காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்கு சொந்தமான மீன்பிடிப் படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், கார்த்திகேயன், செந்தமிழ், பட்டினச்சேர்க்கையை சேர்ந்த மைவிழிநாதன், வெற்றிவேல், மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடியை சேர்ந்த நவந்து, வானகியை சேர்ந்த ராஜேந்திரன், ராம்கி, நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த சசிகுமார், நந்தகுமார், பாபு குமரன் ஆகிய 13 பேரும் ஜனவரி 26ஆம் தேதி, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 27ஆம் தேதி இரவு 9 மணியளவில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களது விசைப்படகுகளையும் அபகரித்தனர். இலங்கை கடற்படை நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில், செந்தமிழ், பாபு ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். மேலும் மூன்று பேருக்கு காயங்கள் ஏற்பட்டன.

sr

இந்த சம்பவம் தமிழகம், புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. புதுச்சேரி முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து டெல்லியிலுள்ள இலங்கை தூதரகத்தினரை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வரவழைத்து எதிர்ப்பினை பதிவுசெய்தனர். இலங்கை அரசோ, இலங்கை கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால்தான் துப் பாக்கி பிரயோகம் நடத்தியதாகக் குற்றம்சாட்டியது.

இதற்கிடையில், காயம்பட்ட மீனவர்களை மருத்துவமனையில் பார்த்துவிட்டு வந்த யாழ்ப் பாண நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், ”"சம்பவத்தின்போது, தடைசெய்யப்பட்ட வலைகளோடு வந்த இந்திய மீனவர்களை எங்கள் கடற்படையினர் கைது செய்யவே முயன்றுள்ளனர். அப்போது கடற்படையினரையே கடத்திக் கொண்டு இந்தியா செல்லமுயன்ற போதுதான் துப்பாக்கிச் சூடு நடந்தது. காயம்பட்ட மீனவர் களை குணப்படுத்தி இந்தியாவுக்கு பத்திரமாக அனுப்புவோம். ஆனால் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக் கப்படும்''’என்று கூறியுள்ளார். இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டை கண்டித்து காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 12ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத் தப் போராட்டத்தை நடத்திவருகின்றனர். வரும் வெள்ளிக்கிழமை குடும்ப அட்டை, ஆதார்கார்டு மற்றும் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைப்பதாகக் கூறியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களும் 18ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ பஞ்சாயத்தார் கூறுகையில், "மீன்பிடிக்க கடலுக்கு போகவே அச்சமாக இருக்கு. தமிழகம், காரைக்கால் மீனவர்களின் படகுன்னு தெரிந்தாலே மின்னல் வேகத்தில் தாக்கி கைது செய்துடுறாங்க. சில ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினாங்க. மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு கைது செய்வதையும், படகை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அதோடு அங்குள்ள கடற்கொள்ளையர்களோடும் சேர்ந்துகொண்டு எங்களைத் தாக்கினார்கள். தற்போது மீண்டும் துப்பாக்கிச்சூடு கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர். இனி நிம்மதியாக கடலுக்கு போக அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த செந்தமிழ் என்பவர் கால் முறிந்து கவலைக்கிடமாக இருக்கிறார். மணிகண்டன் என்ற மீனவர் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களை தமிழகத்துக்கு அழைத்துவந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் காரைக்கால் மாவட்டத்திலுள்ள 11 மீனவ கிராமங்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்''’என்றனர்.

ss

இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவரான ராஜேந்திர நாட்டார் கூறுகையில், "கடல் எல்லையைத் தாண்டுவதென்பது இயற்கையின் போக்கோடு சம்பந்தப்பட்டது. இயற்கையைத் தாண்டி மீறுகிறார்கள் என்றால் நமது கடற் படையினரிடம் புகாரளித்து நடவடிக்கை எடுக்கலாம். அதைவிட்டு துப்பாக்கிச்சூடு நடத்துவது எந்தவிதத்தில் சரியாக இருக்கும்? அராஜகத்தில் ஈடுபடும் இலங்கையை எச்சரிக்கை செய்யத் திராணியற்ற அரசாக மத்திய அரசு இருக்கிறது. குஜராத் மீனவர்களை பாகிஸ் தான்காரன் பிடித்துப்போனால் மட்டும் உடனே சென்று மீட்டு வருகிறது. தமிழக மீனவர்களை மட்டும் கண்டுகொள்வதில்லை''’என்கிறார்.

Advertisment

மீனவர் சங்க பிரதிநிதியும், சமூக செயல் பாட்டாளரும், மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினருமான முனைவர் ம.ரஜினி கூறுகையில், "விடுதலைப்புலிகள் இருக்கும்வரை தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் பெரிதாக நடக்கல. போர் முடிவிற்கு வந்த பிறகு தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது. தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடு சம்பவங்களைத் தடுக்க 2014 முதல் 2016 வரை நடந்த நான்கு கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு துப்பாக்கிச்சூட்டைக் குறைத்தபோதும், பொருளாதார ரீதியில் முடக்குவதற்காக தமிழக மீனவர்களின் வலைகளை நாசம் செய் வதிலும், படகுகளைப் பறிமுதல் செய்வதிலும் இலங்கை அரசு முனைப்பு காட்டுகிறது. தற்போது மீண்டும் துப்பாக்கிச்சூட்டை தொடங்கியுள்ளனர். தமிழக, காரைக்கால் மீனவர்களின் வாழ்வாதா ரத்தை காக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்றார்.

இந்நிலையில் ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட அனைத்து மீனவ சங்கத்தினர், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். மீனவர்கள் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.