Advertisment

மருத்துவமனையில் பாலியல் தொல்லை! -நாகர்கோவில் பரபரப்பு!

ss

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத் துவக் கல்லூரி மருத்துவ மனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர், மருத்துவமனையின் உண்டு உறைவிட மருத்துவர் (ஆர்.எம்.ஓ.) ஆண்டனி சுரேஷ்சிங் தன்னை தொடர்ந்து பாலியல் தொந்தரவுசெய்வதாக, கடந்த 21ஆம் தேதி கோட்டார் காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

bb

ஏற்கெனவே, குலசேகரத்தில் பேராசிரி யரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவி சுகிர்தா விவகாரம் அடங்குவதற்குள், மீண்டும் மருத்துவர் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்த, புகாரின்மீது ரகசிய விசாரணை செய்து, மருத்துவர் ஆண்டனி சுரேஷ்சிங்கை கைது செய்தனர்.

Advertisment

ஆண்டனி சுரேஷ்சிங் கைது செய்யப் பட்டதுமே அவர்மீதும், லேப் டெக்னீசியன் வைரவன் மீதும், காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்தின் வாட்ஸப் மூலமாக மேலும் ஒரு பெண் மருத்துவர் உட்பட 5 பயிற்சி பெண் மருத்துவர்கள் பாலியல் புகாரளித்ததால், கடந்த 25ஆம் தேதி வைரவனையும

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத் துவக் கல்லூரி மருத்துவ மனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர், மருத்துவமனையின் உண்டு உறைவிட மருத்துவர் (ஆர்.எம்.ஓ.) ஆண்டனி சுரேஷ்சிங் தன்னை தொடர்ந்து பாலியல் தொந்தரவுசெய்வதாக, கடந்த 21ஆம் தேதி கோட்டார் காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

bb

ஏற்கெனவே, குலசேகரத்தில் பேராசிரி யரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவி சுகிர்தா விவகாரம் அடங்குவதற்குள், மீண்டும் மருத்துவர் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்த, புகாரின்மீது ரகசிய விசாரணை செய்து, மருத்துவர் ஆண்டனி சுரேஷ்சிங்கை கைது செய்தனர்.

Advertisment

ஆண்டனி சுரேஷ்சிங் கைது செய்யப் பட்டதுமே அவர்மீதும், லேப் டெக்னீசியன் வைரவன் மீதும், காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்தின் வாட்ஸப் மூலமாக மேலும் ஒரு பெண் மருத்துவர் உட்பட 5 பயிற்சி பெண் மருத்துவர்கள் பாலியல் புகாரளித்ததால், கடந்த 25ஆம் தேதி வைரவனையும் போலீசார் கைதுசெய்தனர். தமிழ்நாட்டிலிருக்கும் ஒரே ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையான இங்கு, நூற்றுக்கணக்கான உள் நோயாளிகளும், வெளி நோயாளிகளும் தமிழ்நாடு முழுவதுமிருந்து சிகிச்சை பெறுகிறார்கள். பாலியல் தொல்லையில் இன்னொரு காசி போன்ற மருத்துவர் குறித்தும், லேப் டெக்னீசியன் குறித்தும் அங்குள்ளவர்களிடம் விசாரித்தோம்...

nn"ஆண்டனி சுரேஷ்சிங் செல்போன் முழுவதும், இங்கு படிக்கிற மாணவிகள், பயிற்சி பெண் மருத்துவர்கள், சிகிச்சைக்கு வரக்கூடிய பெண்களின் நம்பர்களாகத்தான் இருக்கும். தன்னுடைய பதவியை சாதகமாக்கி, பாலியல் இச்சைக்கு வளைக்கப் பார்ப்பார். இவருக்கு உடந்தையாக ஒரு பெண் மருத்துவரும் மூன்று செவிலியர்களும் இருக்கிறார்கள். இவற்றை யெல்லாம் டீன் கிளாரன்ஸ்டேவி கண்டுகொள்வ தில்லை. தன்னிடம் பணி நிமித்தமாக சற்று சிரித்துப் பேசினாலும் அவர்களைத் தொட்டுப் பேச முயற்சிப்பார். வாட்ஸப்பிலும் தொந்தரவு செய்வார். அதேபோல் பெண் மருத்துவர்களிடம், "தாய்லாந்தின் தாய் மசாஜ் தெரியுமா? மனதை உற்சாகப்படுத்தும் அந்த மசாஜ் எனக்கு நன்றாகத் தெரியும். நான் செய்துவிடவா?' எனக்கேட்டு தொந்தரவு செய்யும் இவரைப் பார்த்து பயிற்சி பெண் மருத்துவர்கள் நடுங்கியிருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்தபோதும் பலருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததால்தான் ஓராண்டுக்கு முன் இங்கு மாற்றப்பட்டார். இங்குள்ள டீன் இவருக்கு நண்பரென்பதால் தான் யாருமே புகாரளிக்கப் பயப்படுகிறார்கள்'' என்றனர்.

மேலும், "ஆர்.எம்.ஓ. ஆண்டனி சுரேஷ் சிங்குக்கு உடந்தையாக இருந்த லேப் டெக்னீசியன் வைரவன், ஒருகட்டத்தில் ஆண்டனியையே மிஞ்சுமளவுக்கு பெண் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும், சிகிச்சைக்கு வரும் அழகிய பெண்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத் திருக்கிறார். உள்நோயாளியாக சிகிச்சை பெறும் பெண்களிடமும், "ஆர்.எம்.ஓ.தான் இங்கு எல்லாமே, அவரிடம் நீங்கள் அட்ஜஸ்டபிளாக இருந் தால்தான் நல்லபடியாக சிகிச்சை செய்வார்' என தூண்டில் போட்டிருக்கிறார். ஏற்கெனவே வைரவன் மீதான பாலியல் புகார் காரணமாக 17இ மெமோ வழங்கப்பட்டும், பணிமாற்றம் செய்யப்படவில்லை. இதனால் தைரியமாக பாலியல் தொந்தரவுகளில் தொடர்ந்து ஈடுபட, புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், 27ஆம் தேதி நடைபெறவிருந்த வைரவனின் திருமணம் நின்றுபோனது'' என்றனர்.

இதுகுறித்து போலீசிடம் கேட்டபோது, "மருத்துவர் ஆண்டனி சுரேஷ்சிங் பாலியல் தொந்தரவு குறித்து பெண் மருத்துவர் ஒருவரின் மொட்டைக் கடிதமொன்று வந்தது. அது பாலியல் தொடர்பான புகாரென்பதால், சம்பந்தப்பட்ட பெண் மருத்துவரிடமே நேரில் விசாரித்தோம். ஆனால் "அப்படியெந்த புகாரும் அனுப்ப வில்லையென்றும், என் பெயரில் வேறு யாரோ அனுப்பியுள்ளனரென்றும் கூறினார். மேலும், நானும் அவரும் நல்ல நண்பர்களென்பதால் நான் எப்படி அவர்மீது புகாரனுப்புவேன்?' என்றும் கேட்டார்.

இந்நிலையில், எங்களுடைய விசாரணைக்குப் பிறகு அங்கு பணிபுரியும் கேரள பெண் மருத்துவர் ஒருவர், ஆண்டனி சுரேஷ்சிங் மீது மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுத்த பாலியல் புகார் விசாரணையின்றி உள்ளதெனக் கூறி புகார் கூறியதோடு, பாதிக்கப்பட்ட சிலரையும் அடையாளம் காட்டினார். அவர்களிடம் விசாரித்ததில் பாலியல் புகாரின் உண்மைத் தன்மை தெரிந்ததால், மருத்துவரையும், லேப் டெக்னீசியனையும் கைது செய்தோம். இன்னும் சிலரிடம் விசாரணை நடத்திவருகிறோம்'' என்றனர்.

இதுகுறித்து டீன் கிளாரன்ஸ் டேவி கூறும்போது... "பெண் மருத்துவர் ஒருவர் புகார் கடிதம் கொடுத்தார். அதை துறைரீதியாக விசாரித்து அறிக்கை தருமாறு விசாகா கமிட்டிக்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் விசாரிக்க காலதாமதம் ஆனதே இதற்கு காரணம். மற்றப்படி, நானும் அந்த மருத்துவரும் நண்பர்கள் இல்லை'' எனக்கூறி நழுவினார்.

"நோயாளிகளை குணமாக்க வேண்டிய மருத்துவர்களில் சில சல்லாப மருத்துவர்கள், சக பெண் மருத்துவர்களை பாலியல் இச்சைக்கு உடன்பட வைப்பதற்காக மனரீதியாக வற்புறுத்தி, அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது கொடுமையாக உள்ளது.

இப்படியான மருத்துவர் களால்தான் மருத்துவத் துறைக்கே கெட்ட பெயர் ஏற் படுகிறது' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

nkn011123
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe