Advertisment

அதிர்ந்த பா.ஜ.க. அரசு! விரைவில் விசாரணை கமிஷன்!

ss

"கள்ளக்குறிச்சி சம்பவம் அனைத்து அரசியல் கட்சிகளிலும் அசைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பாதிப்புகள் ஆளுகின்ற மாநில அரசை மட்டுமல்ல... மத்தியில் ஆளும் பா.ஜ.க.விலும் பெரும் விளைவை உருவாக்கியுள்ளது' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Advertisment

ss

சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மரணமடைந்த மாணவி ஸ்ரீமதி படித்த, சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் உரிமையாளர் ரவிகுமார் ஒரு பழுத்த ஆர்.எஸ்.எஸ். விசுவாசி என்பது மட்டுமல்ல.... பா.ஜ.க.வின் தமிழ் வளர்ச்சிக் குழு என்கிற அமைப்பில் மாநில நிர்வாகியாக இருக்கிறார். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜாவின் ஃபைனான்ஸிய ராகவே இருந்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைக் கையாளும் பொறுப்பில் இருந்த ராஜாவுக்கும் இந்தப் பள்ளிக்கும் உள்ள நெருக்கம் தற்பொழுது பா.ஜ.க.வில் கேள்விக்குறி யாகியுள்ளது. இத்தனைக்கும் ரவிகுமார், அவர் சார்ந்த சமூகத்தின் அடிப்படையில் எடப்பாடிக்கு மிக நெருக்கமாக இருந்தார். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்ற இந்தப் பள்ளி, எடப்பாடியின் பினாமி பள்ளி என

"கள்ளக்குறிச்சி சம்பவம் அனைத்து அரசியல் கட்சிகளிலும் அசைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பாதிப்புகள் ஆளுகின்ற மாநில அரசை மட்டுமல்ல... மத்தியில் ஆளும் பா.ஜ.க.விலும் பெரும் விளைவை உருவாக்கியுள்ளது' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Advertisment

ss

சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மரணமடைந்த மாணவி ஸ்ரீமதி படித்த, சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் உரிமையாளர் ரவிகுமார் ஒரு பழுத்த ஆர்.எஸ்.எஸ். விசுவாசி என்பது மட்டுமல்ல.... பா.ஜ.க.வின் தமிழ் வளர்ச்சிக் குழு என்கிற அமைப்பில் மாநில நிர்வாகியாக இருக்கிறார். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜாவின் ஃபைனான்ஸிய ராகவே இருந்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைக் கையாளும் பொறுப்பில் இருந்த ராஜாவுக்கும் இந்தப் பள்ளிக்கும் உள்ள நெருக்கம் தற்பொழுது பா.ஜ.க.வில் கேள்விக்குறி யாகியுள்ளது. இத்தனைக்கும் ரவிகுமார், அவர் சார்ந்த சமூகத்தின் அடிப்படையில் எடப்பாடிக்கு மிக நெருக்கமாக இருந்தார். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்ற இந்தப் பள்ளி, எடப்பாடியின் பினாமி பள்ளி என பரபரப்பாக பேசப்பட்ட வரலாறும் உண்டு. அந்த வகையில், அதே சமூகத்தைச் சேர்ந்த அண்ணாமலையும் அந்தப் பள்ளியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இந்தப் பள்ளியில் ஏகப்பட்ட சந்தேக மரணங்கள் நடந்துள்ளன.

2004-ஆம் ஆண்டு. ஏழாம் வகுப்பு படித்த மாணவர் ராஜா என்பவர் ஸ்ரீமதியைப் போலவே மர்மமான முறையில் மரணமடைந்தார். 2005-ஆம் ஆண்டு. பிரதிக்ஷா என்கிற மாணவி, பள்ளி வாக னம் மோதி இறந்தார். இந்தப் பள்ளியில் நரபலி கொடுக்கப்படுகிறது என பரபரப்பான செய்திகள் வெளியாகி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன.

Advertisment

பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்வுகளை அந்தப் பள்ளியில் வேலை செய்துவந்த பாலசுந்தரம் என்கிறவர் எதிர்த்தார். அவர் பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர். அவர்மீது ரவிகுமார் நடவடிக்கை எடுத்தார். பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களை நடத்தியும், எச்.ராஜா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் நெருக்கம் காட்டியும் வந்த பள்ளி உரிமையாளர் ரவிகுமாரை எதிர்த்து, ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடந்த போராட்டத் தில் பா.ஜ.க.வின் பாலசுந்தரமும் பங்கேற்றார் என்கிறார்கள் களத்திலிருந்து போராடியவர்கள்.

எச்.ராஜாவின் பள்ளிக்கு ஆதரவான செயல்களை அண்ணாமலையும், பா.ஜ.க. மேலிடத்திடம் புகாராகத் தெரிவித்துள்ளார் என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். இது மத்திய அரசிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவம் மாநில அரசிலும் அதன் அதிர்வலைகளை பலமாக ஏற்படுத்தியுள்ளது. 2003-ஆம் ஆண்டு ஓமலூரில் உள்ள ஒரு கிறித் துவப் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவி, ஸ்ரீமதியைப் போலவே சந்தேகமான முறையில் மரணமடைந்தார். அதற்கு எதிராக இதேபோல் ஒரு பெரிய போராட் டம் வெடித்தது. அந்த மரணம் சி.பி.சி.ஐ.டி. விசா ரணைக்கு, கலைஞர் ஆட்சியில் உட்படுத்தப்பட்டது.

sss

அதேபோல் 2011-ஆம் ஆண்டு தர்மபுரி -ஊத்தங்கரையில் ஒரு பள்ளி மாணவன் விபத்தில் பள்ளி வளாகத்தில் மரணமடைந்தது தொடர்பாக மக்களின் போராட்டமாக வெடித்தது. இதனால் பள்ளி சேதமடைந்தது. இந்த இரண்டு சம்பவங்களுக் குப் பிறகு கடந்த பத்து வருடங்களாக பள்ளிக்கு முன்பு போராட்டம் நடத்துவது தடை செய்யப் பட்டதாக அறிவித்து போலீஸ் உத்தரவு பிறப்பித் திருக்கிறது. அந்த உத்தரவை மீறி பள்ளி வளாகத் திற்கு முன்பு போராட்டம் நடத்த எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? என்பதுதான் மாநில உள்துறை எழுப்பிய கேள்வி. இந்தக் கேள்விக்கு போலீஸ் அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை.

பள்ளியை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது. கடந்த 30 ஆண்டுகளில் ஒருமுறை கூட இதுபோன்ற கலவரம் நடந்த இடத்திற்கு மாநில உள்துறை செயலாளர் அனுப்பி வைக்கப்படவில்லை. ஸ்பாட்டுக்குச் சென்ற உள்துறை செயலாளர், "ஸ்ரீமதியின் பெற் றோருக்கு உண்மை நிலவரம் பற்றி தெளிவாக விளக்கப்படவில்லை. பள்ளியில் நடந்த மரணம் தொடர்பாக விஷயங்களை ஸ்ரீமதியின் பெற்றோ ருக்கு தெளிவாக விளக்கியிருந்தாலே கலவரம் நடந்திருக்காது. அதை மாவட்ட எஸ்.பி.யும், கலெக்டரும், கல்வித்துறை அதிகாரிகளும் செய்யவில்லை' என அறிக்கை கொடுத்தார். அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் மாற்றப்பட்டார்கள்.

17-ஆம் தேதி கலவரம் வெடிக்கும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் கொடிகட்டிப் பறந்த எதிர்ப்பு உணர்வுகளை மாநில உளவுத்துறையிடம், மாவட்ட போலீஸ் சொன்ன பிறகும், உரிய நடவடிக்கை இல்லை..

"இதுபற்றி எனக்குத் தகவல் தெரிவித்திருந் தால், நான் உடனடியாக இதைத் தவிர்க்க என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்திருப்பேன்' என டி.ஜி.பி. சைலேந்திரபாபு சொல்ல... கடுமையான வார்த்தைகளை உதிர்த்தார் முதலமைச்சர் என்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.

தற்போதைய உளவுத்துறை தலைவருக்குப் பதிலாக சென்னை நகர கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் ஜெ. ஆட்சியில் இருந்த உளவுத்துறை அதிகாரி ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனாலும் மாற்றம் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. டி.ஜி.பி. ûசேலந்திரபாபுவுக்கு உளவுத் தகவல்களை சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள்.

"சி.பி.சி.ஐ.டி. விசாரணை, நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்' என்கிற முதல்வரின் கடுமையான உத்தரவோடு ஸ்ரீமதி விவகாரம் தற்காலிகத் தீர்வுக்குப் போயிருக்கிறது.

இது போதாது என்கிற குரல் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. "ஒட்டுமொத்த கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கலாம்' என்கிற யோசனை சி.பி.எம். சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. "விரைவில் விசாரணைக் கமிஷன் அறிவிப்பு வெளிவரும்' என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

nkn230722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe