கை, காலைக் கட்டி செக்ஸ்  சித்ரவதை... திருமணமாகி 77 நாள்கள்... புதுப்பெண் தற்கொலை!

rithanya

 

 

"போலீஸோ, வேறு யாரா வதோ கேட்டால், எனக் காக நீங்க தலை குனிய வேண்டாம். இதை போட்டுக் காமிச்சிருங்க. என்னோட இந்த முடிவுக்கு என்னோட திருமண வாழ்க்கைதான் காரணம். உடல்ரீதியாவும், மனரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன். என் கல்யாண வாழ்க்கையே மோசமா போயிருச்சு. என்னை மன்னிச்சிருங்கப்பா... என்னை மன்னிச்சிருங்கம்மா!''  திருமணமாகி 77 நாட்களில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் குரல் பதிவின் வரிகள் இவை. இதுபோல் 10 குரல் பதிவுகள்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிபுதூர் பகுதி யைச் சேர்ந்தவர்கள் அண்ணாதுரை -ஜெயசுதா தம்பதி யினர். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் அண்ணா துரைக்கு அரசியல் ஆர்வம் இருந்ததால் ஈரோடு இடைத்தேர்தலில் இந்து திராவிட மக்கள் கட்சி சார்பாக ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றவர். இருப்பினும், பாரம்பரிய அரசியல்வாதியான காங்கிரஸின் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ண னின் மகன் வழிப்பேரனான கவின்குமாரை, மகள் ரித்தன்யாவிற்கு மணம்முடித்து வைத்து அர சியல் ஆசையை பூர்த்தி செய்துகொண்டார். 

கடந்த சனிக்கிழமையன்று பிற்பகல் 1 மணியளவில், ரித்தன்யா மொபைல் எண்ணி லிருந்து ஜெயசுதாவிற்கு, "இங்கு செட்டிபுதூர் பகுதியில் சாலையோரம் பச38 ஆழ888 என்ற எண் கொண்ட ஸ்கோடா காருக் குள் ஒரு பெண் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் இருக்கின்றார்' என அழைப்பு வந்திருக் கின்றது. அரக்கபரக்க சென்றவர்களுக்கு, அந்தப் பெண், திருமணமாகி 77 நாட்களே ஆன தங்களது மகள் ரித்தன்யாதான் எனத் தெரிந்திருக் கிறது. தென்னை மரத்துக்கு பயன்படுத் தும் பூச்சி மருந்தான டஆததவஞஎந-ஐ உட்கொண்டதால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்லுமுன் ரித்தன்யாவின் உயிர் பாதி வழியிலேயே பிரிய, முதலில் "தற்கொலை' என சேயூர் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

rithanya1

எதற்கு தற்கொலை என அனைவரும் விழி பிதுங்கி நிற்கையில், ரித்தன்யாவின் செல்போன் கண்ணில்பட, அதன் "நெட்'டை ஆன் செய்தபோது தான் விபரீதமே தெரிந்தது. அழுதவாறு தன்னுடைய அப்பா அண்ணாதுரைக்காக பேசிவைத்த தற்கொலை குறித்தான 10 குரல் பதிவுகள் வெளியாகின. 

அதில், "இந்த வாழ்க்கையை இனி என்னால் வாழமுடியாது. மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க எனக்கு உடன்பாடு இல்லை. என்னுடைய தற்கொலை முடிவிற்கு காரணம் கணவன் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகி யோரே' எனவும், "உடல்ரீதியாக, மன ரீதியாக சித்ரவதை அனுபவித்ததாலேயே தற்கொலை முடிவை எடுக்க நேர்ந்தது' என விலாவாரியாக கவின்குமார் குடும்பம் நடத்திய திருவிளையாடல் களைக் கூறியிருக்கிறார் ரித்தன்யா. 

"11-04-2025 அன்று, வேலாம் பாளையம் லோட்டஸ் மஹாலில் திருமணம். திருமணம் நடந்த நாளிலிருந்து ரித்தன்யா மனஉளைச்சலில் இருந்தாள். ஒவ்வொரு தடவையும் அவ வீட்டிற்கு வரும்பொழுது எதையோ பறிகொடுத்தது போலத்தான் வருவாள். இப்பொழுது கூட ஒரு வாரம் அப்பா வீட்டில் இருக்கவேண்டுமென்று வந்தவளை, ஜூன் 27ஆம் தேதி, கணவன் கவின்குமார் வந்து பார்த்துவிட்டு சென்றான். அதற்கடுத்த நாள் ஜூன் 28ஆம் தேதி அவிநாசியை அடுத்து தாளக்கரையில் உள்ள லட்சுமி நரசிம்மபெருமாள் கோவிலுக் கும், மொண்டிபாளையம் பெருமாள் கோவிலுக்கும் சென்று வருவதாகக் கூறிவிட்டு காரை, தானே ஓட்டிக்கொண்டு சென்றாள். ஆனால் வரும்வழியில் இந்த முடிவை எடுத்திருக்கிறாள்'' என்கிறார் ரித்தன்யாவின் சித்தப்பா பூபதி.

