Advertisment

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை! பள்ளித் தாளாளர் கைது

ss

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது ரெட்டணை கிராமம். இந்தப் பகுதியில் பெரமண்டூர் கிராமத் தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரி யர் சண்முகம் கிரீன் பாரடைஸ் என்ற பள்ளியை நிறுவினார். சண்முகம், அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கார்த்திகேயன் என்பவரையும் பங்குதாரராக இணைத்துக் கொண்டார். காலப்போக்கில் கார்த்திகேயன், பள்ளி நிர்வாகம் முழுவதையும் தன்வசம் எடுத்துக்கொண்டார்.

Advertisment

தற்போது பள்ளித் தாளா ளராக இருக்கும் கார்த்திகேயன், பள்ளியில் படிக்கும் பிள்ளை களுக்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது ரெட்டணை கிராமம். இந்தப் பகுதியில் பெரமண்டூர் கிராமத் தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரி யர் சண்முகம் கிரீன் பாரடைஸ் என்ற பள்ளியை நிறுவினார். சண்முகம், அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கார்த்திகேயன் என்பவரையும் பங்குதாரராக இணைத்துக் கொண்டார். காலப்போக்கில் கார்த்திகேயன், பள்ளி நிர்வாகம் முழுவதையும் தன்வசம் எடுத்துக்கொண்டார்.

Advertisment

தற்போது பள்ளித் தாளா ளராக இருக்கும் கார்த்திகேயன், பள்ளியில் படிக்கும் பிள்ளை களுக்கு பாடமும் எடுத்து வருகிறார். கார்த்திகேயனைப் பார்த்தால் திரைப்படங்களில் வரும் ஹீரோபோல மிடுக்காக இருப்பார். குறிப்பாக, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் பாடம் நடத்துவதாகக் கூறி கார்த்திகேயன், பாலியல் பாடத் தைக் கற்றுக்கொடுக்க முனைந் துள்ளார். மாணவிகளை பாடம் சம்பந்தமாக பேசவேண் டும் என்று தனி அறைக்கு வர வழைத்து, தொடக்கூடாத இடங் களில் தொட்டுப் பேசி எல்லைமீறி நடக்க ஆரம்பித்துள்ளார்.

Advertisment

school

தொல்லை எல்லைமீறிச் செல்லவே மாணவிகள் பொறுமை யிழந்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். பிள்ளைகள் கூறிய தகவல்களைக் கேட்டு கொந் தளித்த பெற்றோர் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகாரளித் தனர். காவல்துறையோ வழக்கு பதிவுசெய்வதை தாமதப்படுத்தி யது. பெற்றோர்கள் போராட்டம் நடத்தப்போவதாக கூறிய பிறகு விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளிக்குமாறு தெரிவித்தனர்.

உடனடியாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலை யம் சென்று பெற்றோர்கள் புகா ரளித்தனர். அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் கார்த்திகேயன் மீது மாணவிகளை தனியறையில் அடைத்து வைத்தல், தேவையில் லாமல் தொடுதல், ஆபாசமாகப் பேசுதல், மிரட்டல் ஆகிய பிரிவு களின்கீழ் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ததுடன் தலைமறைவாக இருந்த கார்த்தி கேயனைக் கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.

கார்த்திகேயன் (ஜெயா டி.வி. முழுநேர செய்தி சேன லில்) செய்தி வாசிப்பாளராக வேலைசெய்து வந்திருக்கிறார். கடந்த ஆண்டு பள்ளி ஆண்டு விழாவின்போது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக அழ கிய இளம்பெண்ணை அழைத்து வந்துள்ளார். விழா முடிந்தபிறகு அந்த இளம்பெண்ணோடு கார்த்தி கேயனும் அவரது நண்பர்களும் கூட்டேரிப்பட்டு பகுதியில் சில் மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர் களை விரட்டியடித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தி லுள்ள வெள்ளிமேடுபேட்டை, வாக்கூர், நல்லரசன்பேட்டை, விக்கிரவாண்டி அருகிலுள்ள ஒரு கிராமம் என மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 வழக்குகள் காவல்துறையால் பதிவுசெய்யப் பட்டுள்ளன.

அரசும் காவல்துறையும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யுமா?

-சக்கர

nkn270124
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe