Advertisment

திருச்சி இன்ஸ்பெக்டர் மேல் பாலியல் புகார்! -நடந்தது என்ன?

ss

மே 5-ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் தன்னைப் பாலியல் தொந்தரவு செய்கிறார். அவரிடமிருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று மனு அளித்துள்ளார் கிரிஜா என்ற இளம்பெண். இதனையடுத்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்யப்பிரியா, காந்தி மார்க்கெட் ஆய்வாளர் சுகுமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார்.

Advertisment

இந்த விவகாரம் குறித்து ஒரு தெளிவுக்கு வர நாம் வேறுசில விஷயங்களையும் பார்த்தாகவேண்டும். திருமணமாகி கணவ னுடன் வாழாமல் தனியாக வசித்து வருபவர், புகாரளித்த கிரிஜா. திருச்சி இன்ஸ்பெக்டர் சுகுமாரின் எண்ணை எங்கிருந்தோ பிடித்து வாட்ஸ்ஆப் மூலம் உதவி கேட்பதுபோல் தன்னுடைய பேச்சைத் துவங்கியவர், நாளடைவில் சுகுமார் குறித்த சில தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு, அவருக்கு காதல் வலைவீச ஆரம

மே 5-ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் தன்னைப் பாலியல் தொந்தரவு செய்கிறார். அவரிடமிருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று மனு அளித்துள்ளார் கிரிஜா என்ற இளம்பெண். இதனையடுத்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்யப்பிரியா, காந்தி மார்க்கெட் ஆய்வாளர் சுகுமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார்.

Advertisment

இந்த விவகாரம் குறித்து ஒரு தெளிவுக்கு வர நாம் வேறுசில விஷயங்களையும் பார்த்தாகவேண்டும். திருமணமாகி கணவ னுடன் வாழாமல் தனியாக வசித்து வருபவர், புகாரளித்த கிரிஜா. திருச்சி இன்ஸ்பெக்டர் சுகுமாரின் எண்ணை எங்கிருந்தோ பிடித்து வாட்ஸ்ஆப் மூலம் உதவி கேட்பதுபோல் தன்னுடைய பேச்சைத் துவங்கியவர், நாளடைவில் சுகுமார் குறித்த சில தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு, அவருக்கு காதல் வலைவீச ஆரம்பித்துள்ளார்.

Advertisment

tt

இதனால் கடுப்பான சுகுமார் "என்னுடைய செல்போன் எண்ணை உனக்கு யார் கொடுத்தது?'' என்று கேட்க, "நான் ஸ்டேஷனில் வாங்கினேன்'' என்று கூறி தன்னுடைய பேச்சைத் தொடர்ந்துள்ளார். கடுகடுப்பு காட்டிய போதும் தொடர்ந்து அந்த அதிகாரிக்கு வாட்ஸ்ஆப் மூலம் குறுந்தகவல்களை அனுப்பி தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி "எனக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது. உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உதவி செய்கிறேன். இந்த காதல் விவகாரமெல்லாம் பிடிக்காது'' என்று மறுத்துள்ளார்.

அந்த பெண்ணோ விடாமல் அவரிடம், “"சிங்கம் படத்தில் வரும் சூர்யாவைப்போல நீங்க அழகா இருக்கீங்க, கம்பீரமான மீசையும் வச்சிருக்கீங்க. நான், உங்கள பாக்குறதுக்காகவே தினமும் ஜிகர்தண்டா கடைக்கு அருகில் வந்து காத்திருப் பேன். ஆனா நீங்க வரமாட் டீங்க. உங்களை நேர்ல பாக்கும்போது எனக்கு பேச்சே வர மாட்டேங் குது''’என்று தூண்டிலை வீசியுள்ளார்.

அதோடு உச்சகட்டமாக, "நீங்க எனக்கு வேணும்'' என்று கூறியதோடு, மற்றொரு அதிகாரியைக் குறித்தும் ஒரு தகவலைப் பரிமாறியுள்ளார். அதில் "தன்னுடைய உறவுக்கார பையன் திருமண விழாவில் தங்கச்செயின் காணாமல் போனது குறித்து புகாரளிக்க நான் உயரதிகாரி ஒருவரைச் சந்திக்கச் சென்றேன். புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பியவர் அதோடு நிறுத்தவில்லை. அவருடன் இருப்பதற்காக என்னை அழைத்தார், ஆனால் எனக்கு அவருடன் இருக்க விருப்பமில்லை. எனக்கு உங்களுடன் தான் இருக்கவேண்டும்' என்று அந்த குறுந்தகவலில் கூறிள்ளார்.

tt

அதேபோல் தன்னுடைய தோழி ஒருவரிடம், செல்போனில் கிரிஜா ஏக்க மாகப் பேசும் ஒரு ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், “"நான் சிங்கத்தை எப்படியாவது கரெக்ட் பண்ண ஐடியா கொடு. என்னைய அவர் பார்க்கவே மாட்டேங் கிறாரு'’எனக் கேட்க... அதற்கு அவருடைய தோழி, “"நீ உடம்பில் அவருடைய பெயரை பச்சை குத்திக்கோ' என்று கூறியவுடன், “"பச்சையை எங்க குத்திக்கலாம்?'’என்று கேட்டுவிட்டு பின் அவரே, "நான் உன்னை மாதிரி இடுப்புக்குக் கீழ் குத்திக்கமாட்டேன். சிங்கம் கட்டும் தாலிதான் என்னுடைய நெஞ்சுல இருக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா அவர் ஒத்துவரமாட்டேங்கிறாரு. அவரு பேரையாவது நான் மார்புல குத்திக்கிறேன்'’என்று கூறியிருக்கிறார்.

"எனக்கு என்னடி குறைச்சல், உயரம்தான் கொஞ்சம் கம்மி. இந்த மனுஷன் அத புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாரு'’என்று கூறி அவர்கள் இருவரும் பேசும் ஆடியோ நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு சம்ப வமும் அம்பல மாகியுள்ளது. இந்த பெண் தனியாக வசித்து வரும் நிலையில் தன்னுடைய மாமா மகனை வீட்டுக்கு வரச்சொல்லியுள்ளார். பின் அவர் தன்னைக் கெடுத்துவிட்டதாக போலீஸ் கமிஷ னரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த வழக் கில் இந்த பெண்தான் அவரை வரச்சொன்னார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகுமார் மீது ஆத்திரத்தில் இருக்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் "யாரோ, இந்தப் பெண் கிரிஜாவைப் பயன்படுத்தி சுகுமாரை இக்கட்டில் மாட்டிவிடுகின்றனர்' என்கிறார்கள் சுகுமாருக்கு ஆதரவான காவல்துறையினர்.

மாறாக, "எந்த முன்முடிவும் எடுக்காமல் காவல்துறை இந்த பிரச்சனையை முழுமையாக விசாரித்து சரியான தீர்வை அளிக்கவேண்டும்' என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.

இன்ஸ்பெக்டர் சுகுமாருக்கு ஆதரவாக திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

nkn100623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe