Advertisment

பாலியல் புகார்! 7 ஆண்டுக்குப் பிறகு வழக்குப் பதிவு! -வனத்துறை அதிகாரிகள் கைதாவார்களா?

sss

ந்தியாவில் பாலியல் வன்முறைகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் வடமாநிலங்களே முன்னிலைவகிக்கின்றன. தமிழகத்திலும் அதிகாரத்திலிருக்கும் அதிகாரிகள் சத்தமில்லாமல் பணியிடங்களில் பெண் களிடம் அத்துமீறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

Advertisment

திருச்சியைச் சேர்ந்த வனத்துறையின் கன்சர்வேட்டிவ் அதிகாரியான சதீஷ் மீது, ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளார். இந்த புகார் கொடுத்து 7 ஆண்டுகளுக் குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு துணைபோன இன்னும் இரண்டு உயரதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

pp

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கே.சி.கணேசன். இவரது மனைவி ஹேமலதா. கடந்த 2016-17ஆம் ஆண்டில் திருச்சி மாவட்ட வனத்துறையில் ஹேமலதா உதவி வனக்காப்பாளராகவும், கணேசன் மணப்பாறை வனச்சரக அலுவலராகவும் பணியாற்றி

ந்தியாவில் பாலியல் வன்முறைகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் வடமாநிலங்களே முன்னிலைவகிக்கின்றன. தமிழகத்திலும் அதிகாரத்திலிருக்கும் அதிகாரிகள் சத்தமில்லாமல் பணியிடங்களில் பெண் களிடம் அத்துமீறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

Advertisment

திருச்சியைச் சேர்ந்த வனத்துறையின் கன்சர்வேட்டிவ் அதிகாரியான சதீஷ் மீது, ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளார். இந்த புகார் கொடுத்து 7 ஆண்டுகளுக் குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு துணைபோன இன்னும் இரண்டு உயரதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

pp

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கே.சி.கணேசன். இவரது மனைவி ஹேமலதா. கடந்த 2016-17ஆம் ஆண்டில் திருச்சி மாவட்ட வனத்துறையில் ஹேமலதா உதவி வனக்காப்பாளராகவும், கணேசன் மணப்பாறை வனச்சரக அலுவலராகவும் பணியாற்றி னார்கள். அப்போது திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலராகப் பணியாற்றியவர் சதீஷ். பணிக்கு வரும் ஹேமலதாவை பாலியல்ரீதியாக தொல்லை செய்ததாகவும், ஆனால் ஹேமலதா சதீஷின் பாலியல் தொல்லைக்கு இணங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் சதீஷ் மணப்பாறையில் வேலைசெய் யும் அவரது கணவர் கணேசனுக்கு பல வழிகளில் தொந்தரவும் நெருக்கடியும் கொடுத்திருக்கிறார். ஒருகட்டத்தில் பொருளாதார நெருக்கடியையும் கொடுத்திருக்கிறார். எப்படியாவது கணேசனை வழிக்குக் கொண்டுவந்து ஹேமலதாவை அடைவதுதான் சதீஷின் திட்டமாக இருந்திருக்கிறது. இதனால் கணவன், மனைவி இருவரையும் பல்வேறு வழிகளில் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார் சதீஷ்.

Advertisment

நள்ளிரவில் கணேசனின் செல்போனுக்கு பேசிய கோவை மாவட்ட வனப் பாதுகாவலர் செந்தில்குமார் ஐ.எப்.எஸ். "உன்னுடைய எல்லா பிரச்சனைகளையும் நான் தீர்த்துவைக்கிறேன். வசதிகளை செய்து கொடுக்கச் சொல்கிறேன்' என்று சதீஷுக்காக சிபாரிசு செய்திருக் கிறார். இந்த உரையாடலின்போது சதீஷும் கான் ஃபரன்ஸ் காலில் இருந்திருக்கிறார். கணேசனோ, இவர்கள் நடு இரவில் போதையில் பேசக்கூடும் என்று எண்ணி அப்போதைய மண்டல வனப்பாதுகாவலரிடம் செந்தில்குமார், சதீஷ் ஆகியோர் மீது புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வன அலுவலரான சுஜாதா, சதீஷின் தீவிர விசுவாசி என்பதால் அவர் மூலம் ஹேமலதாவிற்கு பல நெருக்கடிகளைக் கொடுத்துள்ளார் சதீஷ். ஒருகட்டத்தில் "சதீஷ் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் நீ பயிற்சியை முடிக்க முடியாது' என மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

நாம் ஹேமலதாவிடம் பேசினோம். "சதீஷ், செந்தில்குமார், சுஜாதா ஆகிய மூவரின் மீது நாங்கள் புகார் கொடுத்திருக்கிறோம். டிபார்ட்மெண்ட் மூலமாகவும் புகார் கொடுத்திருக்கிறோம். காவல்துறையிலும் புகார் கொடுத் தோம். அப்போதைய கன்சர்வேட்டர் திருநாவுக்கரசரிடமும் புகார் கொடுத்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப் போராட்டம் மூலமாகத்தான் வழக்கே பதிவுசெய்துள்ளார்கள். ஆனால் அவரை காவல்துறை கைதுசெய்யவில்லை. கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராக நாகலாந்தில் இருக்கும் செந்தில்குமார், சென்னையிலிருக்கும் சுஜாதா ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களையும் கைது செய்யவேண்டும்''’என்றார்.

கணேசனிடம் பேசினோம். “"நான் மணப்பாறையில் பணிபுரிந்தேன். என் மனைவி திருச்சியில் பணிபுரிந்தார். என் மனைவிக்கும் எனக்கும் நிறைய தொல்லைகளைக் கொடுத்தார் சதீஷ். நொந்துபோய்தான் புகார் கொடுத்தோம். ஆதாரம் கேட்டார்கள். சதீஷ் பேசியதை ரெக்கார்டு பண்ணி புகார் கொடுத்தோம். 11 ரெக்கார்டுகள் கொடுத்துள்ளோம். பிறகும் எங்களுக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்தார்கள். நாங்கள் சட்டப் போராட்டத்தைக் கையிலெடுத்தோம். நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ஜெயச்சந்திரன் ஆகியோர் காவல்துறையை கண்டித்ததால்தான் இந்தளவிற்காவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்''’என்றார் வருத்தமாக.

மண்டல வனத்துறை அலுவலர் சதீஷிடம் பேசிய போது, "இப்ப இந்தச் செய்தியைப் போடப்போறீங்களா... நாளைக்கு ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் பைல் பண்ணப் போறாங்க. விசாகா கமிட்டி விசாரணையில் ஹேமலதாவால் எதையும் நிரூபிக்க முடியலை. நியாயப்படி அவங்க அதற்கு அப்பீல் போகலாம். ஆனா போகல, அதனால காவல்துறை யில் பொய்யா ஒரு புகார் கொடுத்தார். அதை எடுக்கவில்லை என்பதற்காக, கோர்ட்டுக்கு போய் டைரக்சன் வாங்குகிறார் கள். அதன்படிதான் வழக்கு பதியப்பட்டுள்ளது. இனி விசாரணை நடக்கும். அந்த விசாரணையின் பேரில்தான் போலீசார் நடவடிக்கை எடுக்கமுடியும். எதுவுமே நடக்கலை சார், நீங்களே விசாரணை செய்யுங்க''’என்றார் கேஷுவலாக.

இந்தியாவில் மேலதிகாரிகள் மீது புகார் கொடுத்துவிட்டு நிரூபிப்பது எளிதா என்ன?

nkn280824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe