Advertisment

மதுவுக்கு கடை... மாமிசத்திற்குத் தடை! லட்சத்தீவை வதைக்கும் சதிகார அதிகாரம்! - பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி

d

க்களை வதைப்பதில் இன்பம் காண்கின்ற மதவெறி பிடித்த மத்திய பா.ஜ.க. அரசு இப்பொழுது லட்சத்தீவு மக்களை துடிக்கவைத்து இன்பம் கண்டுகொண்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் துன்புறுத்துகின்ற மோடி அரசு, லட்சத்தீவு மக்களுக்கு கூடுதல் கொடுமைகளை இழைப்பதற்குக் காரணம் அத்தீவின் மக்கள்தொகையில் 96 விழுக்காட்டினருக்கு மேல் முஸ்லிம்கள் என்பதுதான்.

Advertisment

l

காய்கறி விளைச்சலில்லாத கடல் சூழ்ந்த லட்சத்தீவில் புலால் உணவுதான் மக்களின் முதன்மை உணவாகும். பள்ளிகளின் உணவுத் திட்டத்திலும் இறைச்சி இடம்பெறும். அங்கு அதைத்தவிர வேறு வழியில்லை. நம் ஊர் உணவுகளான கூட்டு, அவியல், பொரியல் எல்லாம் அம்மக்களுக்கு எளிதில் கிட்டாத ஆடம் பர உணவு. இறைச்சிதான் எளிதாகக் கிடைப்பது.

இந்நிலையில் பிப்ரவரி 21, 2021 அன்று, லட்சத்தீவில் மாட்டிறைச்சியை தடை செய்து சட்டம

க்களை வதைப்பதில் இன்பம் காண்கின்ற மதவெறி பிடித்த மத்திய பா.ஜ.க. அரசு இப்பொழுது லட்சத்தீவு மக்களை துடிக்கவைத்து இன்பம் கண்டுகொண்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் துன்புறுத்துகின்ற மோடி அரசு, லட்சத்தீவு மக்களுக்கு கூடுதல் கொடுமைகளை இழைப்பதற்குக் காரணம் அத்தீவின் மக்கள்தொகையில் 96 விழுக்காட்டினருக்கு மேல் முஸ்லிம்கள் என்பதுதான்.

Advertisment

l

காய்கறி விளைச்சலில்லாத கடல் சூழ்ந்த லட்சத்தீவில் புலால் உணவுதான் மக்களின் முதன்மை உணவாகும். பள்ளிகளின் உணவுத் திட்டத்திலும் இறைச்சி இடம்பெறும். அங்கு அதைத்தவிர வேறு வழியில்லை. நம் ஊர் உணவுகளான கூட்டு, அவியல், பொரியல் எல்லாம் அம்மக்களுக்கு எளிதில் கிட்டாத ஆடம் பர உணவு. இறைச்சிதான் எளிதாகக் கிடைப்பது.

இந்நிலையில் பிப்ரவரி 21, 2021 அன்று, லட்சத்தீவில் மாட்டிறைச்சியை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மதுவுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு மது பார்கள் இல்லாமல் இருந்தது. லட்சத் தீவின் அதிகாரியாக மத்திய அரசால் நியமிக்கப் பட்ட பிரபுல்கோடா பட்டேல் இந்த அக்கிரமங்களை அடாவடியாகச் செய்துவருகிறார். இவர் நரேந்திரமோடி, குஜராத் முதல்வராக இருந்த 2010-ஆம் ஆண்டு, அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

"ஓர் அதிகாரி தனது ஆளுகைக்குட்பட்ட மக்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி. பினாய்விஸ்வம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

l

தனிமனித உணவுரிமையைப் பறிக்கின்ற சட்டத்தைப் போடுகிற சங்பரிவார சதிகார அதிகாரி, தனிமனித சுதந்திரத்தைக் காப்பதற்காக மது குடிப்பகங்களுக்கு அனுமதி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

