சைதை சாதிக் என்கிற தி.மு.க. பிரமுகர், நடிகை குஷ்பூ, கௌதமி ஆகியோரை ஆபாசமாக மேடையில் பேசினார் என சில காலம் முன்பு பா.ஜ.க.வினர் கொந்தளித்தார்கள். அண்ணாமலை ஆர்ப்பாட்டம் கூட நடத்தினார். ஆனால், அதைவிட ஆபாசமாக பா.ஜ.க. நிர்வாகிகள் டெய்சி சரண் மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரைப் பற்றி மாநில பிற்படுத்தப்பட்டோர் அணிச் செயலாளர் திருச்சி சூர்யா பேசிய ஆடியோவும் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் பேசிய ட்விட்டும் வலைத்தளங் களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் டெய்சி சரணுடன் திருச்சி சூர்யா பேசிய ஆடியோ ஒன்று நக்கீரன் இணைய தளத்தில் வெளியானது. அதில்... (பீப் ஒலிக்குப் பதிலாக புள்ளி வைக்கப்பட்டுள்ளது!)

bjp

Advertisment

"என்னை நீ தம்பியாத்தான பார்த்துருக்க; ஊர்ல... கேசவ விநாயகம் கிட்ட... பதவிய வாங்கிட்டு வந்து நிப்ப, உங்கிட்ட நான் வந்து தலை குனிஞ்சு நிக்கணுமாடி... நீ ஊரு மேஞ்சுக்கிட்டு பதவிய வாங்கிட்டு வந்த, ஒரு சாமியாருகிட்ட... இருக்கற நீ... பெரிய பத்தினியா? நீ அண்ணாமலை கிட்ட போ... ஜே.பி.நட் டாவிடம் போ... அமித்ஷா கிட்ட போ... மோடிகிட்ட போ... எங்க வேணும் னாலும் போ ... நான் என் ஜாதிக்காரன ஏவி விடுறேன்... நாளைக்கு நீ ஊரு தாண்ட முடியாது. ஒன்னோட அந்தரங்க உறுப்புகளை அறுத்து மெரினா பீச்சுல போடுவேன்... ஒனக்கு ஆக்சிடென்ட் ஆனாலும் சரி... நீ நாளைக்கு தெருவுல நாயா செத்துக் கெடப்ப. நான் யாருன்னு இனிமே நீ பாப்ப... ஒரு மாசத்துல நீ வாழ முடியாதபடி செய்றேன். சென்னைக்குள்ள நீ வாழ மாட்ட. நீயெல்லாம் பத்துப் பைசாவுக்கு தேற மாட்ட... ஜனவரி 2023க்குள்ள உன் கதைய முடிச்சுடுவேன். நான் தி.மு.க.வுலயே ரவுடியிசம் பண்ணுனவன்'’என கட்சியின் மூத்த தலைவர்களான கேசவவிநாயகம், அண்ணாமலை, ஜே.பி.நட்டா, அமித்ஷா, மோடி என அனை வரையும் வம்புக்கிழுத்து கேசவவினாயகத்திடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததால்தான் டெய்சி ‘மைனா ரிட்டி விங்’ பதவி பெற்றார் என சூர்யா ஆபாச வார்த்தை களால் அர்ச்சனை செய்தார்.

நக்கீரனில் இந்த ஆடியோ வெளி யானதும் இணைய தளங்களில் இது பற்றி டெய்சி பேசினார். "இது பதினைந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உரையாடல். இந்த ஆடியோவை அண்ணாமலை, கருப்பு முருகானந்தம், கரு.நாகராஜன் ஆகியோருக்கு நான் அனுப்பினேன். அது நக்கீரனில் எப்படி வெளியானது என்று தெரியவில்லை. இந்த ஆடியோவைக் கேட்டதும் அண்ணாமலை என்னையும் திருச்சி சூர்யாவையும் அழைத்துப் பேசினார். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சமாதானமாகி விடுங்கள் என அட்வைஸ் செய்தார். ஆனால், இந்த ஆடியோ நக்கீரனில் வெளியாகி சமூக வலைத் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஒரு பெண்ணை பேசக் கூடாத ஆபாச வார்த்தைகளில் இப்படி பேசிய சூர்யாவுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை அண்ணாமலைதான் தீர்மானிக்க வேண்டும்''’என்றார்.

இந்த ஆடியோவை டிவிட்டரில் எடுத்து பா.ஜ.க.வின் அயல் மாநிலச் செயலாளராக இருக்கும் காயத்ரி ரகுராம் வெளியிட்டார். அது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. "பெண்களை ஆபாசமாக பேசிய சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்கிற காயத்ரி ரகுராமின் கோரிக்கை பலராலும் ஏற்கப்பட்டது.

Advertisment

இதைப் பார்த்த அண்ணாமலைக்கு நெருக்கமான அமர் பிரசாத் ரெட்டி, "சோம செட் ஹோட்டலில் காயத்ரி ரகுராம், ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். காயத்ரி ரகுராம் நடவடிக்கைகளுக்குப் பின் தி.மு.க. இருக்கிறது'’என ஒரு பதிவைப் போட்டார். அதற்குப் பதில் அளித்த காயத்ரி, “"நான் ஹோட்டலுக்குச் சென்றபோது சபரீசன் அங்கே இருந்தார். அவருக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லிவிட்டு சென்று விட்டேன்'’என்று டிவிட்டரில் பதில் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, “காயத்ரி ரகுராமை ஆறு மாதங்களுக்கு கட்சி நடவடிக்கைகளில் இருந்து சஸ்பென்ட் செய்வதாக அண்ணாமலை அறிவித்தார். சூர்யா மற்றும் டெய்சி சரண் விவகாரத்தில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் கனகசபாபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைத்து விசாரிப்பதாகவும், அதுவரை ஒருவாரம் சூர்யா கட்சி நடவடிக் கைகளில் ஈடுபடக்கூடாது”என்றும் உததரவிட்டார்.

