க்கிரம் பிடித்த சில்மிஷ கல்லூரி ஆசிரியர் ஒருவரை, அதிரடியாக சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் துணிச்ச லான மாணவிகள்.

திருவள்ளூர் மாவட் டம் பொன்னேரியில் உள்ள உலகநாதன் நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரியில், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஆங்கில உதவிப் பேராசிரிய ராக இருக்கிறார். ஆடிப்பாடி வகுப்பறையில் பாடம் நடத்தும் இவர், மாணவிகளுக்கு, தொடர்ந்து செக்ஸ் டார்ச்சரையும் கொடுத்து வந்திருக்கிறார். இதனால் கொதித்தெழுந்த மாணவிகள் அதிரடி ஆக்ஷனில் இறங்கியிருக் கிறார்கள்.

teachers

Advertisment

இது குறித்து அந்தக் கல் லூரியை சேர்ந்த மாணவிகளிடம் நாம் கேட்டபோது, "பி.ஏ. இறுதியாண்டு படிக்கும் எங்கள் சக மாணவியான சங்கரிக்கு (பெயர் மாற்றப்பட்டிருக் கிறது) போன் போட்ட ஆசிரியர் மகேந்திரன், என் வீட்டிற்கு வந்து விட்டுப் போ என்று அழைத்திருக் கிறார். எதற்கு உங்கள் வீட்டிற்கு வரவேண்டும்? என்று சங்கரி கேட்க, அதற்கு அந்த மகேந் திரன், இப்போது நீ, இறுதி ஆண்டு படித்து வருகிறாய். உனக்கு என் இண்டர்னல் மதிப்பெண் தேவைப்படும். அதனால் என்னோடு நட்பை வளர்த்துக் கொள்வதற்காக நீ என் வீட்டுக்கு வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். உடனே அவர் மறைமுகமாக மிரட்டுகிறார் என்பதைப் புரிந்துகொண்டு, எனக்கு இத்தகைய நட்பு தேவை இல்லை என்று கூறி, அவரது அழைப்பை ஏற்க மறுத்தாள் சங்கரி. ஆனாலும் விடாமல் அந்த மகேந்திரன், சங்கரியை வரச்சொல்லி வற்புறுத்த இதனால் சங்கரி கொதித்துப் போய்விட்டாள். வகுப்பறை யிலும் தொடர்ந்து இரட்டை அர்த்தத்தில் பேசியும், ஆபாச அசைவுகளோடு அவர் டான்ஸ் ஆடி வந்ததற்கும் முடிவு கட்டவேண்டும் என்று முடிவெடுத்த சங்கரி, அந்த உரையாடல் பதிவைப் பத்திரப்படுத்திக் கொண்டாள். அது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பானது. இதன் பின் முதல்கட்டமாக எங்கள் கல்லூரி முதல்வர் சேகரிடம், இந்த ஆதாரத்துடன் சங்கரி புகார் அளித் தாள்''’என்றார்கள், விடுதலை கிடைத்த நிம்மதியோடு.

இந்தப் புகாரின் அடிப்படையில் மூன்று பெண் பேராசிரியர்கள் அடங்கிய மகளிர் குறை தீர்ப்பு குழுவினர் பாதிக்கப்பட்ட சங்கரி உள்ளிட்ட மாணவிகளிடமும், அந்த உதவிப் பேராசிரியர் மகேந்திரனிடமும் விசாரணை நடத்தியது. அதில் மாணவியின் பாலியல் புகார் உறுதி செய்யப்பட, மகேந்திரன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி நிர்வாகம் உயர்கல்வித் துறைக்கு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் மேலும் சில மாணவிகள் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி காவல்துறையினர் நேரடியாக கல்லூரிக்கே சென்று, அந்த வில்லங்க உதவிப் பேராசிரியர் மகேந்திரனைக் கைது செய்தனர்.

அவரைத் தங்கள் வாகனத்தில் போலீஸ் அழைத்துச் சென்றபோது, கல்லூரி வாசலில் கூடியிருந்த மாணவர்கள், அவரைத் தாக்க முயன்றனர். இதில் அந்த வாகனம் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கைதான மகேந்திரன் மீது, பொன்னேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் பெண் வன்கொடுமை, மானபங்கப்படுத்துவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்தனர். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவரை புழல் மத்திய சிறையில் கொண்டுபோய் அடைத்தனர்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, "மாணவிகளிடம் மோசமாக நடந்துகொண்ட உதவிப் பேராசிரியர் மகேந்திரனைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகையையும் அவருக்கு வழங்கக்கூடாது. மகேந்திரனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், அவருக்குத் துணை போன கல்லூரி முதல்வரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்''’என்று தெரிவித்த மாணவர்கள், நேரம் ஆக ஆக ரகளையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஸ்பாட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், போராடிய மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உரியநடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கொடுத்த வாக்குறுதியைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

மாணவர்களிடம் இதுபோல் வக்கிரத்தைக் காட்டும் ஆபாச ஆசிரியர்கள் மீது கடுமையாகவும் உடனடியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் இதுபோன்ற விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.