பிரபுல்கோடா பட்டேலின் அடாவடி களுக்கு எதிராக ‘"லட்சத்தீவைக் காப்போம்'’ (#Save lakshadeep)என்ற ஊடகப் பரப்புரை இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு மக்கள் கேரளத்தோடு பூர்வீக உறவுகொண்ட வர்கள். கேரளத்திலும் லட்சத்தீவில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் கிளம்பியுள்ளன. பிரபல நடிகர் பிரித்விராஜ், பா.ஜ.க. அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

லட்சத்தீவு தப்லீக் ஜமாஅத்தினர் வாயிலாகக் கிட்டியத் தகவல்களையும் அங்கு நடந்து வரும் அராஜகங்களையும் நம்மிடம் பிரத்யேகமாகத் தெரிவித்தார் திருச்சியைச் சேர்ந்த தப்லீக் ஊழியரான பொறியாளர் இல்யாஸ்.

65,000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட லட்சத்தீவில் 96% பேர் முஸ்லிம்கள். மேலும் 2021 ஜனவரிவரை இங்கு கொரோனா தொற்றே ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக இருந்த தினேஷ்வர் சர்மா கடந்த டிசம்பர் 4 அன்று திடீர் மரண மடைய, பிப்ரவரி 2021-ல் பிரபுல்கோடா பட்டேலை புதிய நிர்வாகியாக மத்திய மோடி அரசு நியமித்தது. இதுவரை ஐ.ஏ. எஸ். அதிகாரிகள் மட்டுமே வகித்துவந்த லட்சத்தீவு நிர்வாகப் பதவியில் முதன் முறையாக ஓர் பா.ஜ.க.காரரை உட்கார வைத்தது மூர்க்க மோடி அரசு.

பா.ஜ.க. ஆசாமி செய்த அருஞ்சாதனை 2021 ஜனவரி வரை கொரோனாவே இல்லாமலிருந்த லட்சத்தீவிற்கு கொரோனாவை இறக்குமதி செய்து தளர்வுகள் மூலம் பரப்பியதுதான். இப்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

d

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவு களின்படி லட்சத்தீவில் கொலை, கொள்ளை, குழந்தைக் கடத்தல் உள்ளிட்ட ஒரு குற்ற வழக்கும் பதி வாகவில்லை. பா.ஜ.க. ஆசாமி நிர்வாகியானவுடன், இத்தீவில் ‘குண்டர் சட்டத்தை’ அறிமுகப்படுத்தி யுள்ளார். யூனியன் பிரதேசங்களிலேயே பூரண மதுவிலக்கு நிலவிய ஒரே இடமாக லட்சத்தீவு இருந்தது. மதவெறி பிடித்த பா.ஜ.க.வின் ஆசாமியான பிரபுல்கோடா, மதுவுக்கு கதவு திறந்து விட்டுள்ளார்.

ஊதிய உயர்வு கேட்டு போராடிய செவிலியர் களைக் கைது செய்வது, முன்னறிவிப்போ விசார ணையோ இல்லாமல் அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது உள்ளிட்ட அராஜகங்களை பா.ஜ.க. பிரதி நிதி செய்துவருகிறார். அதற்கு ஒரே காரணம் மதவெறி.

முஸ்லிம்களை வதைப்பதற்காக அத்தீவின் முக்கிய உணவான மாட்டிறைச்சிக்குத் தடை, அத்தீவிலேயே இதுவரை இல்லாத மதுபானக்கூடங்களுக்கு அனுமதி. அப்பட்டமான இந்த அத்துமீறல் அராஜகங்களுக்கு எதிராக தேச மக்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

லட்சத்தீவைக் காத்திட முதலில் மதவெறி பிடித்த பிரபுல்கோடா பட்டேலை அங்கிருந்து மாற்றவேண்டும் என்பது மக்களின் உடனடி கோரிக்கையாக ஓங்கி நிற்கிறது.

nkn010621
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe