ஒரு காலத்தில் தமிழில் பிசியாக நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் தற்போது சரிவர வாய்ப்பு கிடைக்காததால் டோலிவுட், பாலி வுட் பக்கம் சென்று விட்டார். அங்கு பவன்கல்யாண், பிரபாஸ், பாலகிருஷ்ணா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவருகிறார். இருப்பினும், தான் முதலில் அறிமுகமான தமிழ் திரையுலகில் ஜொலிக்க வேண்டும் என நினைத்த ஸ்ருதி வண்டியை மீண்டும் கோலிவுட் பக்கம் திருப்பியுள்ளார்.
தமிழில் இழந்த தனது மார்க்கெட்டை மீண்டும் உயர்த்த ஸ்ருதிஹாசன் இந்த முறை ஹீரோயின் சப்ஜக்ட்டை கையில் எடுத்துள்ளாராம். "யாமிருக்க பயமேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டீகே இயக்கும் ஹீரோயினை மையப்படுத்திய புதிய படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் கமிட்டாகியுள்ளாராம். மேலும் இதற்கான கதையை இயக்குநர் கூறியபோது "நான் இந்த மாதிரி கதையில் நடித்ததே இல்லை, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது' என்று படத்திற்கு உடனே ஓ.கே.வும் சொல்லிவிட்டாராம். அடுத்த மாத தொடக்கத்தில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் இன்னிங்ஸில் முருகதாஸ்!
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் "கஜினி', "துப்பாக்கி', "கத்தி' உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத் தாலும், அவருக்கு முதன்முதலில் எண்ட்ரி கார்டு கொடுத்தவர் அஜித்தான். கடந்த 2001-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த "தீனா' படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமானார் ஏ.ஆர். முருகதாஸ். அதன்பிறகு விஜயகாந்த், விஜய், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி ஸ்டார் இயக்குநர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தார். ஆனால் கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ஒரு சில படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை என்பதால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மவுசு குறைந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. இதனால் ஒரு தரமான இரண்டாம் இன்னிங்ஸை தொடங்க திட்டமிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், தனது முதல் நாயகனான அஜித்தை மீண்டும் அணுகியுள்ளாராம். ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதையும் அஜித்துக்கு பிடித்துப்போக, விக்னேஷ் சிவன் படத்திற்கு பிறகான கால்ஷீட்டை அவருக்கு கொடுத்துள்ளாராம். இதனால் ஹேப்பி மோடுக்கு சென்ற ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் படத்திற்கான கதையை மேலும் மெருகேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளாராம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு அஜித்தை ஏ.ஆர். இயக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது.
கமலுடன் இணைவாரா மம்முட்டி!
"விக்ரம்' படத்தின் வெற்றிக் கொண்டாட் டத்தில் இருக்கும் கமல், அடுத்தாக பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பெரும் பொருட் செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் மல்டி ஸ்டார்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கதாபாத்திரத்திற்கான சிறந்த நடிகர்களை தேடும் பணி யில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதில் "விக்ரம்' படத்தில் நடித்த விஜய்சேதுபதி, பகத் பாசில் பெயரும் அடிபட்டு வருவதாக தகவல் கசிந்தது. ஆனால் அந்த கதாபாத்திரம் கமலுக்கு டஃப் கொடுக்கும் கதாபாத்திரம் என்பதால் கமலுக்கு இணையான நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்ட இயக்குநர், மம்முட்டியை தேர்வு செய்துள்ளா ராம். இப்படத்திற்கான கதையை கேட்ட மம்முட்டி எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறாராம். இதையடுத்து கமலிடமிருந்து மம்முட்டிக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும், எப்படியும் மம்முட்டி ஓ.கே. சொல்லிவிடுவார் என்றும் சினிமா வட்டாரங்கள் ஆருடம் சொல்கின்றன.
இசையமைப்பாளர் மிஷ்கின்!
இயக்குநர் மிஷ்கின் தனது தனித்துவமான படைப்புகள் மூலம் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார். படம் இயக்குவதை தாண்டி பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்த தளங்களில் நகரும் மிஷ்கின், அடுத்த தாக இசையமைப்பாளராக அறிமுக மாகவுள்ளாராம். மிஷ்கினின் சகோ தரரும், "சவரக்கத்தி' படத்தின் இயக்குநரு மான ஆதித்யா, "டெவில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விதார்த், பூர்ணா ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்தும் வருகிறார். தன்னுடைய படங்களின் பின்னணி இசைக்கே நிறைய இன்புட்ஸ் கொடுத்து இசையமைப்பாளர்களிடம் வேலைவாங்கும் அளவிற்கு இசை ஞானம் கொண்ட மிஷ்கின், "டெவில்' படத்திற்கு நான்கு பாடல்கள் இசையமைத்து கொடுத்துள்ளாராம். விரைவில் இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
-அருண்பிரகாஷ்