ளவாய்ப்பட்டி ராஜலட்சுமி கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட உதிரத்தின் ஈரம் காய்வதற்கு முன்னதாகவே, தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள சிட்டிலிங் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சௌமியா, பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிரிழந்த அவலம் நிகழ்ந்திருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்டிலிங் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை-மலர் தம்பதியின் மகள் சௌமியா. இவர், பாப்பிரெட்டிப் பட்டி அரசு விடுதியில் தங்கி, அங்குள்ள அரசுப்பள்ளியில் ப்ளஸ்-2 படித்துவந்தார்.

murder

தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வீட்டுக்கு வந்திருந்தார் சௌமியா. அன்று மாலை, இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக வீடருகே ஒதுங்கினார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ரமேஷ் (22), சாமிக்கண்ணு மகன் சதீஸ் (22) ஆகி யோர் திடீரென்று மாணவிமீது பாய்ந்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயலவே, சௌம்யா கத்திக் கூச்சல் போட்டுள்ளார். எங்கே ஊர்மக்கள் திரண்டுவிடு வார்களோ என பயந்த காமுகர்கள், மாணவியின் வாயைத் துணியால் பொத்தி, கீழே கிடந்த மற் றொரு பழைய துணியால் மாணவியின் கைகளைக் கட்டிப்போட்டு, மிருகத் தனமாக கூட்டு வன்புணர்வு செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

Advertisment

மயக்கம் தெளிந்து வீட்டுக்குச் சென்ற மாணவி, வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்த விவரங்களைக் கூறியுள் ளார். பதறிய தந்தை கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்குச் சென்று மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் சொன்னார். ஆனால், போலீசாரோ "பாதிக்கப் பட்ட பெண் புகார் கொடுத்தால்தான் வழக்குப் பதிவு செய்வோம்' என்று அலட்சியமாகச் சொல்லி விட்டனர். அண்ணா மலை, இதுகுறித்து டோல் ப்ரீ எண்ணான 1077-க்கு தகவல் சொல்ல... அங்கிருந்து அரூர் போலீஸ் டி.எஸ்.பி. செல்லபாண்டியனுக்கு கேள்விகள் பறந்துள்ளன.

அதையடுத்து நவம்பர் 6-ஆம் தேதி காலை தந்தையும், மகளும் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்துக்குச் சென்ற னர். மாணவி அளித்த புகாரின்பேரில், ரமேஷ், சதீஸ் ஆகியோர்மீது போக்ஸோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய பிரிவுகளின்கீழ் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்திருக் கிறார். பின்னர், மாணவியை போலீசாரே தொப்பூரில் உள்ள வள்ளலார் மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்திருக்கின்றனர்.

சி.ஆர்.பி.சி. பிரிவு 164-ன்கீழ் மாணவியிடம் வாக்குமூலம் பெறவிருந்த நிலையில்தான் அவருக்கு உடல்நலம் மோச மடைந்துள்ளது. அதன்பிறகே, 7.11.2018-ஆம் தேதியன்று காப்பகப் பொறுப்பாளரான மாதேஸ்வரி என்பவர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். 10-ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளார். மாணவி யின் இறப்புக்குப் பின்னர் இந்த வழக்கை கொலைவழக்காக மாற்றி போலீசார் பதிவுசெய்துள்ளனர்.

Advertisment

புகார் கொடுக்கச் சென்ற மாணவி யின் தந்தையிடம் 6000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், மாணவிக்கு உடனடி யாக சிகிச்சை அளிக்காதது குறித்து விசாரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை முன்வைத்து சிட்டிலிங் மலை வாழ் மக்கள் மறியலில் இறங்கினர். அனைத்து கோரிக்கைகள், புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படு மென கலெக்டர் மலர்விழி ஒப்புக் கொண்ட பிறகே மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். நவ. 10-ஆம் தேதி இரவு, புகாரில் சிக்கிய சதீஸ் என்ற இளைஞரை ஏற்காட்டில் போலீசார் கைது செய்துள்ளனர். ரமேஷ் என்பவர் 12-ந் தேதி சரணடைந்தார்.

murder

நவம்பர் 12-ம் தேதி மதியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து வந்த இரண்டு மருத்துவர்கள் முன்னிலையில் சௌம்யாவின் பிரேத பரிசோதனை நடந்தது. அவை வீடியோ வில் பதிவு செய்யப்பட்டன.

மாணவியின் தாயார் மலர் கூறுகையில், ""உங்கள எல்லாம் கடைசி வரைக்கும் உட்கார வெச்சு சோறு போடுவேம்மானு புள்ள அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கும். எம்புள்ள வீட்டுக்குத் தூரமாயிருந்தா... எவ்வளவோ கெஞ்சியும் அவனுங்க நாசம் பண்ணிட்டானுங்களே...,'' என்று கண்ணீர்மல்கி அரற்றினார்.

""பாதிக்கப்பட்ட மாணவியை, முதலில் மாஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டுசெல்லாமல் போலீசாரே ஏன் காப்பகத்தில் சேர்த்தார்கள்? ஏன் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என் பதில் பலத்த சந்தேகம் இருக்கிறது. காப்பகத்தில் சேர்க்கச்சொன்ன murderஅதிகாரி யார்? புகார் கொடுக்க வந்தபோது மாணவியின் தந்தையை ஏட்டு ஜெயலட்சுமி என்பவர், "நடந்த சம்பவத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது' என்று மிரட்டியிருக்கிறார்'' என்கிறார் வழக்கை வெளிச்சத்துக்கு கொண்டுவர முனைப்புக் காட்டிய முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு.

கொலையாளிகளில் ஒருவரான சதீஸ், இறந்த பெண்ணுக்கு மாமன் உறவுமுறை; ரமேஷ் அந்தச் சிறுமிக்கு அண்ணன் உறவுமுறை. ரமேஷின் தாயார் மதுவிற்பனை செய்பவர் என்பதால் வழக்குப் பதிவில் காவல்துறை தாமதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. சௌமியாவிடம் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், அவருக்கு அரூர் அரசு மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். மருத்துவர் மாதேஸ்வரி என்பவர் அவருக்கு உடல்நல பரிசோதனைகளை செய்த பிறகுதான், காப்பகத்தில் சேர்த்துள்ளதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.

ஒடுக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் மீது தொடரும் பாலியல் தாக்குதல்களைக் கண்டும் காணாமல்தான் இருக்கிறது இந்த எடுபிடி அரசு.

-அ.அருண்பாண்டியன், இளையராஜா

___________________________

காக்கத் தவறிய குழந்தைகள் நலக்குழுமம்!

"மாணவியின் கொடூர மரணத்துக்கு தமிழக அரசின் சி.டபுள்யூ.சி. எனப்படும் ‘குழந்தைகள் நலக்குழுமம்’ மற்றும் டி.சி.பி.யூ. எனப்படும் மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு’ அதிகாரிகளின் அலட்சியப்போக்கும்தான் காரணம்' என்று குற்றம் சாட்டுகிறார்கள் பெற் றோர்களும் உறவினர்களும்.

fb

இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் சரவணனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""அட்டெம்ப்ட் ரேப்தான். "அரூர் ஜி.ஹெச்.சில் மருத்துவ பரிசோதனை பண்ணிட்டோம்'’என்றபடி கடந்த 6-ந் தேதி திங்கட்கிழமை கோட்டப்பட்டி காவல் நிலையத்திலிருந்து விஜயலட்சுமி என்கிற பெண் போலீஸ்தான் எங்களது உறுப்பினர் மாதேஸ்வரியிடம் மாணவியை ஒப்படைத்தார். என்ன நடந்தது? என்று விசாரித்தபோது எதையுமே சொல்ல மறுத்துவிட்டார். அப்போது நன்றாகத்தான் இருந்தார். மறுநாள், வாந்தி மயக்கம் வருகிறது என்றதால் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3:30 மணிக்கு அட்மிட் செய்தோம். முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று சொன்னார்கள், மாணவியின் பாதுகாப்புக்காக நாங்கள் அனுப்பிவைத்த பணியாளர்கள். அதற்குப்பிறகு 10-ந் தேதி இறந்துவிட்டார் என்ற தகவல் எங்களை அதிர்ச்சியடைய வைத்தது''’என்று அரசு டாக்டர்கள் மீது குற்றம் சாட்டி னார்.

"மாணவிக்கான பாது காப்பு மற்றும் சட்ட உதவிகளை நீங்கள்தானே செய்திருக்க வேண்டும்?' என்று தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர் சிவகாந்தியை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, சி.டபுள்.யூ.சி. தலைவர் சரவணன் சொன்னதை அப்படியே வழி மொழிகிறார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தின் (ஈட்ண்ப்க் ரங்ப்ச்ஹழ்ங் ஈர்ம்ம்ண்ற்ற்ங்ங்) உறுப்பினரும், dகுழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட் டப் போராட் டங்களை நடத்திவரு பவருமான ஜாக்குருதீ னிடம் நாம் ஆலோசித்தபோது, ""எந்த இடத்தில் குழந்தைகள் பாதிக் கப்பட்டாலும் அவர்களை மீட்டு அவர்களுக்கு சட்ட உதவி களையும் ஆலோசனைகளையும் வழங்கி, தமிழக அரசின் தன்னாட்சி பெற்ற குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியரை தலைவ ராகக் கொண்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்குத்தான் (District Child Protection Unit)உண்டு. இதற்காக, அந்தந்த மாவட்டத் திலும் டி.சி.பி.ஓ. எனப்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு (District Child Protection Officer) அலுவலர் உள்ளார். இவருக்குக்கீழ் 9 பணி யாளர்கள் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் பெரும்பா லும் இந்த அமைப்பை கண்டு கொள்வதே இல்லை. இந்த நிகழ்வில், மாணவியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், மருத்துவப் பரிசோதனை செய்தார்களா என்பதைக்கூட சி.டபுள்யூ.சி. உறுதிப்படுத்தவில்லை.

அதற்குப் பிறகு, அந்த மாணவியின் உடல் நிலைமை மோசமாகும்போது பெற் றோரிடமே ஒப்படைத் திருந்தால்கூட அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியிருப் பார்கள். நிர்வாக அலட்சியம் மாணவியின் உயிரைக் குடித்துவிட் டது''’என்று குற்றம் சாட்டுகிறார் அவர்.

-மனோசௌந்தர்