Advertisment

பாலியல் தொல்லை! திருச்சி பேராசிரியர் சஸ்பெண்ட்!

ss

திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிக்கும் 17 வயது மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து கருக்கலைப்புவரை கொண்டுசென்ற தாக வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் லியோ ஸ்டான்லி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல்துறையில், தான் புகார் கொடுக்கப்போவதாக மாணவி கூறியதை யடுத்து, பேராசிரியர்கள் அடங்கிய விசாகா குழு மூலம், சம்பந்தப்பட்டவர்கள் உட்பட மாணவிகள், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கல்லூரியின் முத

திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிக்கும் 17 வயது மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து கருக்கலைப்புவரை கொண்டுசென்ற தாக வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் லியோ ஸ்டான்லி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல்துறையில், தான் புகார் கொடுக்கப்போவதாக மாணவி கூறியதை யடுத்து, பேராசிரியர்கள் அடங்கிய விசாகா குழு மூலம், சம்பந்தப்பட்டவர்கள் உட்பட மாணவிகள், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கல்லூரியின் முதல்வர் பாதிரியார் ஆரோக்கியசாமி சேவியர், உதவிப் பேராசிரியருக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இச்சூழலில், பாலியல் குற்றச்சாட்டுப் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததால், 6 மாத காலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

cc

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியிடம் திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், உதவி பேராசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கல்லூரி சார்பாக சக மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவிகளுடன் உதவி பேராசிரியர் அதிக நெருக்கமாகப் பழகுபவர் என்று கூறப்படுகிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர், பாதிரியார்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பதால், பாலியல் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க பாதிரியார்கள் முடிந்தவரை முயற் சித்தனர். எனவேதான் வேறு வழியில்லாமல், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாக மாணவி தரப்பில் கூறியதால், பாதிரியார்கள் தாமாக முன்வந்து உதவிப் பேராசிரியரை 6 மாத காலத்துக்கு தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். எனினும் பேராசிரியர் மீது சட்டப் பூர்வமான நட வடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், விவகாரம் வெளியே கசிந்து பெரிதான சூழலில்... அரசியல் கட்சிகள் இவ்விவ காரத்தை கையி லெடுத்துள்ளன. தற்போது பா.ஜ.க. சார்பில், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக போஸ் டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த விவகா ரம் குறித்து கருத்துக்களைப் பெறுவதற்காக கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவி யரையும், குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவிப் பேராசிரியரையும் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், அவர்கள் நம் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டனர்.

உதவி பேராசிரியர் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை வேண்டு மென்றும், அப்போதுதான் அங்குள்ள மாணவிகள் நிம்மதியாக கல்வி பயில முடியுமென்றும் மாணவிகளின் பெற் றோர், மாணவிகள் மற்றும் பொதுமக் கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள் ளது.

கல்வித்துறையில் கருப்பு ஆடுகள் இருப்பது சமூகத்துக்கே கேடு!

nkn160923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe