Advertisment

காமக்களியாட்டம்! -சிக்கிய குமரி மத போதகர்!

father

 

சுவிசேஷ சபைக்கு வந்த நூற்றுக்கணக்கான பெண் களிடம் சல்லாப ஆட்டம்போட்ட கிறிஸ்தவ மத போதக ரால் பூரண சுவிஷேச பெந்தெகொஸ்தே சபை நிர்வாகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்தியா உட்பட உலகத்தின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது பூரண சுவிஷேச பெந்தெகொஸ்தே சபை. குமரி மாவட்டத்தில் இச்சபைக்கு 150க்கும் மேற்பட்ட கிளைச் சபைகள் உள்ளன. அதில் ஒன்று மேக்காமண்டபம் அருகே பாண்டிவிளையில் உள்ளது.

Advertisment

இந்த சபையின் மத போதகராக மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ரெஜிமோன் இருக்கிறார். இச்சபையை சேர்ந்த 40 வயது பெண்ணொருவர், தனக்கு உடல்நிலை சரி யில்லையெனக்கூறி போதகர் ரெஜிமோனிடம் ஜெபம்பண்ணச் சொல்லியிருக்கிறார். அதன்படி கடந்த மாதம் 23ஆம் தேதி அந்த பெண்ணை தனியாக வரவழைத்து ஜெபம் செய்வதுபோல், அவரது அந்தரங்கங்களில் கையை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட, பதறிப்போன அப்பெண் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்திருக்கிறார். இதையடுத்து தக்கலை காவல் நிலையத்தில் போதகர் மீது புகாரளித்தார். போலீசாரோ, போதகருக்கு ஆதரவாக சமரசத

 

சுவிசேஷ சபைக்கு வந்த நூற்றுக்கணக்கான பெண் களிடம் சல்லாப ஆட்டம்போட்ட கிறிஸ்தவ மத போதக ரால் பூரண சுவிஷேச பெந்தெகொஸ்தே சபை நிர்வாகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்தியா உட்பட உலகத்தின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது பூரண சுவிஷேச பெந்தெகொஸ்தே சபை. குமரி மாவட்டத்தில் இச்சபைக்கு 150க்கும் மேற்பட்ட கிளைச் சபைகள் உள்ளன. அதில் ஒன்று மேக்காமண்டபம் அருகே பாண்டிவிளையில் உள்ளது.

Advertisment

இந்த சபையின் மத போதகராக மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ரெஜிமோன் இருக்கிறார். இச்சபையை சேர்ந்த 40 வயது பெண்ணொருவர், தனக்கு உடல்நிலை சரி யில்லையெனக்கூறி போதகர் ரெஜிமோனிடம் ஜெபம்பண்ணச் சொல்லியிருக்கிறார். அதன்படி கடந்த மாதம் 23ஆம் தேதி அந்த பெண்ணை தனியாக வரவழைத்து ஜெபம் செய்வதுபோல், அவரது அந்தரங்கங்களில் கையை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட, பதறிப்போன அப்பெண் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்திருக்கிறார். இதையடுத்து தக்கலை காவல் நிலையத்தில் போதகர் மீது புகாரளித்தார். போலீசாரோ, போதகருக்கு ஆதரவாக சமரசத்தில் ஈடுபட, அப்பெண், உயரதிகாரிகளிடம் சொல்வேனெனக் கூறியதால் வேறுவழியின்றி, போதகர்மீது வழக்குப்பதிவு செய்து 26ஆம் தேதி சிறையிலடைத்தனர்.

போதகர் ரெஜிமோன் பற்றி நாம் விசாரித்ததில், பல பெண்களை பாலியல் ரீதியாகத் தூண்டிவிட்டு சீரழித்திருப்ப தாக அதிர்ச்சித்தகவலை கூறுகிறார்கள். ரெஜி மோன் ஆரம்ப காலத்தில் அவரது சொந்த ஊரில் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்டதாகவும், கிணற்று வாளிகளைத் திருடுவதால் "வாளி ரெஜி' என்ற பட்டப்பெயரும் உண்டு என்கிறார்கள். தலைமறைவான ரெஜிமோன், பின்னர் மத போதக ராக அவதாரம் எடுத்துள்ளதாகவும், ஆண்டவரால் பாவமன்னிப்பு கொடுக்கப்பட்டு ஆசிர்வதிக்கப் பட்டதாகவும் கூறி, பூரண சுவிஷேச பெந்தெகொஸ் தேயில் சேர்ந்து கடமலைக்குன்று சபையின் போதக ராக நியமிக்கப்பட்டார். அங்கு சேர்ந்த சில மாதங் களிலே, சாமிவிளையில் கணவரின்றி தனியே வசிக்கும் ஒரு பெண், தனது மகளுக்கு 10ம் வகுப்பு தேர்வெழுத ஜெபம் செய்யக் கூறி போதகரிடம் மகளை அழைத்துவந்துள்ளார். சபலமடைந்த போதகர், “உன் மகளை அதிக மதிப்பெண்களுடன் ஆண்டவர் ஜெயிக்க வைப்பார்.  ஆண்டவருக்கு என்ன கொடுப்பாய் எனக் கேட்க, அப்பெண்ணோ, என்னிடம் ஏதுமில்லையெனச் சொல்ல, உன்னிடம் இருக்கிறது, அதை ஆண்டவர் என்னிடம் சொல் வார், உன் மகள் தேர்வெழுதச் செல்லும் நாளில் நான் உன் வீட்டுக்கு வரும்போது கொடுக்க வேண்டுமெனக் கூறியிருக்கிறார். அதேபோல அன் றைய தினம் அப்பெண் தனிமையிலிருக்கும்போது வீட்டுக்கு சென்று, ஆண்டவர் உன்னழகில் மயங்கி விட்டார். அதை அனுபவிக்க என் உடம்புக்குள் ஆண்டவர் வந்துவிட்டார் எனக்கூறி மூளைச் சலவை செய்து அப்பெண்ணை அன்று தொடங்கி அவ்வப்போது அனுபவித்து வந்திருக்கிறார். அடுத்தபடியாக, அப்பெண்ணின் மகளின் மீது ஆசைப்பட, போதகரை கண்டித்த அப்பெண், மற்ற தலைமை போதகர்களிடம் சொல்லியழ, ரெஜிமோ னை சபையிலிருந்தே நீக்கிவிட்டதாகக் கூறினார்கள்.

father1

Advertisment

இதன்பின்னர் பாண்டிவிளை சபையில் சேர்ந்த ரெஜிமோன், அங்கிருந்து ஜெபம் செய்ய கெஸ்ட்டாக மோதிரமலை சபைக்கு சென்றிருக் கிறார். அப்போது, சென்னையில் சீரியல் துணை நடிகையாக இருந்த பெண், கணவனால் கைவிடப் பட்ட நிலையில் கைக்குழந்தையுடன் சபைக்கு வர, அப்பெண்ணிடம், உன் கணவருடன் சேர்த்து வைக்க ஜெபம் செய்கிறேன். ஆண்டவருக்கு கொ டுக்க வேண்டியதை கொடுத்திடு' என்று தூண்டில் போட்டிருக்கிறார். அவரது பேச்சை நம்பி பெற்றோ ருக்கு தெரியாமல் போதகரை சந்திக்க வர, வழக்கம் போல் காரியத்தை கச்சிதமாக முடித்திருக்கிறார்.

அதேபோல் செண்பகராமன்புதூரிலுள்ள சபையில் ஜெபத்துக்காக சென்றபோது, வயதுக்கு வந்த மகளோடு வந்த ஒரு தாயார், தன் மகளுக்கு மார்பகத்தில் கட்டி இருப்பதாகவும், ஆபரே ஷன் நடக்கவுள்ளதாகவும் கூறி ஜெபம் செய்யக் கேட்டிருக்கிறார். காமுக போதகரோ, நோயை ஜெபத்தால்தான் தீர்க்க வேண்டுமெனக்கூறி, மார் பகத்தில் கைவைத்து ஜெபம் செய்வதாகக்கூறி அப்பெண்ணின் மகளிட மும் பாலியல் சேட்டை செய்திருக்கிறார்.

அதேபோல், வீடுவீடாகச் சென்று ஜெபம் செய்வதாகக்கூறி, தன்வசப்படும் பெண்களிடம் அந்தரங்கமாக, “"உன் கணவரின் விந்தில் விஷம் இருக்கிறது, என் விந்திலோ பரிசுத்தம் இருக்கிறது. நான் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவன். என்னுடன் உறவு வைத்தால் நீ தீர்க்கதரிசனம் பெறு வாய்'’எனக்கூறி பல பெண்களை அனுபவித்திருக் கிறார். அதேபோல், அப்பெண்களை, பேச்சிப்பாறை காயல் மற்றும் குளங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களை மூழ்கவைத்து, கட்டியணைத்து தூக்கிவிடுவதுபோல் ஜெபம் செய்வதாகவும் வித்தியாசமாக அனுபவித்திருக்கிறார்.

வெட்டூர்ணிமடத்தில் ஒரு பெண்ணின் வீட்டில் ஜெபம் செய்யும்போது, அப்பெண்ணின் நகைகள் பேங்க் லாக்கரிலிருப்பதை அறிந்து, வங்கியிலிருக்கும் நகைகளை ஆண்டவரிடமே கொடுத்துவிடுங்களென்று மூளைச்சலவை செய்து, 35 பவுன் நகைகளை வாங்கிவிட்டு எஸ்கேப்பாகப் பார்க்க, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண், நகைகளை திரும்பக் கேட்க, ஆண்டவரிடம் கொடுத்த நகைகளை திரும்பக் கேட்டால், அந்த பாவம், உன் கணவரையும் குழந்தைகளையும் சும்மா விடாதென்று மிரட்டி பணியச்செய்திருக் கிறார். ஆண்டவனின் பெயரைச்சொல்லி காமக்களியாட்டம் ஆடிய போதகர் இப்போது தான் சிக்கியிருக்கிறார். ரெஜிமோனின் செல்போன், லேப்டாப்பையெல்லாம் ஆய்வுசெய்தால் இன்னும் பல விவகாரங்கள் வெளிவரக்கூடும்!

 

nkn160725
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe