"ஹலோ தலைவரே, அரசியல் பரபரப்புகளுக்கு நடுவே, சென்னையில் பள்ளி மாணவிகள் ராகிங் செய்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது’போலிருக்கிறதே?''”

Advertisment

"ஆமாம்பா, புதிதாகச் சேர்ந்த ஒரு மாணவியை சீனியர் மாணவிகள் ராகிங் செய்து மிரட்டியிருக்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, சென்னை அண்ணா நகரில் இருக்கிறது எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி. மத்திய கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் இப்பள்ளியில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் அமலில் இருக்கிறது. பெரும்பாலும், பிரபலங்களின் வாரிசுகள்தான் இங்கே படித்துவருகிறார்கள். இந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது நிறைய குற்றச்சாட்டுகள்  நிலவிவந்த நிலையில்... இப்போது இங்கே ராகிங் பிரச்சினையும் எழுந்திருக்கிறது.  சமீபத்தில் மாணவிகள் சிலர், புதிதாகச் சேர்ந்த மாணவி ஒருவரைக் கடுமை யாக ராகிங் செய்தி ருக்கிறார்கள்.  அவர் களிடம் சிக்கிக் கொண்ட மாணவி, கலங்கிப்போயிருக்கிறார். ஒரு கட்டத்தில் நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால், உன் மீது ஆசிட் அடிப்போம் என்கிற அளவுக்கு அவர்கள் எல்லைமீறிப் போயிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை  பிரின்சிபல் வரை சென்றும், ராகிங்கில் ஈடுபட்ட மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, அரசின் மேலிடம் வரை புகார் செய்திருக்கிறார். இது குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது. இதில் போலீசார் தலையிடுகிறார்கள் என்று தெரிந்ததும், பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராக, ராகிங்கில் ஈடுபட்ட மாணவிகளில் ஒருவரிடம் இருந்தே ஒரு புகாரை, முன் தேதியிட்டு வாங்கி, அதை போலீசிடம் காட்டி, பிரச்சினை யைத் திசை திருப்பப் பார்த்திருக்கிறது.  அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்த இந்த விவகாரம், இப்போது, "க்ரைம் அகைன்ஸ்ட் விமன் அண்ட் சைல்டு பிரிவு'க்கு மாற்றப்பட்டிருக்கிறது.''” 

"அதை போலீஸ் பார்த்துக்கட்டும். அ.தி.மு.க. மாஜி மந்திரி செல்லூர் ராஜுவை, எடப்பாடி தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாகச் சொல்கிறார்களே?''”

Advertisment

"கடந்த 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியத்தைப் பார்வையிட வந்த எடப்பாடியை ஊர் எல்லையில், அ.தி.மு.க. மாஜி மந்திரி செல்லூர் ராஜு தலைமையில் அக்கட்சியினர் வரவேற்றனர். பின்னர் வழக்கமான நடைமுறைப்படி, எடப்பாடியின் காரில் ஏறப்போனார் செல்லூரார். உடனே முன் இருக்கையில் இருந்த எடப்பாடி, "அண்ணே வண்டியில் ஏறாதீங்க. பின் கதவை ஏன் திறந்தீங்க. முதல்ல மூடுங்க'’என அவரைத் தடுத்துவிட்டார். கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை இப்படி ஓரங்கட்டியதால் முகம் இறுகிப்போனார் செல்லூர். இது காணொலிக் காட்சியாகவும் பரவ, அ.தி.மு.க. தரப்பில் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டது. இது குறித்து செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது ’"காருக்குள் முன்னாள் அமைச்சர் காமராசு மற்றும் செக்யூரிட்டிகள் இருந்தார்கள். அதை நான் கவனிக்கவில்லை. இசட் பிரிவு பாதுகாப்பு என்பதால்தான் இப்படி'’ எனச் சிரித்து மழுப்பினார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி, மீண்டும் ஒரு சங்கட அனுபவத்தை எடப்பாடி மூலம் சந்தித்தார்.''”

"திருமங்கலத்திலா?''”

sellurraj1

"ஆமாங்க தலைவரே, தென்மாவட்ட பிரச்சாரப் பயணத்தை முடித்துவிட்டு சேலம் கிளம்பும்முன், மதுரை திருமங்கலம் எல்லையில்  கட்சியினரை சந்திக்க வந்தார் எடப்பாடி. அவர்களின் வரவேற்புக்குப் பின்,  சாப்பிட ஓட்டலுக்கு சென்றார் எடப்பாடி.  அப்போது செல்லூர் ராஜூ 6 பேர் அமரக்கூடிய மேஜையைக் காட்டி, ‘"வாங்கண்ணே'’ என்று எடப்பாடியை அழைக்க, அவர் அதைக் கண்டுகொள்ளாமல் 4 பேர் அமரும் வேறொரு டேபிளில் மாஜி காமராஜ், உதயகுமார், இராஜேந்திர பாலாஜி ஆகியோ ருடன் போய் அமர்ந்துகொண்டார். இதிலும் அவமானத்தைச் சந்தித்தார் செல்லூர் ராஜு. எடப்பாடியின் இந்தப் புறக்கணிப் புக்குக் காரணம், அண்மையில் செல்லூராரின் 200 கோடி கருப்புப் பணம் கொள்ளை போனதை, முதலில்  தன்னிடம் தெரிவிக்காமல், அவர் தி.மு.க. அமைச்சர் மூர்த்தி மூலம்  முதல்வர் ஸ்டாலினின் உதவியைப் பெற்றதை, எடப்பாடியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லையாம். இதனால் அவரைத் தொடர்ந்து அவமானப்படுத்தியும் புறக்கணித்தும் வருகிறாராம் எடப்பாடி. இதனால் செல்லூர் ராஜு அடுத்த கட்டம் பற்றி யோசிக்கிறாராம்.''

"நயினாருக்கு அ.தி.மு.க.வினர் ஷாக் கொடுத்திருக் கிறார்களே?''”

Advertisment

" "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்று தொகுதி வாரியாக பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி, தனது ஏரியாவான நெல்லை வந்தபோது, அவரை கௌரவிக்கும் வகையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் அவருக்கு தடபுடலாக விருந்து கொடுத்தார். இதற்குக் காரணம், அவர் மனதைக் குளிர்வித்து எப்படியாவது அவரிடமிருந்து  நெல்லைத் தொகுதியை தனக்குப்  பெற்றுவிட வேண்டும் என்பதற்காக வாம். மேலும், லோக்கல் அ.தி.மு.க. வினர்  நெல்லையில் நயினார் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அவருக்கு ஒத்துழைப் பும் தருவதில்லையாம். இதையெல் லாம் சரி செய்யவே, எடப்பாடி யுடன் அ.தி.மு.க. நிர்வாகிகளையும் வருந்தி வருந்தி அழைத்து விருந்துவைத்தாராம் நயினார். இந்த விருந்தின் போது, எடப்பாடியைச் சந்தித்த தொகுதி அ.தி.மு.க. புள்ளி கள்,’எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த 1977லிருந்து 2016வரை  நெல்லை தொகுதி அ.தி.மு.க.வின்  முகவரி யாக இருந்து வந்திருக்கிறது. இது, கூட்டணி என்ற பெயரில் இடையில் பா.ஜ.க. வசம் போனதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது மீண்டும் அ.தி.மு.க.விற்கே வேண்டும்’ என அழுத்தமாகத் தெரிவித்தார்களாம். தான் வைத்த விருந்திலேயே தனக்கு எதிராக அ.தி.மு.க.வினர் வெடி கொளுத்திப் போட்டதை எண்ணி நொந்துபோன நயினார், வரும் தேர்தலில் விருதுநகர் மாவட்ட சாத்தூர் தொகுதிக்கு இடம் மாறலாமா? என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம்.''”

"பா.ஜ.க. மாநில முன்னாள் நிர்வாகி, தற்போது அரசியல் வியூக வகுப்பாளர் சுனிலுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் என்கிறார் களே?''”

"ஆமாங்க தலைவரே, தனக்கு கட்சியில் பெரிய பொறுப்போ, மத்திய அமைச்சர் பதவியோ கிடைக்கும் என்று பா.ஜ.க. மாஜி மாநில நிர்வாகி, எதிர்பார்த்து எதிர்பார்த்து மனம்வெறுத்துப் போய்விட்டாராம். எனவே அவர் விரைவில் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறாராம். தனக்கு கட்சியில் புதிய பொறுப்பு தருவது பற்றி மோடி உறுதிகொடுக்கவில்லை என்றால், தனிக்கட்சி ஒன்றைத் தொடங்க அவர் திட்டமிட்டி ருக்கிறாராம்.  இதையே அவரது மனைவியும் அவரிடம் வற்புறுத்தி வருகிறாராம். எனவே அந்த பா.ஜ.க. மாஜி நிர்வாகி, புதுக்கட்சி தொடங்குவது குறித்து, வியூக அமைப்பாளர் சுனிலுடன் தீவிர ஆலோ சனையில் இருக்கிறார் என்கிறது அவர் தரப்பே.''”

"ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வின் பொதுக்குழு 17ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப் பட்ட நிலையில், அன்புமணியும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டியிருக்கிறாரே?''’

"அன்புமணி கூட்டிய பா.ம.க. பொதுக்குழு வுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த ரிட் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்தார். இதனையடுத்து, மாமல்லபுரத்தில் தனது தலைமை யில் பா.ம.க. பொதுக்குழுவைத் திட்டமிட்டபடி நடத்தி முடித்திருக்கிறார் அன்புமணி.  இதில் பொதுக் குழு உறுப்பினர்கள் உட்பட 3,000 பேர் கலந்துகொண்டனர். கட்சியின் விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட் கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உட்கட்சித் தேர்தலை ஓராண்டுக்கு தள்ளி வைப்பதாக அறிவித்ததோடு, அதுவரை கட்சித் தலைவராக அன்புமணி, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாள ராக திலகபாமா ஆகியோர் தொடர்வர் என்பது உள்ளிட்ட 19 தீர்மானங்களை இதில் நிறைவேற்றி னர்.  இதற்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்கியதாக தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் அது தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைத்திருக்கிறார் அன்புமணி.''” 

"’அது சரிப்பா, பூம்புகாரில் ராமதாஸ்  நடத்திய மகளிர் மாநாட்டுக்குக் கூடிய கூட்டம், அன்புமணி தரப்பை அதிரவைத்துவிட்டது என்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, அதற்கு முன்பு, அன்புமணி கூட்டிய பொதுக்குழு பற்றி ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,  "அதுபற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை' என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டார் ராமதாஸ். அவர் பூம்புகார் மகளிர் மாநாடு  பற்றிய  சிந்தனையியே இருந்ததால் அன்புமணியின் பொதுக்குழு பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வில்லையாம். அதேபோல் பூம்புகாரில் மகளிர் பெருவிழா

selluraj1

மாநாட்டை, கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் வெற்றிகரமாக ராமதாஸ் நடத்தினார். அதற்கு தன் மனைவியையும் அவர் அழைத்துச் சென்றது, பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.  ராமதாஸின் மகள் காந்திமதி  மகன் முகுந்தனை மீண்டும் பா.ம.க. இளைஞரணிச் செயலாளராக, ராமதாஸ் அறிவிக்கவிருக்கிறாராம். இந்த நிலையில், ராமதாஸுக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து அன்புமணி பெரும் அதிர்ச்யடைந்திருக்கிறாராம்.''”

"திருப்புவனம் கோயில் ஊழியர் அஜித்குமார் விவகாரத்தில் நிகிதா கைதாவார் என்று டாக் அடிபடுகிறதே?''”

"கோயில் ஊழியர் அஜித்குமார் கொடூர மாகத் தாக்கிக் கொல்லப்பப்பட்ட விவகாரத்தில், மூலப்புள்ளியாக இருக்கும் நிகிதா பற்றிய வில்லங் கத் தகவல்கள் தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது.  தன் காரை அஜித், வடகரை  பகுதியில் ஓட்டியதாக வும் அப்போதுதான்  நகை காணாமல் போனது என்றும்  நிகிதா அப்போது போலீஸிடம் தெரிவித் திருந்தார். இந்த விவகாரத்தை விசாரித்துவரும் சி.பி.ஐ., டீம், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. ஃபுட் டேஜ்களை ஆராய்ந்துவிட்டு, வடகரை பகுதி யில் அஜித் காரை ஓட்டவில்லை என்பதையும், நிகிதாவே காரை ஓட்டிச்சென்றார் என்பதையும் கண்டு பிடித்திருக்கிறது. எனவே, நிகிதா கொடுத்ததே பொய்ப் புகார் என்பதையும் அவர்கள் கண்டறிந் திருக்கிறார்கள். எனவே விரைவில் நிகிதா கைது செய்யப்படுவார் என்கிறது காவல்துறைத் தரப்பு.''”

"நானும் ஒரு தகவலை சொல்றேன் தலைவரே... தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியிருப்பதை ஆதரித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள முதல்வர் ஸ்டாலின்,  'வாக்காளர் பட்டியல் முறைகேடு என்பது நிர்வாக குளறுபடி அல்ல... அது பெரும் சதி. மக்களின் தீர்ப்பை திருடுவதற்காக திட்டமிட்ட சதி. மக்களாட்சியை திருடுகிற, இந்திய ஜன நாயகத்தைக் கொள்ளையடிக்கிற பா.ஜ.க.வின் போக்கை வேடிக்கை பார்க்க முடியாது. இந்திய தேர்தல் ஆணையத்தை, தேர்தல் மோசடிக்கான இயந்திரமாக மாற்றி இருக்கிறது பா.ஜ.க. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட ஆதாரங்கள், தேர்தல் ஆணையத்தின் மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. வாக்கு மோசடிக்கு எதிரான ராகுல் காந்தியின் போராட்டத்துக்கு தி.மு.க. தோளோடு தோளாக துணை நிற்கும்' என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்"