கேரளவிலுள்ள கண்ணூர் அரசு மருத்துவமனையில் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண் இருந்த நிலையைப் பார்த்துவிட்டு, சிகிச்சையளித்த டாக்டர்கள் விசாரித்தபோது மூன்று நபர்கள் தன்னை கற்பழித்து விட்டதாகக் கூறினார். அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் உடனடியாக தலைச்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர் கேரள போலீசார். தமிழ்நாட்டின் திருத்தலமான பழனிக்கு அவரும் அவரது கணவரும் சென்றதாகவும், பழனியில் பேருந்து நிலையத்தில் இறங்கிச் சென்றுகொண்டிருந்தபோது கணவர் அருகிலிருந்த கடைக்கு பொருள் வாங்கச் சென்றிருக்கிறார். முன்பே அவர்களை நோட்டம் விட்டிருந்த மூன்று நபர்கள் மனைவியை கடத்திச்சென்று அருகிலிருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்தனர். தேடிவந்த கணவரை அந்தக் கும்பல் அடித்து விரட்டிவிட்டு இரவு முழுவதும் மதுபோதையில் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், காலையில் தங்கும் அறையிலிருந்து தப்பி வெளியே வந்து தனது கணவரை சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறியிருக்கிறார். இது குறித்து கணவருடன் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது அங்கிருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்து விரட்டி அடித்ததாகக் கூறினார்.
தலைச்சேரி போலீஸார் முதல்கட்டமாக வழக்குப் பதிவு செய்ததுடன் கேரள டி.ஜி.பி. அனில்காந்துக்கு தெரிவித்தனர். கேரள டி.ஜி.பி., தமிழக டி.ஜி.பி.யான சைலேந்திர பாபுவைத் தொடர்புகொண்டு நடந்த விஷயத்தை விவரிக்க, விஷயம் வெளி உலகத்திற்கு தெரிந்தது. டாக்டர் ராமதாஸ், கமலஹாசன் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் கேரள பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்திலுள்ள வழிபாட்டுத்தலங்கள் கடந்த இரண்டு மாதங்களாக பூட்டியிருந்தன. அப் போது கேரளாவின் கண்ணூர் அருகேயிருக்கும் தலைச்சேரியைச் சேர்ந்த தர்மராஜும் அவருடைய மனைவி தங்கம்மாளும் ரயில் மூலம் கடந்த 19-ஆம் தேதி பழனிக்கு வந்தனர். அடிவாரப் பகுதியிலுள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். ஊரடங்கால் தரிசனம் கிடையாது எனத் தெரியவந்து ஊர் திரும்புவதற்காக பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்து கொண்டிருந்தபோது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக தர்மராஜ் பெட்டிக்கடை பக்கம் ஒதுங்கியிருக்கிறார். அவர் களைப் பின்தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் தங்கம்மாளைக் கடத்திச் சென்று லாட்ஜில் வைத்து விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்தனர் என்பதுதான் குற்றச்சாட்டு.
பலாத்காரம் செய்தவர்களிடமிருந்து தப்பிய தங்கம்மாள் கணவனைத் தேடிப் பிடித்து அடிவார போலீசில் புகார் செய்தபோது புகாரை வாங்க மறுத்துவிட்டனராம். தங்கம்மாள் கேரள டாக்டரிடம் கூறிய தகவலின்பேரில் இந்த விஷயம் வெளியே தெரிந்தது. அதனடிப்ப டையில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா அதிரடியாக பழனிக்கு விசிட்டடித்து அவர்கள் தங்கிய லாட்ஜ், அதன் ஊழியர்கள், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்
இந்து முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளரான ஜெகன், "தெய்வ தரிசனத்துக்கு வந்த இடத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய நபர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள்மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். புனித ஸ்தலமான இந்த பழனியில் 50-க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள்தான் முறைப்படியான அனுமதி வாங்கிச் செயல்படுகிறார்கள். பெரும்பாலான தங்கும் விடுதிகள் அனுமதி வாங்காமல் செயல்பட்டு வருவ தோடு பாலியல் தொழிலுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தங்குமிடங்களை முறைப் படுத்தப்படுவதோடு, இத்தகைய அத்துமீறல்கள் நடக்காமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். முருகனை தரிசிக்க வரும் முருக பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நட வடிக்கை எடுக்கவேண்டும்''’என்றார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா இதுகுறித்து, "அந்த கேரளப் பெண்ணை கடத்தி கூட்டுப்பாலியல் செய்தது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்து இன்ஸ் பெக்டர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளி களைத் தேடிவருகிறோம்.. போலீஸ் ஸ்டேசன் உள்பட மற்ற பகுதிகளி லுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்து வருகிறோம். புகார் தெரிவித்த அந்த பெண் லாட்ஜை காலி செய்துவிட்டு சென்ற சில நாட் கள் கழித்து சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளரை தொலைபேசியில் மிரட்டிய தாக விடுதி உரிமையாளர் கூறினார். கேரளாவி லிருந்து வந்த அந்த தம்பதியினர் உண்மையிலே கணவன்- மனைவியா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்''’என்று கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக கேரள மாநிலம் கண்ணனூர் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களைத் தமிழக காவல்துறை பெற்றுள்ள நிலையில், “பழனிக்கு வந்த அவர்கள் தம்பதிகளே இல்லை. கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான எந்த தடயமும் மருத்துவ அறிக்கையில் இல்லை. பணம் பறிக்கும் நோக்கத்தில்தான் விடுதி உரிமையாளரை மிரட்டியுள்ளனர் என்று திண்டுக்கல் டி.ஐ.ஜி விஜயகுமாரி தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருமாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் ஒரு க்ரைம் த்ரில்லர் பாணியில் புலனாய்வை மேற்கொண் டுள்ளது காவல்துறை.