ராங்கால் ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!

rr

"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவி-ருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசிய-ல் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.''”

"ஆமாம்பா, அமைச்சர்கள் சிலர் தங்கள் பதவி பற்றிய பதட்டத்தில் இருக்கிறார்களே?”

"உண்மைதாங்க தலைவரே, அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினிடம், அமைச்சரவை மாற்றம் இருக்குமா? என்ற கேள்வி வைக்கப்பட,’"நீங்கள் நினைப்பது நடக்கும். தி.மு.க. அரசு செய்வதைத்தான் சொல்லும்; சொல்வதைத்தான் செய்யும்'’ என்று ஸ்டா-ன் பதிலளித்தார்.''”

"அமைச்சரவை மாற்றத்தின்

"அமைச்சரவை மாற்றத்தின்போது சீனியர் அமைச்சர்கள் சிலரின் இலாகாக் கள் மாறலாம் என்கிறார்களே?''”

"செந்தில் பாலாஜி ரிலீசான உடனேயே அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்றும் அப்போது செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவ தோடு, அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் தர தி.மு.க. ரெடியாக இருக் கிறதாம். இதன்மூலம் செந்தில் பாலாஜி மீண்டும் ஒரு அதிகார மையமாகலாம் என்கிறார்கள். இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது உதயநிதி துணை முதல்வர் ஆவதோடு, சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட சிலரின் இலாகாக்களை மாற்றவும் தி.மு.க. தலைமை முடிவு செய்திருக்கிறதாம்.''”

ss

"விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக் கிறாரே?''”

"தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே, தி.மு.க. ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடிகளை உருவாக்கும் விதத்தில் ஒரு அதிரடி அரசியல் மூவை திருமாவளவன் கையில் எடுத்திருக்கிறார் என்று தி.மு.க. தரப்பு ஆதங்கத் தில் இருக்கிறது. மது ஒழிப்பு மாநாட்டை நடத்துவதன் மூலம் இந்த அரசியல் கட்டமைக்கப்படுவதாகவும், அ.தி.மு.க.வின் விருப்பத்திற்கேற்ப, அவர் இப்படி அரசியல் செய்வதாகவும் தி.மு.க. நினைக்கிறது. ஆனால், "தங்களின் கொள்கை ரீதியிலான மாநாட்டுக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை என்றும், "தி.மு.க. கூட்டணியில்தான் இருப்போம்' என்றும் திருமா விளக்கம் தந்திருக்கிறார். எனினும் ’ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’என்கிற தனது பழைய உரையை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதனால் அவரது நிலைப்பாட்டில் தி.மு.க. ஐயம்கொண்டிருக் கிறதாம்.''”

"நானும் எனக்கு வந்த ஒரு தகவலை இங்கே பகிர்ந்துக்கறேன். மார்டின் மருமகன் ஆதவ் அர்ஜுன் தான், விடுதலைச் சிறுத்தைகளை தி.மு.க.வுக்கு எதிராக நிலைநிறுத்தப் பார்க்கிறார் என்கிறார்கள். அது ஏன் என்பதற்கு சிறுத்தைகள் தரப்பிலேயே கூறும் காரணம் இதுதான். கடந்த நாடாளுமன்றத் தேர்த-ன் போது இந்த ஆதவ் அர்ஜுனுக்காக தி.மு.க.விடம் ஒரு பொதுத் தொகுதியைக் கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடியது. ஆனால் அது கிடைக்கவில்லை. இத னால் தி.மு.க. மீது எரிச்சலான ஆதவ் அர்ஜுன் இப்போது, ’இனி நமக்கு அ.தி.மு.க. கூட்டணிதான். அதன் மூலமே கூட்டணி ஆட்சியும் அமைச்சரவையில் நமக்கு இடமும் அமையும்’ என்கிற எண்ணத்தை சிறுத்தைகள் மத்தியில் உருவாக்கி வருகிறாராம்.''

nkn180924
இதையும் படியுங்கள்
Subscribe