களுக்கு முன்பாக, "நாங்கள்தான் தென்மாவட்டத்தின் முதல்தர ரவுடி. எங்களை விட்டால் வேறு யாருமில்லை' என்று தெனாவெட்டாகவே நெல்லை எஸ்.பி.க்கு அனுப்பிய ஆடியோவில் சவால் விட்டிருக்கிறான்.

இவர்களின் தரப்புகளே அண்மையில் மேலப் பாளையம் செய்யது தமீம், நெல்லை டவுண் முத்த வல்லி ஜாகிர் உசேன் இருவரின் கொலைச் சம்பவத் தில் தொழில்முறைக் கொலையாளிகளாகப் பயன் படுத்தப்பட்டு வழக்கிலிருந்து தப்பியிருக்கிறார்கள்.

நவீன் மீது 19 கொலை வழக்குகள், அவன் கூட்டாளி லெப்ட் முருகன் மீதும் பல வழக்குகள். இவர்கள் தமிழகம் முழுவதிலும் தொழில்முறை கூலிக் கொலையாளியாகவும் செயல்படுபவர்கள். கடந்த வருடம் சென்னையில் நடந்த பி.எஸ்.பி. தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில்கூட நவீன், கூட்டாளியாகச் செயல்பட்டுக் கைதானவன்.

தாங்கள் சார்ந்த சமூகத்தின் காட்ஃபாதர் களாக தங்களைக் காட்டிக்கொள்கிற இந்த கேங்க், ‘நாம், கட்டி வை என்றால் வெட்டிவருகிற வழியில் வந்தவர்கள், ஆண்ட பரம்பரையைச் சார்ந்தவர்கள்’ என்றும் பல்வேறுவிதமாக இளரத்தங்களைச் சூடேற்றுகிற ஆடியோ, வீடியோ பதிவுகளை அவர்கள் தரப்பின் இன்ஸ்டா, மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். இவற்றை ஃபாலோ செய்கிற இளசுகள், அரிவாளைப் பிடித்தால் பலர் நமக்கு பயப்படுவர், அடிமையாவர் என்ற மயக்கத்தில் அவர்கள் தங்களையும் அறியா மல் சிக்கிவிடுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் தற்போது பாளை பள்ளிச் சம்பவம். போலீஸ் இதை திறமையாக ஹேண்டில் செய்தால் உண்மை நிலவரம் வெளியே வரும்''’என்கிறார்.

"மேலப்பாளையம் அரசின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. இப்ப மாணவன் சம்பவத்தில் பென்சில் விவகாரம் ஒரு பிரச்சினையில்ல. பின்னால வேறு விஷயமிருக்கு. அண்மையில மேலப்பாளையத்தில் நடந்த செய்யது தமீம் கொலை, டவுனில் முத்தவல்லி ஜாகீர் உசேன் கொலை ரெண்டுலயும் முறையான விசாரணை வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவது அவுகளுக்குப் பிடிக்கல. மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்தின் பின்னணியையும் தீவிரமா விசாரிச்சு அதுல மூளையா செயல்பட்டவுகள அடையாளம் கண்டு போலீஸ் கைதுபண்ணனும். இந்தக் கோரிக்கையைத்தான் நாங்க நெல்லை காவல்துறை அதிகாரிககிட்ட வைச்சிருக்கோம்''’என்று நம்மிடம் சொன்னார் மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவரான ரசூல்.

சி.பி.எம்.மின் நெல்லை மாவட்டச் செயலாளரான ஸ்ரீராமோ, “"தென்மாவட்டத்தில் நடந்த கொலைகளில் ஒன்றிரண்டுதான் தனிப்பகை, நிலம் சார்ந்தவை. மற்றவை அனைத்தும் சாதி மோதல்களின் விளைவே. இதில் குறிப்பாக கடந்த வருடம் நடந்த கொலைகளில் 48 இளம் சிறார்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று நெல்லை மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனே பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாவில் பரப்பப்படுகிற ஒரு தரப்புகளின் சூடேற்றுகிற பதிவுகளே இப்போதைய இளஞ்சிறார்கள் அடிமையாவதற்கு காரணம். இந்த வழியில்தான் தற்போது இளம் தலைமுறையினர் உருவாக்கப் படுகிறார்கள். இதுபோன்றவை குறித்து நீதிபதி, சந்துரு கமிட்டியே விரிவான அறிக்கையை அரசுக்குக் கொடுத்திருக்கிறது. அதனை அமல்படுத்தவேண்டும். அதுதான் தீர்வு''’என்றார்.

அரசு இரும்புக்கரத்தை காட்ட வேண்டிய தருணமிது. இச்சம்பவத்தையடுத்து, பள்ளிகளில் மாணவர்கள் "பேக்'கை சோதனை செய்தே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

நாம் எல்லோரும் வெட்கி தலைகுனிய வேண் டிய சம்பவம் இது.

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்

nkn190425
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe