திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் "ஓபல்' விடுதியில், இணையதளச் சேவை அளிப்பதற்காக கடந்த 29ஆம் தேதி, ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் தனியாக இருந்த மாணவியிடம், ஊழியர்களில் ஒருவரான கதிரேசன் என்பவர், பாலியல்ரீதியான சைகை செய்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் அறையிலிருந்து வெளியேறி சத்தம் போட்டுள்ளார். அங்கி ருந்த மற்ற மாணவிகள் உடனடி யாக அந்த ஒப்பந்த ஊழியர் கதி ரேசனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது, திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியிடம், அங்குள்ள காவலர் அநாகரிகமாகப் பேசிய தாகவும் கூறப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NIT_0.jpg)
அதேபோல், இவ்விவ காரத்தில், விடுதிக் காப்பாளர்கள் சமீராபேகம், பேபி ஆகியோர் மாணவிகளுக்கு ஆதரவாக இல்லாமல், மாணவிகளின் ஆடை குறித்து விமர்சனம் செய்துள்ளதாகத் தெரிகிறது. அதையடுத்து, விடுதிக் காப் பாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு எதிராக என்.ஐ.டி. மாணவ, மாணவிகள் ஒன்றி ணைந்து விடிய விடியப் போராட்டம் நடத்தினர்.
இவ்விவகாரம் குறித்து விமர்சனம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் தளப்பதி வில், "தமிழ்நாட்டில் ஒரு நிர்பயா சம்பவம் நடந்தால்தான் சட் டத்தை கையிலெடுக்குமா இந்த தி.மு.க. அரசு?' என்று கேள்வி யெழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இந்த சம்ப வத்தையறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார், உடனடி யாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, மாணவி யிடம் அத்துமீறிய கதிரேசனை உடனடியாக கைது செய்தார். மேலும் சம்பந்தப்பட்ட மாணவி யிடம் பேசியதோடு, விடுதி நிர்வாகத்திடமும், என்.ஐ.டி. நிர்வாகத்திடமும் பேசி மாணவ, மாணவிகளின் போராட்டத்தை வாபஸ் பெறவைத்தார். இந் நிலையில். விடுதிக்காப்பாளர்கள் தங்கள் செயலுக்காக மன்னிப்பு கேட்டனர். மேலும், "ஓபல்' விடுதி யில் தற்காலிக பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர் பாக எடப்பாடி பழனிசாமியின் பதிவுக்கு மறுப்பு தெரிவித்து திருச்சி மாவட்ட காவல்துறை யின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், என்.ஐ.டி.யில் மாணவிகளின் விடுதியில் நடந்த அசம்பாவிதம் குறித்து நேரில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, கதிரேசன் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
மேலும், கல்லூரி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உறுதுணையாக இல்லாமல், பொறுப்பை தட்டிக் கழித்ததால், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராட்டத்தில். ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு எட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகங்கள்தான் மாணவ, மாணவிகளின் பாது காப்பில் பொறுப்போடு செயல்படவேண்டுமென்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-துரை.மகேஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/nit-t.jpg)