திரையுலகப் பிரபலம் என்பதால் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரும், கேப்டனின் மகன் என்பதால் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனும் பிரச்சாரத்தில் பளிச்சென்று தெரிகிறார்கள். ஆனால், படோடபம் இல்லாமல் ஜொலிப்பது சிட்டிங் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்தான்.
வலுவான தி.மு.க. கூட்டணி வாக்கு வங்கி, மாணிக்கம் தாகூருக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. இன்னொருபுறம் ஆளும்கட்சி தி.மு.க. அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி ரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி ஆகியோர் தாங்கிப் பிடிக்கிறார்கள். எப்படி யென்றால், மாணிக்கம் தாகூரின் வெற்றிக்காக 74 வயதிலும் தெம் பாகப் பிரச்சாரம் செய்துவருகிறார் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அருப்புக்கோட்டையில் அனைத்து சமுதாயத் தலைவர்களையும், தனக்கு நெருக்கமான நட்பு வட்டத்தில் உள்ளவர்களையும் சந்தித்துப் பேசியபோது, "மாணிக்கம் இங்கிட்டு வரல போகலன்னு நினைக்காதீங்க... நாங்க இருக்கோம்ல. உங்களுக்கு என்னென்ன தேவையோ அதயெல்லாம் பண்ணப்போறோம். உங்க சமுதாயத்துல எத்தனைபேர் இருக்காங்க, அத்தனை பேரையும் கவனிச்சிருவோம்''’என்று கூலாகப் பேசியே வளைத்துவிடுகிறார்.
கடந்த தேர்தலின்போது போலிங் ஆனது, கடைசி நேரத்தில் போலிங் ஆனது என அனைத் தையும் அலசி ஆராய்ந்துவிட்டு "“எல்லாம் திருப் தியா இருக் குப்பா. எம்.எல்.ஏ. எலக்ஷன் மாதிரியே இதயும் கொண்டு போயிரணும். ரெட்ட இலை (முரசு) வாக்காளர் களைக் கண்டுக்காதீங்க. டயத்த வேஸ்ட் பண்ணாதீங்க. நமக்கு விழற ஓட்டுல 70ல இருந்து 80 சதவீதத்த குறிவச்சா போதும்'’என்று சாத்தூர், அருப்புக்கோட்டை பகுதிகளில் வகுப்பெடுத் திருக்கிறார். மற்ற இரண்டு அமைச்சர்களும் அவரவர் பகுதிகளில் இதேரீதியில் கவனம் செலுத்திவருகின்றனர்.
திருமங்கலம், திருப்பரங்குன்றம் போன்ற பகுதிகளில் "இங்கதான் இருக்கீங்க. ஆனா.. எங்கள பார்க்கிறது இல்ல. எதுவும் பேசுறது இல்ல.’என்பதை ஒரு குறையாக மாணிக்கம் தாகூரிடம் முக்கிய பிரமுகர்கள் சொன்னபோது, "டெல்லில.. தலைமை சொல்லுற இடங்கள்ல, கட்சிப் பணியவும் பார்க்கவேண்டியிருக்கு. நான் எங்கே இருந்தாலும் ஒரு எம்.பி.யா தொகுதிக்கு பண்ண வேண்டிய வேலைகளை ஒரு குறையும் இல்லாம பார்த்துட்டுத்தான் வந்திருக்கேன். மத்தியில ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும். காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரப்போகுது. எப்படியும் நான் அமைச்ச ராயிருவேன். இங்கே போட்டி போடுற மற்ற வேட்பாளர்களால அமைச்சராக முடியுமா? எனக்கு சப்போர்ட் பண்ணுங்க'’என்று கேட்டதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்திருக் கிறது.
விருதுநகரில் நாம் சந்தித்த பொன்னையன், "ரெண்டு தடவ எம்.பி. ஆக்கிருக்கோம். ஆர்ப் பாட்ட அரசியல் பண்ணுனது இல்ல. எய்ம்ஸ் ஆஸ்பத் திரி நல்லபடியா வரணும்ல. கைக்கு ஓட்டு போடுறது தான் நாட்டுக்கு பாதுகாப்பு''’என்று அடித்துச் சொன் னார்.