அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு கல்லூரியில் பாலியல் புகார் வெடித்திருக்கிறது.
கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. போதுமான இடவசதிகள் இல்லாததால் கடந்த 2014-ல், கொடைக்கானலிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அட்டுவம்பட்டியில் விரிவுபடுத்தப்பட்டு அன்னை தெரசா பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக் கழகக் கல்லூரியில் மேல்மலை, கீழ்மலைப் பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் உட்பட சுமார் எழுநூறுக் கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார் கள். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் வசிக்கிறார்கள். கடந்த 2000-ல் எடப்பாடி ஆட்சியின்போது அன்னை தெரசா பல்கலைக்கழகத்திலேயே இருந்த கல்லூரியை மட்டும் பிரித்து, 'அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி' எனக் கொண்டுவந்தார். அதன் அடிப்படையில்தான் பல்கலைக்கழக வளாகத்திலும், வெளியிலும் இந்த மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு கல்லூரியில் பாலியல் புகார் வெடித்திருக்கிறது.
கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. போதுமான இடவசதிகள் இல்லாததால் கடந்த 2014-ல், கொடைக்கானலிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அட்டுவம்பட்டியில் விரிவுபடுத்தப்பட்டு அன்னை தெரசா பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக் கழகக் கல்லூரியில் மேல்மலை, கீழ்மலைப் பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் உட்பட சுமார் எழுநூறுக் கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார் கள். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் வசிக்கிறார்கள். கடந்த 2000-ல் எடப்பாடி ஆட்சியின்போது அன்னை தெரசா பல்கலைக்கழகத்திலேயே இருந்த கல்லூரியை மட்டும் பிரித்து, 'அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி' எனக் கொண்டுவந்தார். அதன் அடிப்படையில்தான் பல்கலைக்கழக வளாகத்திலும், வெளியிலும் இந்த மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆனால் எப்போதும் போலவே மாணவிகள் தங்கி படித்துவந்தனர். சில மாணவிகள் மட்டும் வெளியில் தங்கிப் படித்தும் வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் எனோலா, இக்கல்லூரிக்கு பொறுப்பு முதல்வ ராக இருக்கிறார். கல்லூரியில் கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இக்கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்துவரும் செந்தில் குமார், மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்து வருவதாக சென்னையிலுள்ள உயர்கல்வித்துறைக்கு புகார் வந்ததின்பேரில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டிலிருந்து கல்லூரியைப் பிரித்ததிலிருந்தே கல்லூரி முதல்வர்கள் சரிவர இல்லை. அதனால் தொடர்ந்து பொறுப்பு முதல்வர்கள் தான் இருந்து வருகிறார்கள். இவர்களும் வாரத்திற்கு ஒரு நாள், இரண்டு நாள் மட்டுமே வந்துவிட்டுப் போய்விடுவார்கள். மற்ற நாட்களில் ஆபரேட்ட ராக பணிபுரியும் செந்தில்குமார் கட்டுப்பாட் டில்தான் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்திலிருக்கும் ஹாஸ்டலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சாப்பாட்டில் புழு இருப்பதாக புரளியைக் கிளப்பினார்கள். அதைத் தொடர்ந்து, கல்லூரிக்குள்ளேயே நூலகத் திற்காக ஒதுக்கப்பட்ட அறையை ஹாஸ்டலாக கடந்த ஆண்டு மாற்றினர். அங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். இப்படி ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் மாணவிகளிடம் இந்த செந்தில்குமார் பாலியல் டார்ச்சர் செய்ததாக மாணவிகளே புகார் செய்ததன் அடிப்படையில் தான் அவரை சஸ்பெண்ட் செய் திருக்கிறார்கள். பல மாணவி களோடு தொ டர்பு வைத்துக் கொண்டு அவர் களை மிரட்டித் தன் கட்டுப் பாட்டிலும் வைத்திருக் கிறார். அதோடு, பல்கலைக் கழகத்தை சுற்றி யிருந்த யூகலிப் டஸ் மரங்களை அனுமதியின்றி வெட்டி பல லட்சத்திற்கு விற்பனை செய்திருக்கிறார். இதுபற்றியும் நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி, கல்லூரியில் சாதாரண கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருக்கக்கூடிய செந்தில் குமார், கல்லூரியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர் செய்துவருவதற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் பல்கலைக்கழக பணியாளர்கள் சிலர்.
இது சம்பந்தமாக கல்லூரி ஆசிரியரும், பி.ஆர்.ஓ.வுமான ஆர்த்தியிடம் கேட்டபோது... "எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளைப் பற்றியும், எங்களைப் பற்றியும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். கல்லூரியில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் செந்தில்குமார் மீது மாணவிகள் எந்தவொரு பாலியல் புகாரும் கொடுக்கவில்லை. வேண்டுமென்றே பாலியல் புகார் கொடுத்ததாக பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். இந்த செந்தில்குமார், கல்லூரி வளர்ச்சிக்காக சில உதவிகளை செய்து வருகிறார். அதைப் பிடிக்காமல் தான் சிலர் அவர்மீது இப்படி யெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார்கள். அதனால் நாங்களும் போலீசில் புகார் செய்யவிருக்கிறோம்'' என்று கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி செந்தில்குமாரிடம் கேட்டபோது, "மாணவிகளுக்கு நான் பாலியல் டார்ச்சர் பண்ணியதாக பொய்யான குற்றச்சாட்டை என்மீது பரப்பி வருகிறார்கள். கல்லூரியிலுள்ள விடுதியில் ஹாஸ்டல் நடத்தி வந்தது உண்மை தான். ஆனால் ஆய்விற்கு வந்த மேலதிகாரிகள் ஹாஸ்டல் நடத்தக்கூடாது என்று சொன்னதின் பேரில் ஹாஸ்டலை மூடிவிட்டோம். அதன் அடிப்படையில்தான் என்னை சஸ்பெண்ட் செய்திருப்பதாக எனக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல் யூகலிப்டஸ் மரம் வெட்டியதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று கூறினார்.
கல்லூரியில் அனுமதியில்லாமல் ஹாஸ்டல் நடத்தியதை கண்டு ஆய்விற்கு வந்த உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஹாஸ்டலை மூடிவிட்டனர். அதன் அடிப்படையில் தான் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் கல்லூரி முதல்வர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாலியல் டார்ச்சர் செய்ததாக சென்னையில் உள்ள உயர் கல்வித்துறைக்கு மாணவிகள் சிலர் புகார் அனுப்பியதின் பேரில்தான் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது என்பதுதான் உண்மை!
-சக்தி