Advertisment

மாணவியைத் தின்ற ஷவர்மா! -அலறவைக்கும் நான்வெஜ் ஆபத்து!

ss

ளைஞர்களை அண்மைக்காலமாக ஈர்த்துவரும் உணவு ஐட்டங்களில் ஒன்றான ஷவர்மா, ஒரு மாணவியின் உயிரை விழுங்கி இருக்கிறது. இந்தக் கொடுமை அரங்கேறியிருப்பது கேரளாவில் என்றாலும், தமிழக இளைஞர்களையும் அது பீதிகொள்ள வைத்திருக்கிறது.

Advertisment

கேரள மாநில காசர்கோடு அருகே உள்ள செறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதே ஆன ப்ளஸ் ஒன் மாணவி தேவநந்தா. இவர், ஒரு அசைவப் பிரியை. குறிப்பாக, ஷவர்மா என்றால் அவருக்கு உயிர். அந்த உயிர்தான் அவர் உயிருக்கு உலை வைத்திருக்கிறது.

ss

அன்று அந்தப் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில், ஆசை ஆசையாய் தேவநந்தா சிக்கன் ஷவர்மாவை வாங்கிச் சாப் பிட்டிருக்கிறார். இரவே அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட, அதிர்ந்துபோன குடும்பத்தினர் அவரை உடனடியாக காசர்கோடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோயிருக் கிறார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தேவநந்தா மரணமடைந்துவிட்டார்.

ளைஞர்களை அண்மைக்காலமாக ஈர்த்துவரும் உணவு ஐட்டங்களில் ஒன்றான ஷவர்மா, ஒரு மாணவியின் உயிரை விழுங்கி இருக்கிறது. இந்தக் கொடுமை அரங்கேறியிருப்பது கேரளாவில் என்றாலும், தமிழக இளைஞர்களையும் அது பீதிகொள்ள வைத்திருக்கிறது.

Advertisment

கேரள மாநில காசர்கோடு அருகே உள்ள செறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதே ஆன ப்ளஸ் ஒன் மாணவி தேவநந்தா. இவர், ஒரு அசைவப் பிரியை. குறிப்பாக, ஷவர்மா என்றால் அவருக்கு உயிர். அந்த உயிர்தான் அவர் உயிருக்கு உலை வைத்திருக்கிறது.

ss

அன்று அந்தப் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில், ஆசை ஆசையாய் தேவநந்தா சிக்கன் ஷவர்மாவை வாங்கிச் சாப் பிட்டிருக்கிறார். இரவே அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட, அதிர்ந்துபோன குடும்பத்தினர் அவரை உடனடியாக காசர்கோடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோயிருக் கிறார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தேவநந்தா மரணமடைந்துவிட்டார். இது கேரள மாநிலத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

அந்த ஓட்டலில் அதே நாளில் ஷவர்மா சாப்பிட்ட 50-க்கும் மேற்பட் டோருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்த, அவர்களில் மூன்று மாணவிகள் சீரியஸ் கண்டிஷனில் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஓட்டலில் அதிரடி ஆய்வு நடத்திய கேரள உணவு பாதுகாப்புத் துறையினர், சிக்கன் ஷவர்மா மற்றும் கோழிக்கறி இறைச்சிகளைக் கைப்பற்றி, அது கெட்டுப்போயிருந்ததைக் கண்டறிந்தனர். அதை ஆய்வுக்காக அனுப்பிவிட்டு, அந்த டேஞ்சரஸ் ஓட்டலை இழுத்து மூடி சீல் வைத்தனர். ஹோட்டலின் உரிமையாளர் முகம்மது அனஸ், சமையலர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்போது அங்கே மாநிலம் முழுக்க சிக்கன் ஷவர்மா தயாரிப்பு ஓட்டல்கள் ரெய்டுக்கு ஆளாகி வருகின்றன.

இந்த சிக்கன் ஷார்கோல் ஷவர்மா மற்றும் அல்ஃபாம் போன்ற சிக்கன் உணவு வகைகள், அரேபியன் ரகங்களாம். இவை இப்போது இந்தியாவிற்குள்ளும் நுழைந்து சக்கை போடு போடுகின்றன.

Advertisment

ss

கறிக் கோழியிலுள்ள எலும்பு களை வெட்டி நீக்கி விட்டு, அதன் தசைக் கறியை சிறு சிறு துண்டு களாக்கி, பின் அவற்றை நீண்ட கம்பியில் கோர்த்துக் கொள்வார் களாம். பின்னர் மின்சார அடுப்பு அல்லது கேஸ் அடுப்புகளில் வாட்டி யெடுப்பார்கள். இதன்பின் பல பிராசஸ் களுக்குப் பிறகு அது சிக்கன் ஷவர்மாவாக மாறுகிறது.

இந்த சிக்கன் ஷவர்மா சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, திருவனந்தபுரத்தில் ஷவர்மா சாப்பிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் மரணமடைந்தார். உடனே அரசு தலையிட்டு ஷவர்மாவைத் தடை செய்தது. அதன் பிறகு இப்போதுதான் அங்கே ஷவர்மா தலைதூக்கியுள்ளது.

ஷவர்மாவுக்குப் பலியான மாணவி தேவநந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையோ, அவரது சாவிற்கு காரணம் ஷவர்மாவில் இருந்த ஷிகெல்லா என்கிற வைரஸ்தான் என்று தெரிவித்திருக்கிறது.

காசர்கோடு மாவட்ட மருத்துவமனை அதிகாரியான டாக்டர் ராம்தாஸ் நம்மிடம் “"பொதுவாக கெட்டுப்போன உணவுப் பொருள் மற்றும் அசுத்தமான தண்ணீர் போன்றவை களில்தான், ஷிகெல்லா வைரஸ் வேகமாகப் பரவும். இது உயிராபத்தையும் உண்டாக்கும்'' என்றார் அழுத்தமாக.

நம்மிடம் மனம் திறந்து பேசிய ஒரு ஓட்டல் உரிமையாளர், "பொதுவாக உணவுத் தயாரிப்பிற்காக வாங்கப்படும் சிக்கனையோ, மட்டன் கறியையோ இருப்பு வைக்காமல் உடனுக்குடன் சமைத்து விற்றால் பிரச்சினை வராது. ஆனால் ஓட்டல்காரர்கள், சிக்கன், மட்டன் போன்றவற்றை இரண்டு மூன்று நாட்கள், ப்ரிட்ஜில் வைத்துவிடுகிறார்கள். அதனால் கறி வகைகள் மறு நாளே கெட்டுப்போய் அழுகி, டீகம்போஸாகி, கிருமிகள் அதிகமுள்ளதாக ஆகிவிடும். அவற்றை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆகிவிடும். அதில் வாடையும் வரும். ஆனால் ஓட்டல்காரர்கள் இதை மறைக்க, சில சேர்மானங்களைச் சேர்த்து, வாடை வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட கெட்டுப்போன ஷவர்மாதான் உயிர்க்கொல்லியாக மாறிவிடுகிறது. ஓட்டலின் மாடர் னான வெளித் தோற்றத்தை நம்பி, கெட்டுப்போன நான்வெஜ்களை பலரும் சாப்பிட்டு வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் வயிற்றுப்போக்கோடு பிழைத்துக்கொண்டு, எனக்கு ரெண்டு நாளா வயிறு சரியில்லை என்று, காரணம் தெரியாமலேயே சொல்லிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் இப்படி எல்லாம் கறிகளை ஃபிரிட்ஜில் வைப்பதில்லை. தேவைக்கு வாங்கி அன்றன்றே கறிவகைகளைத் தீர்த்துவிடுகிறோம்''’என்றார் புன்னகையோடு.

நாம் தின்னவேண்டிய உணவுப் பொருள், நம் உயிரையே தின்பது எவ்வளவு பெரிய கொடுமை. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலும் 3 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஷவர்மா சாப்பிட்டு மயக்கமடைய, தமிழக உணவகங் களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

nkn110522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe