"ப்ரியமான வரின் பிள்ளைகளே...… பிறரிடத் தில் எப்போதும் அன்பு செலுத்துங் கள்' என்று எப் போதும் மாணவர் கள் மத்தியில் சொல் லிக் கொண்டிருக்கும், கோவை காந்திபுரத் தில் இருக்கும் புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி தாளா ளர் மரிய ஆண்டனி ராஜ்... இன்று கோவை மத்திய சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
அப்படி என்ன தான் செய்தார், அந்த 55 வயது பெருசு? மாணவி கள் சிலரிடம் கேட்டோம்...
""அண்ணா,… இந்த ஸ்கூல்ல 400 பேருக்கு மேல படிக்கிறோம். ஆண்டனி சார் எல்லோரிடமும் நல்லாதான் பேசுவாரு. அதற்கான காரணமே இப்போதான் தெரிய வந்திருக்கு. முந்தாநாளு... ஒன்பதாவது, பத்தாவது படிக்கிற அஞ்சு பொண்ணுங்களை ரூமுக்கு அழைச்சிருக்காரு ஆண்டனி சார். அவங்ககிட்ட ஆண்ட்ராய்டு போனைக் கொடுத்து, ஆப்ஸ்களைக் காணலைன்னு செக் பண்ணச் சொல்லியிருக்காரு.
ஆர்வமா வாங்கிப் பார்த்தவங்க, அதுல ஆபாச வெப்சைட் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியாகி.. அதை டேபிள்மேல வச்சிட்டு ஓடி வந்துட்டாங்க. வீட்டில் அழுதுக்கிட்டே பேரண்ட்ஸ்கிட்ட சொன்னதுக்கு அப்புறம்தான், இப்போ கைதாகி இருக்காரு''என்றனர் பரிதாபமாக.
பெற்றோர் தாக்கப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, மாநகர மத்திய பகுதி சட்டம்-ஒழுங்கு உதவிஆணையர் கார்த்திகேயன் தலைமையில், ரத்தினபுரி போலீசார் மரிய ஆண்டனிராஜைக் கைதுசெய்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரை விசாரித்த மகளிர் போலீசாரிடம் கேட்டோம்... ""அந்தாளு மனுஷனே இல்லை சார். அவனோட செல்போன் முழுக்க ஸ்கூல் புள் ளைங்க குனியறதையும், விளையாடும்போது ஓடி வர்றதையும் போட் டோவாகவும், வீடியோவாகவும் எடுத்து வச்சிருக்கான். அதுமட்டுமில் லாம, ஆறுமாசமா ஸ்கூல் பொண்ணுங்ககிட்ட ஆபாச வீடியோக் களைக் காட்டி, பாலியல் உணர்வுக்குத் தூண்டி இச்சைக்கு ஆளாக்கி யிருக்கான். இப்போ பாதிக்கப்பட்ட பொண்ணுங்கள்ல, ஒரு பொண் ணோட பேரண்ட்ஸ் கொடுத்த புகார்தான், இந்தக் காமக்கொடூரன் மேல போக்சோ சட்டம் பாயக் காரணமாகி இருக்கு'' என்றனர்.
மரிய ஆண்டனிராஜைக் கைதுசெய்யச் சொல்லி, போராட்டம் நடத்திய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ராதிகா, “""பள்ளிக் குழந்தைகளுக்கு "குட் டச்', "பேட் டச்' குறித்து பாடமெடுக்கணும்னு இதுபோன்ற பல சம்பவங்கள் நமக்கு உணர்த்திக்கிட்டே இருக்கு. இனியாவது பெற்றோர் கவனமா இருக்கணும்'' என்கிறார்.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கேட்டபோது, ""அரசு உதவிபெறும் பள்ளி என்பதால், நிர்வாகத்தில் நேரடியாக தலையிட முடியாது. தாளாளரை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்'' என்கிறார்கள்.
"தாய்-தந்தைக்குப் பிறகு பிள்ளைகள் மேல் கண்ணுங்கருத்துமாய் இருக்கவேண்டிய குரு ஸ்தானத்தில் இருப்பவர்களே ஈனச் செயல்களில் ஈடுபடுகிறார்களே' என்று குமுறுகிறார்கள் பெற்றோர்கள்.
-அருள்குமார்