மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் கள்ளர் சீரமைப்பு மேல் நிலைப் பள்ளி செயல்படு கிறது. இங்கு புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ஒப்பந்த அடிப் படையில் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்நிலை யில், சம்பந்தப்பட்ட மாணவி தனது பெற்றோருடன் மதுரை ஆட்சியர் சங்கீதா விடம் நேரில் புகாரளித்தார்.
அந்த புகாரில், "ஆசிரி யர் மூர்த்தி என்னை அடிக்கடி அழைத்துப் பேசுவார். ஒரு நாள் அவரது அறைக்கு என்னை மட்டும் வரச் சொன்னார். உள்ளே சென்றபோது என்னை சுவரில் சாய்ந்து உடல் முழுவதும் முகர்ந்து, உதட்டில் முத்தம் கொடுத்து தகாத செயலில் ஈடுபட்டார். பின்னர், உனக்கு இது பிடித்திருந்தால் தினமும் இதே மாதிரி செய்கிறேன் என்று என்னை வற்புறுத்தி னார். ஆசிரியர் மீதான பயத் தால் யாரிடமும் சொல்லாமல் மவுனம் காத்தேன். அத்து மீறல் அத
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் கள்ளர் சீரமைப்பு மேல் நிலைப் பள்ளி செயல்படு கிறது. இங்கு புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ஒப்பந்த அடிப் படையில் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்நிலை யில், சம்பந்தப்பட்ட மாணவி தனது பெற்றோருடன் மதுரை ஆட்சியர் சங்கீதா விடம் நேரில் புகாரளித்தார்.
அந்த புகாரில், "ஆசிரி யர் மூர்த்தி என்னை அடிக்கடி அழைத்துப் பேசுவார். ஒரு நாள் அவரது அறைக்கு என்னை மட்டும் வரச் சொன்னார். உள்ளே சென்றபோது என்னை சுவரில் சாய்ந்து உடல் முழுவதும் முகர்ந்து, உதட்டில் முத்தம் கொடுத்து தகாத செயலில் ஈடுபட்டார். பின்னர், உனக்கு இது பிடித்திருந்தால் தினமும் இதே மாதிரி செய்கிறேன் என்று என்னை வற்புறுத்தி னார். ஆசிரியர் மீதான பயத் தால் யாரிடமும் சொல்லாமல் மவுனம் காத்தேன். அத்து மீறல் அதிகமானதால் தோழிகளிடம் சொன்னேன். அவர்களோ, உனக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை, இதேபோல் இந்த பள்ளியில் பலருக்கும் நடந்துள்ளது என்றனர். எனவே இவ் விவகாரம் குறித்து எனது பெற்றோரிடம் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்ளலா மென்ற முடிவோடு பெற்றோரிடம் சொன்னேன்' என்றார்
இதனிடையே, ஆட்சியரின் உத்தரவின்பேரில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் இணை இயக்குநர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், எஸ்.பி. அரவிந்த் உத்தரவின்பேரில் உசிலம்பட்டி மகளிர் போலீஸாரும் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ‘போக்ஸோ’ சட்டத்தில் ஒப்பந்த ஆசிரியர் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில், “ஆசிரியர் மூர்த்தி, கடந்த 1992-ல் 8 ஊர் கிராமக் கமிட்டியால் கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மாதச்சம்பளம் ரூ.18 ஆயிரம் என்றாலும், 9, 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 400 பேருக்கு 150 ரூபாய் மாதக்கட்டணத்தில் பள்ளியிலேயே டியூசன் எடுத்துள்ளார். பள்ளி வளாகத்தில் ஒரு மாணவி, சக மாணவருடன் பேசினால் அம்மாணவியிடம், ‘உனது பெற்றோரிடம் அந்த மாணவரை காதலிப்பதாகக் கூறுவேன்’ எனக்கூறி மிரட்டி, பாலியல் தொந்தரவு, சில்மிஷங்களை செய்திருப்பதாக விசா ரணையில் சில மாணவிகள் தெரிவித் திருக்கிறார்கள். எனவே அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளோம்'' என்றனர்.
பெண்ணின் தாய் சித்ரா நம்மிடம், "நானும் என் கணவரும் கூலி வேலைக்கு காலையிலேயே செல்வதால் பள்ளிக்கு அவளாகத்தான் செல்வாள். இந்த விசயம் தெரிந்ததும் துடிதுடித்துப்போனோம். அந்த ஊரே அந்த ஆசிரியருக்கு ஆதரவாக இருக்கு. அது ஏனென்று புரியவில்லை. என் மகள் ஒரு பையனை காதலித்தது உண்மை தான். நாங்கள் எத்தனையோ முறை கண்டித்துள்ளோம். மற்றபடி, என் மகள் அந்த பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்குபவள். அந்த ஆசிரியரை கைது செய்யவேண்டும் சார்'' என்றார்.
இந்நிலையில், ஆசிரியரை கைது செய்யக்கூடாதென்று அவருக்கு ஆதரவாக மாணவ, மாணவிகளும், கிராம மக்களும் போராட்டத்தில் இறங்க, போலீசார் கைதுசெய்யத் திணறினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளில் ஒருவர், "எங்கம்மா மூர்த்தி சார்கிட்டதான் படித்தார்கள். நானும் அவரிடம்தான் படிக்கிறேன். இங்கிருக்கும் 1000 மாணவர் களுமா பொய் சொல்கிறோம்? அவர் அப்படிபட்ட வாத்தியார் இல்லை சார்'' என்று அழத்தொடங்கினார்.
அப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த மணிகண்டன், ’"சார், சாட்டை படம் பார்த்தீங்களா? அதே கதைதான் சார் இந்த சம்பவம். சாட்டை மூர்த்தி சார் என்றுதான் மாணவர்களே அழைக்கிறார்கள். இதே போன்ற சம்பவம் ஏற்கெனவே நடந்திருக்கு. மூர்த்தி வாத்தியாரின் அர்ப்பணிப்பான பணியைப் பிடிக்காமல் ஒரு மாணவியை வைத்து 2015-ல் போக்ஸோ வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் சம்பந்தப்பட்ட மாணவியும், பெற்றோரும் பொய்யாகக் குற்றச்சாட்டு வைத்ததாகக் கூறியதால் நிர பராதியாக வெளியே வந்தார். பள்ளியிலுள்ள ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ட்யூசன் எடுத்தவரை, நாங்களும் ஊர்ப் பெரியவர்களும் சேர்ந்துதான், நீங்களே குறைந்த சம்பளத்தில் வேலைசெய்கிறீர்கள். ஏதோ மாணவர்கள் கொடுக்கும் கட்டணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்று வாங்க வைத்தோம்.
இவரிடமே அனைத்து மாணவர்களும் ட்யூசன் படிப்பதும், இவரே இலவசமாக நோட்ஸ் எழுதி 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுப்பதும் பிடிக்காத ஆசிரியர்கள் மோதல் போக்கில் இருந்தார்கள். இதுவரை இவரிடம் 50 ஆயிரம் மாணவர்கள் வரை படித்து வெளியேறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மூர்த்திக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். ஏற்கெனவே இவர்மீது போக்ஸோ புகார் இருப்பதால், அதே புகாரை மீண்டும் சுமத்தினால் நம்பிவிடுவார்களென்று யாரோ தூண்டியதால் புகாரளித்திருக்கிறார்கள். இவர்மீதான நம்பிக்கையால் தான் மாணவ, மாணவிகளும், ஊர்மக்களும் இவருக்கு ஆதரவாகப் போராடுகிறார்கள்'' என்றார். தற்போது ஆசிரியர் மூர்த்தி கைதாகி சிறையில்... உண்மை என்ன என்பதை நீதியின் பக்கம் விட்டுவிடுவோம்!