வசர எண் 100க்கு வந்த அழைப்பின் பேரில், சம்பவ இடத்திற்கு விசாரிக்க சென்ற நிலையில்... வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர். 

"குடிமங்கலம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட சிக்கனூத்து கிராமத்தில் உள்ள தோட்டத்தில் நடந்த அடிதடி தகராறில்  ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொள்ளுங்கள்'' என திருப்பூர் மாவட்ட காவல்துறையிடமிருந்து ரோந்து போலீஸாருக்கு தகவல் வந்தது. அப்போது ரோந்தில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலு, ஓட்டுநர் (ஆத டஈ 1942)அழகுராஜுவுடன் சம்பவ இடமான அந்த தோட்டத்திற்கு சென்றனர். 

கண்ட்ரோல் ரூமிலிருந்து தகவல் வந்தது செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு. அங்கு போலீஸ் பார்ட்டிகளான சண்முகவேலுவும், அழகுராஜூவும் சென்றது 11.10க்கு. அப்பொழுதும் அங்கு அடிதடி நடந்துகொண்டிருக்க... காயத்தோடு இருந்த ஒருவரை அருகில் தக்க வைத்துக்கொண்டு ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்துள்ளார் எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல். அதே வேளையில் காயம்பட்டவனையும், இன்னொருவனையும் நிற்கவைத்து புகைப்படம் எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு ரிப்போர்ட் செய்த வேளையில், மறைந்திருந்த ஒருவன் எஸ்.எஸ்.ஐயின் பின் மண்டையில் அரிவாளால் பிளக்க, கழுத்திலும் ஆழமான வெட்டு. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காயம்பட்டவ னும், இன்னொருவனும் சேர்ந்து மூவருமாக கொலைவெறியாட்டம் ஆடினர். இதனைக் கண்டு பயந்து அங்கிருந்து தப்பித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தகவல் கூறியிருக்கின்றார் ஓட்டுநர் அழகுராஜ். விஷயம் கேள்விப்பட்டு நாங்க எல்லாம் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கும்போது எஸ்.எஸ்.ஐ.யின் உயிரற்ற உடல்தான் கிடந்தது'' என்றார் குடிமங்கல போலீஸ் ஒருவர். சம்பவம் நடைபெற்ற தென்னந்தோப்பு, மடத்துக்குளம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமானது என்பதால், இந்த இடத்தில் கொலை நடந்தது என எளிதான அடையாளத்துடன் தகவலை பரப்பினர் நெட்டிசன்கள். 

Advertisment

si1

"திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவர் மகன்களான தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் இந்த தென்னந்தோப்பில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்கின்றனர். மூர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிவந்த நிலையில், கடந்த ஒரு மாதம் முன்புதான் அவரது மகன்கள் இங்கு வேலைக்கு வந்தனர்.  அனைவரது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களையும் காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளேன்'' என்றார் மடத்துக்குளம் எம்.எல்.ஏ. மகேந்திரன். 

இதேவேளையில், சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு மண்டல டி.ஐ.ஜி. சசிமோகன், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ்கிரீஷ் அசோக் ஆகியோர் சம்பவ இடத்தினை ஆராய்ந்து, விசாரணை மேற்கொண்ட நிலையில், உடுமலை டி.எஸ்.பி. நமச்சிவாயம் தலைமையில் 5 தனி படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேட உத்தரவிட்டனர்.

Advertisment

"சமீபகாலமாக எப்பொழுதும் இரவு நேரம் ஆனாலே போதும், போதையில் அப்பனும், மகன்களும் அடிக்கடி அடித்துக்கொள்வார்கள். ஆனால் சம்பவத்தன்று அந்த பக்கம் நான் போகும்போது அப்பா மூர்த்தியை முகத்தை சிதைத்து அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர் தங்கபாண்டியும், இளையவனான மணிகண்டனும். நானும் வேணாம்டா என கத்திப் பார்த்தும் அவன்கள் அடிப்பதை விடவில்லை. அதனாலேயே 100க்கு போன் போட வேண்டியதாயிற்று. போலீஸ் வந்தவுடன் அந்த போதையில் எங்கோ ஓடிப்போய் மறைந்துகொண்டார்கள். மூர்த்திக்கும், தங்கப்பாண்டிக்கும் தலைக்கேறிய போதை. ஆனால் போலீஸ்ங்கிற பயத்திலேயே உறைஞ்சு நின்னுட்டானுக. சரி போலீஸ்தான் வந்துடுச்சே என என் காட்டுக்குப் போயிட்டேன். அதன் பின்னர்தான் தெரிஞ்சது எஸ்.எஸ்.ஐ. கொலையானது'' என்றார் அருகிலுள்ள தோட்டத்துக்காரர் ஒருவர்.

மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், "நேற்றிரவு 11 மணியளவில், குடிமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிக்கனூத்து கிராமத்திலுள்ள தோட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தை மகன் அடித்துக்கொள்வதாக தகவல் வந்ததுள்ளது. அதன் அடிப்படையில் நெடுஞ் சாலை  ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கொடுக்கப் பட்டு அவரும், காவலர் அழகுராஜாவும்  சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு மூர்த்தி என்பவர் அடிபட்ட நிலையில் அவரது மகன்கள் சண்டை போட்டுக்கொண்டு இருந் துள்ளனர். காயம்பட்ட மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக, அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து விட்டு  காத்திருந் தனர். அப்போது அவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் மற்றும் தோட்ட மேலாளர் ரங்கசாமி அவருடன் வந்த இரண்டு பேரை யும் தாக்க முயற்சித் துள்ளனர்.  இதனையடுத்து அனைவரும் ஓடும்போது சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்கிதனர். 

 விசாரணைக்குச்  சென்றவர்கள், திரும்பி வராததால், காவல் துறையினர் கேட்கும் போது, மேலாளர், காவலரை வெட்ட வந்தபோது தடுக்க முயற்சித்து ஓடியதாக தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வந்தபோது  தந்தை, மகன்கள் மூன்றுபேரும் தலைமறைவாகி விட்டனர்'' என்றார். திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின்போது உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தமிழக முதல்வர், 1 கோடி ரூபாய் நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

கடமைக்காக உயிரை விட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுவின் உடலை டி.ஜி.பி.  சங்கர் ஜுவாலே சுமந்து சென்றார்.