கோவை பகுதியைச் சேர்ந்த 17, 14 வயதுடைய இரு சிறுமிகளிடம் கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வந்த புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், கிறிஸ்தவ பக்திப் பாடல்கள் மற்றும் ஊழிய நிகழ்ச்சிக்கு பெயர்பெற்றவர். இவர் லிவி மினிஸ்ட்ரி என்ற கிறிஸ்தவ ஊழியத்துடன் தொடர்புடை யவர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா வல்லம் அருகே, குமரன் நகரைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). கிறிஸ்தவ மதபோதகரான இவர் கோவையை அடுத்த ஜி.என்.மில்ஸ் பகுதியில் தங்கியிருந்து காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் தேவாலயம் நடத்திவந்தார்.
அத்துடன் அவர் தமிழகம் முழுவதுமுள்ள பகுதிகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவப் பாடல்களை பாடி, ஆராதனையும் நடத்திவந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி ஜி.என்.மில்ஸ் பகுதியிலுள்ள ஜான் ஜெபராஜ் வீட்டில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடை பெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு 17 வயது சிறுமியும் அவருடைய தோழியான 14 வயது சிறுமியும் வந்திருந்தனர். அப்போது ஜான் ஜெபராஜ் அந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாகக் கூறப்படுகிறது. அத்துடன், அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் கூறியதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் கூறி அழுதனர். அதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கோவை காட்டூரி லுள்ள மாநகர மத்திய மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த ஜான் ஜெபராஜ் தலைமறைவானார். இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த தனிப்படையைச் சேர்ந்தவர்கள் நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, மங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று முகாமிட்டு, உள்ளூர் போலீசார் உதவியுடன் அவரைத் தேடிவந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சிசெய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
அதில் ஜான் ஜெபராஜின் விவரம், புகைப்படம், அவருடைய பாஸ்போர்ட் எண், முகவரி, அவரைப் பிடித்தால் தொடர்புகொள்ள வேண்டிய போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டு இருந்தது.
அவர், யாரிடமெல்லாம் பேசிக்கொண்டிருக் கிறார், அவரிடம் தொடர்பு வைத்துக்கொண்டிருப் பவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜான் ஜெபராஜ் கேரள மாநிலம் மூணாறு பகுதியிலுள்ள ஒரு சொகுசு விடுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையிலான தனிப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்குள்ள சொகுசு விடுதியில் பதுங்கி யிருந்த ஜான் ஜெபராஜை கைதுசெய்தனர். கோவை காட்டூரிலுள்ள மகளிர் போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோவையிலுள்ள போக்ஸோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி நந்தினி தேவி (பொறுப்பு), வருகிற 25-ஆம் தேதி வரை மதபோத கர் ஜான் ஜெபராஜை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் ஜான் ஜெபராஜை பலத்த பாதுகாப்புடன் அழைத் துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஜான் ஜெபராஜ் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கோரப்பட்டிருந்தது. அதில், தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தனது மனைவி மற்றும் அவரின் குடும்பத்தார் தூண்டு தலின் பெயரில் சிறுமிகளை வைத்து தன் மீது பொய்யான புகாரளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப் பட்டிருந்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜான் ஜெபராஜ் மனைவியின் தம்பி பெனட் ஹாரிஸ் என்பவரும் அவருடைய வீட்டில் வைத்து இந்த சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் கொடுத்த புகாரின் பேரில் ஜான் ஜெபராஜ் மைத்துனர் பெனட் ஹாரிஸ் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி கைதுசெய்யப் பட்டுள்ளார். இந்நிலையில் மற்றொரு தருணத்திலும் அதே சிறுமியை ஜான் ஜெபராஜ் தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி புகாராக அளித் துள்ளார். மாவட்ட குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்திய பின்னரே சம்பவம் நடந்தது உண்மையெனத் தெரியவந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-சுல்தான்