தொழிலாளர் தினமான மே 1-ஆம் நாள், சென்னை மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் உரிமைக் குரலும், நிர்வாகத்தின் கெடுபிடியும் சங்கிலி இழுக்கப்பட்ட ரயில்போல தடுமாறி நின்றது.

சென்னையின் நவீன அடையாளமாக இருக்கிறது மெட்ரோ ரயில். பயணிகளின் பொதுப்போக்குவரத்து தேவையை இது நிறைவேற்றி வருவதால், நாளுக்கு நாள் வரவேற்பு கூடுகிறது. 2013ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 250 பேர் வேலை செய்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை கிடையாது. தனியார் நிறுவனத்தைப் போன்ற மிரட்டல்களும் அதிகம் என்பதுதான் பிரச்சினைக்கு காரணம்.

m

சென்னை மெட்ரோ ரயில்வே தொழிற்சங்க துணைத்தலைவர் இளங்கோவனிடம் பேசினோம்.…""ரயில் ஆபரேட்டர், ஸ்டேஷன் கண்ட்ரோலர், ஜூனியர் என்ஜினியர் என்று பல பிரிவுகளில் வேலைக்கு எடுக்கப்பட்ட 250 பேரும் 1946 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இண்டஸ்ட்ரியல் ஸ்டேண்டிங் ஆர்டர் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவர்கள். ஆனால், கார்பரேட் நிறுவனங்களைப்போல எச்ஆர் மேனுவல் என்ற வேலைக்கு ஆளெடுக்கும் அமைப்பை உருவாக்கி இருக்கிறது மெட்ரோ நிர்வாகம்..

Advertisment

ரயில் ஆபரேட்டர்களாக இருந்தவர்களை ஸ்டேஷன் கண்ட்ரோலர்களாக மாற்றுகிறது. டிக்கெட் கொடுப்பவர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வுசெய்கிறது. அதாவது, ஏற்கெனவே ரயில்வே ஆபரேட்டராக பணிபுரிந்தவர் 64 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினால், ஒப்பந்த அடிப்படையில் 19 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆளை நியமித்திருக்கிறார்கள். அதாவது, தனியார் நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில்வே 64 ஆயிரம் ரூபாயை சம்பளமாக கொடுக்கும். ஆனால், அந்த நிறுவனமும் மெட்ரோ நிர்வாக அதிகாரிகளும் 19 ஆயிரம் ரூபாய் போக மீதமுள்ள தொகையை பங்கிட்டுக் கொள்வார்கள். 600 பணியாளர்களுக்கு எவ்வளவு பங்கீடு என்று கணக்கிட்டுக் கொள்ளமுடியும்.

mஇப்படி தொடங்கிய பிரச்சனை சம்பள நிர்ணயத்தில்தான் பூதாகரமாகியது. சென்னை மெட்ரோ ரயில்வே ஊழியர்களின் சம்பள விகிதம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு இணையானது. 1-1-2017ல் மூன்றாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை அமல்படுத்தும்போது அடிப்படை சம்பளத்தில் 35 சதவீதம் அலவன்சும், 15 சதவீத சம்பள உயர்வும் அளிக்கப்பட வேண்டும். ஆனால், அதிகாரிகளுக்கு 15 சதவீதம் உயர்வும், ஊழியர்களுக்கு 10 சதவீத உயர்வும் அளிக்கப்பட்டது. அலவன்ஸ் 35 சதவீதத்தை சென்னை மெட்ரோ அதிகாரிகளுக்கு 20 சதவீதமாகவும் ஊழியர்களுக்கு 0 சதவீதமாகவும் ஆக்கியது. அதாவது 1.1.2017 முதல் 30.6.2018 வரை ஊழியர்கள் வாங்கிவந்த 35 சதவீத அலவன்ஸ் முழுவதையும் சம்பள உயர்வு அரியர்ஸில் பிடித்தம் செய்துவிட்டார்கள். அத்துடன் மனைவியின் பிரசவ காலத்தில் ஆண்களுக்கு கொடுக்கப்படும் 15 நாள் விடுப்பையும், அரைச் சம்பள விடுப்பு 20 நாட்களையும் ரத்து செய்தனர்.

இதையடுத்தே, 5.8.2018 ஆம் தேதி தோழர் ஏ.சவுந்தரராஜனை தலைவராகக் கொண்டு சென்னை மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் சங்கத்தை தொடங்கினார்கள். அந்தச் சங்கத்தின் சார்பில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் கண்ட்ரோலர்களை அவுட்சோர்ஸில் எடுக்கக்கூடாது என்றும் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ள 100 பேரில் இருந்தே புதிய ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் உயர்நீதிமன்றத்தில் தடைபெறப்பட்டது. இந்த விவரத்தை மெட்ரோ நிர்வாக அதிகாரிக்கும், அவுட்சோர்ஸிங் நிறுவனத்துக்கும் ஏ.சவுந்தரராஜன் சங்கத்தின் லெட்டர்பேடில் கடிதம் எழுதினார். அந்த லெட்டர்பேடில் நிர்வாகிகளாக இடம்பெற்றிருந்த 7 ஊழியர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. காண்ட்ராக்டர்களை மிரட்டியதாக அவர்கள் மீது சார்ஜ்ஷீட் பதிவுசெய்து அவர்களை டிஸ்மிஸ் செய்தது.

Advertisment

eஅதைத்தொடர்ந்து 7 ஊழியர்களும் மெட்ரோ நிர்வாக அதிகாரியை சந்திக்க முயற்சித்தாலும் அவர் சந்திக்க மறுத்தார். மாலை ஐந்தரை மணிவரை அதிகாரி பிடிவாதம் பிடித்ததால், ஏப்ரல் 29 ஆம் தேதி ஸ்டிரைக் தொடங்கியது. கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த மூன்று ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அறையை பூட்டிவிட்டு நிர்வாக அதிகாரியிடம் சாவியை கொடுத்தார்கள். ஆனால், அவர்களை அறையில் பூட்டிவைத்து அடித்து மிரட்டினார்கள், சிக்னலை டேம்பர் செய்தனர் எனக் குற்றம்சாட்டி சஸ்பெண்ட் செய்தார்கள்.

ஏப்ரல் 30 மற்றும் மே1 ஆம் தேதியும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தே, பணிநீக்கப்பட்ட 7 பேரும் நிர்வாகத்தில் முறையீடு செய்தால் சாதகமாக முடிவெடுப்பதாகவும், சம்பள விவகாரம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூவர் ஆகியவற்றை பேசித் தீர்க்கலாம் என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.

ஆனால், வேலைக்கு திரும்பிய ஊழியர்களுக்கு வேலை கொடுக்காமல், வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்துப் போடும்படி கூறி இரண்டு நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது நிர்வாகம்''’என்றார் இளங்கோவன்.

பளபளக்கிறது மெட்ரோ ரயில். பல் இளிக்கிறது நிர்வாகம்.

-ஆதனூர் சோழன்

படம்: அசோக்