bjp

தவறு செய்த சூரியாவுக்கு ஒரு வாரம். அவர் செய்த தவறைத் தட்டிக் கேட்ட காயத்ரிக்கு ஆறு மாதம் தண்டனையா? என்ற கேள்வி கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஏற்கனவே இது போல கே.டி.ராகவன் ஆபாச செய்கையில் ஈடுபட்ட போது ஒரு ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அது பல மாதங்களாகியும் இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. இப்பொழுது சூர்யா விசயத்திலும் ஒரு ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு கண் துடைப்பாகத்தான் அமையும்” என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

அண்ணாமலை தன்னைச் சுற்றி ஐந்து கோமாளிகளை வைத்திருக்கிறார். அமர் பிரசாத் ரெட்டி, திருச்சி சூர்யா, கரூர் செல்வக்குமார் என நீளும் இந்தக் கோமாளிகள், பொன்னார், மத்திய அமைச்சர் முருகன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன் போன்ற சீனியர் தலைவர்களைக் கிண்டலடிக்கிறார்கள்.

டெய்சி தலைவராக இருக்கும் மைனா ரிட்டி பிரிவைச் சேர்ந்த பஷீர் பாஷா என்ப வர், கருப்பு முருகானந்தத்தின் படத்தை பெரிதாகப் போட்டு போஸ்டர் அடித்தார். கருப்பு முருகானந்தம் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர். அவர் படத்தைப் பெரிதாகப் போட்டு எப்படி போஸ்டர் அடிக்கலாம் என்று அதே முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்த அண்ணாமலையின் ஆள் சூர்யா, டெய்சி சரணை கேள்வி கேட்டார். அதற்கு டெய்சி, வாய்ஸ் மெசேஜில் சூர்யாவுக்குப் பதில் அனுப்பினார். அதுதான் இருவருக்கும் இடையி லான ஆபாச உரையாடலாக மாறி நக்கீரனில் வெளிவந்தது.

அண்ணாமலை, கேசவ விநாயகம் என்ற சீனியர் தலைவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இந்த மோதல் சூர்யாவின் பேச்சில் வெளிப்பட்டது. அண்ணாமலை இப்பொழுது எம்.பி. சீட் வசூலில் இறங்கிவிட்டார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வின் மருமகனை எம்.பி. ஆக்குகிறேன் என ஒரு பெரிய அமௌண்டை வாங்கி விட்டார். “இந்தக் கட்சிப் பதவி போனாலும் பரவாயில்லை. என்னிடம் இருக்கும் காசை வைத்து நான் ஒரு பிரஸ் வைத்துப் பிழைத்துக் கொள்ளுவேன்” என்று வெளிப்படையாகக் கூறிவருகிறார். “பா.ஜ.க.விலிருந்து தி.மு.க.வுக்கு சென்றுவிட்ட மதுரை சரவணன், காயத்ரி ரகுராமைத் தூண்டிவிட்டு அண்ணாமலையை எதிர்க்கிறார். அதனால் காயத்ரியை கார்னர் செய்கிறார் அண்ணாமலை''” என்கிறார்கள் பா.ஜ.க.வின் உள்வட்டார அரசியலை தெரிந்தவர்கள்.

"இப்பொழுது சூர்யா மீது புகார் கொடுத்திருக்கும் டெய்சி சரண் கட்சிக் கட்டுப் பாட்டை மீறி இணைய தளங்களில் பேசி வருகிறார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சூர்யா புதிய புகார் ஒன்றை பா.ஜ.க. தலைமையிடம் கொடுத்துள்ளார். இந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கவேண்டிய பா.ஜ.க.வின் தமிழகப் பொறுப்பாளரும் அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைவ ராகக் கொண்டு வந்தவருமான பி.எல்.சந்தோஷ் மவுனமாக இருக்கிறார்.

தெலுங்கானாவின் பொறுப்பாளரான சந்தோஷ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என, வழக்கு ஒன்றை அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தொடுத்திருக்கிறார். அதை சரிசெய்யும் வேலையில் மூழ்கியுள்ள சந்தோஷுக்கு தமிழகத்தில் இருந்து மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை அண்ணாமலை கொடுத்து விடுகிறார். அதனால் அண்ணாமலையின் நடவடிக்கைகளில் சந்தோஷ் தலையிடுவதில்லை'' என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே வாஞ்சிநாதன் என்கிற வழக்கறிஞர், “"பா.ஜ.க.வில் பெண்களை ஆபாசமாகப் பேசுகிறார்கள். எனவே அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'’என போலீசில் புகார் செய்து இந்த ஆபாசப் பேச்சு விவகாரத்தை சந்திக்கு இழுத்து வந்திருக்கிறார்.

___________

ஸ்ரீமதிக்காக டி.ஜி.பி. அலுவலகம் முற்றுகை!

ff

கனியாமூர் சக்தி பள்ளியில் ஜூலை 13-ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இவ்விவகாரத்தை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரித்துவருகிறது. இந்நிலையில் ஸ்ரீமதி வழக்கு சரியான திசையில் செல்லவில்லையென்ற புகாருடன் இந்திய மாதர் சங்கம், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு நவம்பர் 24-ஆம் தேதி போராடினர். போராடிய வர்களை காவல்துறை கைதுசெய்தது.