திருமணமான இரண்டாவது வாரத்திலேயே கணவன் கவின்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட, தந்தையின் வீட்டிற்கு வந்திருக்கிறார் ரித்தன்யா. ஆனால் கணவன் வீட்டில் நடந்தது குறித்து எதுவும் அம்மாவிடம் கூறவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு தந்தையின் சமாதானத்தால் கணவர் வீட்டிற்கு சென்ற ரித்தன்யாவிற்கு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டிருக்கின்றது. இதனிடையே, வெளியில் சென்றால் பிரச்சனை தீரும் என்ற யோசனையில் திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு மணமக்களை அனுப்பி வைத்திருக்கின்றார் அண்ணாதுரை. இது இப்படியிருக்க, கடந்த 22ஆம் தேதி கவின்குமாருடன் தந்தை வீட்டிற்கு வந்த ரித்தன்யா, யாருடனும் எதுவும் பேசவில்லை. 27ஆம் தேதி கவின்குமார் வந்து சென்ற மறுநாள் தற்கொலை முடிவை எடுத்திருக்கின்றார் ரித்தன்யா. 27ஆம் தேதி ரித்தன்யாவை சந்திக்கவந்த கவின்குமார், என்னைப் பற்றி உனது வீட்டில் எதுவும் பேசக்கூடாது. பேசினால் தற்கொலை செய்து கொள்வேன்' என மிரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கு குறித்து திருப்பூர் கோட்டாட்சியர் மோகன சுந்தரம் மற்றும் அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் ரித்தன்யாவின் உடல் வைக்கப்பட்டிருக்க, திருமணமாகி 77 நாட்களில் புது மணப்பெண் தற் கொலை செய்து கொண்டதால் திருப்பூர் கோட் டாட்சியர் மோகனசுந்தரம், அவிநாசி அரசு மருத்துவமனையி லேயே ரித்தன்யாவின் பெற்றோர், கணவர், மாமனார் மற்றும் மாமியார் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் விசா ரணை மேற்கொண் டார். விசாரணை முடிந்து வெளியேவந்த கவின் குமார், ஈஸ்வர மூர்த்தி மற்றும் சித்ரா தேவி ஆகியோரை ரிதன்யாவின் தம்பி மிதுன் ஆதித்யா மற்றும் உறவினர்கள் ஆத்திரத்துடன் தாக்க முற்பட, அவர்களிடமிருந்து தப்பித்து மூவரும் காரில் ஏறி அரசு மருத்துவமனையை விட்டு வெளியே சென்றனர். இதே வேளையில், தற்கொலைக்கு காரணமான மூவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென்று கூறி அவிநாசி - சக்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் ரித்தன்யாவின் உறவினர்கள். 

முதலில் சாதாரண தற்கொலை வழக்காகப் பதிவு செய்த நிலையில், ரித்தன்யாவின் 10 குரல் பதிவுகளைக்கொண்டு, ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை தற்கொலைக்கு தூண்டுதல், துன்புறுத்துதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர். 

rithanya2

ரித்தன்யாவின் தந்தை அண்ணாதுரையோ, "திருமணத்தின்போது 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 300 பவுன் நகை கொடுத்தோம். திருமணச் செலவு மட்டும் 2 1/2 கோடி ரூபாய். வாடகை வருமானம் மட்டும் இருந்ததால் கவின்குமார் வேலைக்கு செல்லவில்லை. இதுகுறித்து ரித்தன்யா கேட்டதால், "அவனவன் மாப்பிள்ளை வேண்டுமென் றால் ரூ.100 கோடி செலவில் பிசினஸ் வைத்துத் தருகிறார்கள். எனக்கு பிசினஸ் வச்சுக் கொடுத்துட்டு இதுபற்றி கேள்' என்றிருக்கிறான். அதைவிடக் கொடூ ரம், தந்தையிடம் சொல்லமுடி யாத அளவுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளான். இது குறித்து அவனுடைய பெற்றோரிடம் ரித்தன்யா கூறியதற்கு, "என் மகன் படுக்கை யில் உன்னிடம் வேறு மாதிரி எதிர்பார்க் கிறான்' என மாமனார் பேசி இருக்கின்றார். இதனை எல்லாம் கேட்ககூடிய அளவில் நான் ஏன் உயிருடன் இருக்கிறேன்?'' என அழுது அரற்றினார்.

"மகளைக் கொடுத்து விட்டதால் அவனை மகன் போலவே பாவித்தோம். அவர்களுடன் இணக்கமாகப் பலமுறை முயற்சித்தோம். விளையாட்டுக்கு கேட்பது போல தொழில் வைத்துத் தர கேட்டார்.  நான் கூட விளையாட் டாகக் கேட்பதாக நினைத்துவிட்டேன். ஆனாலும் எனது கணவர் தொழில் வைத்துத் தர நினைத்தார். என் மகளைக் கொடுமையாக நடத்தியுள்ளனர். நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்று எனது மகளை சொல்லமுடியாத அளவிற்கு வேதனைப்படுத்தியுள்ளனர். வீட்டில் விளக்கு ஏற்றினாலும் குற்றம். எங்கும் எனது மகளைக் கூட்டிச் செல்வதில்லை. அவர்கள் மட்டுமே வெளியில் செல்வார்கள். அப்படிச் செல்லும்போது வீட்டின் கதவிலிருந்து தெருக்கதவு வரை பூட்டிவிட்டுத்தான் செல்வார்கள். இதைவிடக் கொடூரம், மகள் ரித்தன்யாவின் கை கால்களைக் கட்டி பல வகைகளில் செக்ஸ் டார்ச்சர் செய் துள்ளான். என்ன வக்கிர புத்தியோ? அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அப்போது தான் எனது மகள் ஆத்மா சாந்தியடையும்" என்கிறார் ரித்தன்யாவின் தாய் ஜெயசுதா.

ரித்தன்யா தற்கொலை செய்துகொண்ட பின்பு, காரிலிருந்து அவரது உடல் மீட்கப்படும் காட்சி களை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள் ளார். அந்த வீடியோவில், தனது மகளின் உடலை கண்டு அவரது தாயார் ஜெயசுதா, கதறித் துடித்தது, கல்மனதை யும் கலங்க வைப்பதாக இருந்தது.

படங்கள்: மன்சூர் அகமது

nkn050725
இதையும் படியுங்கள்
Subscribe