மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தேர்தல் முடிவுதெரிந்து கிட்டத்தட்ட 20 நாட்களாகிவிட்டன. பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உதவியுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சித்ததுதான் கடைசி கட்ட ஹைலைட்.
ஆகாத மனைவி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்ற ரீதியில் தான் மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா உறவு இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே, மத்திய பா.ஜ.க.வை தொடர்ந்து சிவசேனா விமர்சித்து வந்தபடியே இருந்தது. நாடாளுமன் றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை யொட்டி, இரு கட்சி மூத்த தலைவர் களின் முயற்சியால் ஒரு சுமுகப் போக்கு உருவானது.
சட்டமன்றத் தேர்தலிலும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸின் கூட்டணி நிச்சயம் என்ற நிலையில் சிவசேனாவுக்கு பா.ஜ.க.வை விட்டால் வேறு போக்கிடமில்லை. ஆயிரம் தகராறு இருந்தாலும், மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி 30 வருடங்களாக நீடித்து வந்திருந்தது. இடைஞ்சல்தான் என்றாலும், கணிச மான வாக்குப் பின்புலமுள்ள சிவசேனாவை, பா.ஜ.க.வும் லேசில் புறந்தள்ளிவிடமுடியாது. இந்நிலையில்தான் சிவசேன
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தேர்தல் முடிவுதெரிந்து கிட்டத்தட்ட 20 நாட்களாகிவிட்டன. பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உதவியுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சித்ததுதான் கடைசி கட்ட ஹைலைட்.
ஆகாத மனைவி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்ற ரீதியில் தான் மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா உறவு இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே, மத்திய பா.ஜ.க.வை தொடர்ந்து சிவசேனா விமர்சித்து வந்தபடியே இருந்தது. நாடாளுமன் றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை யொட்டி, இரு கட்சி மூத்த தலைவர் களின் முயற்சியால் ஒரு சுமுகப் போக்கு உருவானது.
சட்டமன்றத் தேர்தலிலும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸின் கூட்டணி நிச்சயம் என்ற நிலையில் சிவசேனாவுக்கு பா.ஜ.க.வை விட்டால் வேறு போக்கிடமில்லை. ஆயிரம் தகராறு இருந்தாலும், மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி 30 வருடங்களாக நீடித்து வந்திருந்தது. இடைஞ்சல்தான் என்றாலும், கணிச மான வாக்குப் பின்புலமுள்ள சிவசேனாவை, பா.ஜ.க.வும் லேசில் புறந்தள்ளிவிடமுடியாது. இந்நிலையில்தான் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அழுத்தம்தந்து 124 தொகுதிகள் வரை கோரிப்பெற்றார்.
மறுபுறம் தேசியவாதக் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியிலும் தொகுதிகளை முடிவுசெய்வதில் கடைசிவரை உரசல் இருந்துகொண்டே இருந்தது. ஒருவழியாக காங்கிரஸுக்கு 147 தொகுதிகளும் தேசியவாதக் காங்கிரஸுக்கு 121 தொகுதிகளும் என முடிவுசெய்யப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி 41 தொகுதிகளை மொத்தமாக அள்ளிச்சென்றிருந் ததால், சட்டமன்றத் தேர்தலிலும் அந்தக் கூட்ட ணியே வெற்றிவாகை சூடுமெனப் பார்க்கப் பட்டது. அதற்கேற்றாற்போல் கருத்துக் கணிப்பு களும் 2014 சட்டமன்றத் தேர்தலைப்போல பா.ஜ.க. சிவசேனா கூட்டணியே தனி மெஜாரிட்டி பெறும். காங்- தேசியவாத கூட்டணி அதிகபட்சமாய் 60 சீட்டுகள் வரை பெறலாம் என்றரீதியில் கணிப்பு வெளியானது.
மாறாக, வாக்கு எண்ணிக்கை தொடங்கி முன்னணி நிலவரங்கள் வெளியாகும்போதே பா.ஜ.க.வின் முகம் களையிழந்துபோனது. காங்- தேசியவாத காங் கூட்டணியின் முன்னணி நிலவரம் கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக சவால் விடுவதாக இருந்தது. கிட்டத்தட்ட முந்தைய தேர்தலைவிட 56 இடங்கள் குறைவாக பா.ஜ. கூட்டணி வென்றது. காங்கிரஸ் 44 சீட்டுகளும் தேசியவாதக் காங்கிரஸ் 54 சீட்டுகளுமாக நூறுக்கு நெருக்கமான சீட்டுகளைக் கைப்பற்றியிருந்தன.
பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க. சிவசேனா கைப்பற்றியிருக்கும் தொகுதிகள் போதுமெனினும், கடந்த சட்டமன்றத் தேர்தலி லிருந்தே பா.ஜ.க. கொடுக்கிற இடத்திலும், தான் பெறுகிற இடத்திலுமாய் இருப்பதை சிவசேனா ரசிக்கவில்லை. இரண்டரை இரண்டரையாண்டு கள் என முதல்வர் பதவியை 50 : 50 ஆக பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் சிவசேனாவுக்கு வந்தது.
சிவசேனா, மெல்ல சரத்பவார் பக்கம் தூதுவிட்டுப் பார்த்தது. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணியமைத்தால் முதல் வர் பதவி தொட்டுவிடும் தூரம்தான் என்றது. ஆனால் மத்திய பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தந்துகொண்டே, மாநிலத்தில் தனி கூட்டணிக்கு தூதுவிடும் சிவசேனாவின் யோசனையை காங்- தேசியவாத காங்கிரஸ் ரசிக்கவில்லை. தாட்சண்ய மின்றி சிவசேனாவுக்கு ஆதரவில்லையென அறிவித்தார் சரத்பவார்.
சரத்பவாரின் நிராகரிப்பை சாதகமாகக் கருதிய பா.ஜ.க.வின் மத்திய தலைமை, சிவ சேனாவை அழைத்துப் பேசியது. சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு சமவாய்ப்பு அளிக்க வேண்டுமென நாடாளுமன்றத் தேர்தலின்போதே கோரியதைக் குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவி பகிர்வு மற்றும் அமைச்சர் பொறுப்புகளில் சமவாய்ப்பு என மாநிலத் தலமையிடமும் அமித்ஷா தரப்பிடமும் கறாராகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் பெரும்பான்மையை நிரூபிக்க அழைத்த கவர்னரின் அழைப்பை பா.ஜ.க. நிராகரித்தது. இதையடுத்து சுறுசுறுப் பான சிவசேனா மத்திய அமைச்சரவையில் தாங்கள் பங்குவகிக்கவில்லை எனக் காட்ட, கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறைக்கான அமைச்ச ரான அர்விந்த் சாவந்தை அமைச் சரவையிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தது.
தேவேந்திர பட்நாவிஸ் பொறுப்பு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, மறுநாள் நவம்பர் 10 ஆம் தேதி மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சிவசேனாவை பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்புவிடுத்தார்.
சரத் பவாரை நேரில் சந்திக்கச் சென்ற தாக்கரேவிடம் இரண்டு திட்டங்கள் கைவச மிருந்தன. ப்ளான் ஏ படி, இரண்டரை, இரண் டரை ஆண்டுகாலம் முதல்வரை சுழற்சிமுறையில் பகிர்ந்துகொள்ளலாம், யார் தரப்பில் முதலில் முதல்வராவதென தயக்கம் ஏற்பட்டால், ப்ளான் பி படி, சிவசேனா தரப்பில் முதல்வர், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாருக்கு துணைமுதல்வர், உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்கள் என பகிர திட்டமிடப்பட்டுள்ள தாம். ஆதரவு வழங்கும்பட்சத்தில் காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவி ப்ளஸ் அமைச்சர் பதவிகள் வழங்க திட்டமாம்.
முதலில், சிவசேனாவுக்கு ஆதரவை மறுத்த காங் தேசியவாத காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்டத்தி லிருந்து பா.ஜ.க. விலகியுள்ள சூழலில் சிவசேனா வுக்கு ஆதரவு தரலாம் என்ற எதிர்பார்ப்பு உருவானது. கைக்கெட்டிய முதல்வர் பதவி நழுவக் காரணமான சிவசேனாவின் ஆட்டத்தை பா.ஜ.க. வெறுமனே வேடிக்கை பார்க்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
எப்படி பார்த்தாலும் பா.ஜ.க.வை நேரம் பார்த்து "வச்சி செய்து'ள்ளது சிவசேனா.
பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா கேட்ட கூடுதல் அவகாசத்தை மறுத்து கவர்னர் அதிர்ச்சியளித்திருக்கிறார்
-க.சுப்பிரமணியன்