டலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், இருபதுக்கும் மேற்பட்ட கிராம மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி, அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு நட்பு முறையில் சென்றுள்ளாள். அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் வேறு சில மாணவர்களும் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவன் கேக் வெட்டிக் கொண்டாடிய பிறந்தநாள் நிகழ்ச்சியை அங்கு வந்திருந்த மாணவர்களில் ஒருவன் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளான். இந்த புகைப்படத்தை பிறந்தநாள் கொண்டாடிய மாணவன் தன் சக நண்பர்களிடம் பகிர்ந்துள்ளான்.

hhh

இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி பள்ளி மதிய உணவு இடைவெளியின் போது அந்த மாணவியை சக மாணவன் ஒருவன், "உன்னுடைய புகைப்படம் என்னிடம் உள்ளது. என்னுடன் வரவேண்டும். வராவிட்டால் அந்த புகைப்படத்தை உனது பெற்றோருக்கு அனுப்பிவிடுவேன்'' என்று மிரட்டி, அவனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு சென்ற மாணவியிடம், "செல்போன் வீட்டுக்குள்ளே இருக்கு. நீயே செல்போனை எடுத்து அதில் உள்ள உன் படத்தை அழித்துவிடு" என்று கூறி வீட்டினுள் அழைத்தவன், மாணவி வீட்டுக்குள் நுழைந்ததுமே உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுள்ளான். வீட்டினுள்ளே தன்னோடு படிக்கும் மேலும் இரு மாணவர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளாள். மூன்று மாணவர்களும் சேர்ந்து அம்மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவி வேதனையால் கதறி அழுதும் விடாமல் சீரழித்துள்ளனர். அதனை ஒரு மாணவன் வீடியோவும் எடுத்துள்ளான்.

அந்த வீடியோவை சென்னையில் பணியாற்றிக்கொண்டிருக்கும், பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் மாணவனுக்கும் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து மேலும் சில மாணவர்களுக்குப் பரவ, அதிலொருவன் அம்மாணவியைத் தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டியுள்ளான். தான் மிகப்பெரிய விபரீதத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்த மாணவி, "இனிமேல் அந்த பள்ளிக்கு படிக்கச் செல்லமாட்டேன்'' எனக் கூறிக் கதறி அழுதுள்ளார். காரணத்தைத் துருவித் துருவி விசாரிக்கவும் அம்மாவிடம் நடந்த சம்பவத்தை அழுதபடி கூறியுள்ளார். அதையடுத்து, அவளது அம்மா மற்றும் உறவினர்கள், ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

dddf

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், ஆவினங்குடி காவல் நிலையத்தில் மாணவியிடம், மகளிர் காவலர்கள்மூலம் நேரில் விசாரணை நடத்தியுள்ளார். அதில், மாணவியை சக மாணவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சட்டப்பிரிவின் கீழும், போக்சோ சட்டத்திலும் கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள னர். பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் மாணவனையும் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். கைதான மாணவர்கள் அனைவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஐநூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற கல்வியாளர்கள் சிலரிடம் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் குறித்து விசாரித்தபோது, "பிள்ளைகள் சீரழிவிற்கு பெற்றோர்களும், பாதுகாப்பாளர்களும் முக்கிய காரணம். தற்போதுள்ள சூழலில், மாணவர்கள் செய்யும் சிறு தவறுகளைக்கூட ஆசிரியர்களால் தட்டிக்கேட்க முடியாத நிலை உள்ளது. கடந்த காலங்களில் பெற்றோர்கள் ஆசிரியர்களின் பொறுப்பில் பிள்ளைகளைக் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். தவறு செய்யும் பிள்ளைகளைக் கண்டியுங்கள், மேலும் தவறு செய்தால் தண்டியுங்கள் என்ற உரிமையைக் கொடுத்தார்கள். தற்போது மாணவ, மாணவிகள் மது குடிப்பது, புகை பிடிப்பது என்று எல்லைமீறிப் போய்க்கொண்டுள்ளனர். குறிப்பாக மாணவ -மாணவிகள் ஆண்ட்ராய்டு செல்போன் வைத்துள்ளதால், அதில் பார்க்கக்கூடாத காட்சிகளையும், கேட்கக்கூடாதவற்றையும் கேட்டு மாணவப்பருவத்திலேயே சீர்கெட்டுப் போகிறார்கள்.

Advertisment

dd

மேலும், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், 10, 20 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணிபுரிகிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கொடுத்தாலும், அதிகாரிகளைப் பிடித்து ஏதாவதொரு வழியில் பணி மாறுதலை ரத்துசெய்து அதே பள்ளியில் பணிபுரிகிறார்கள். பள்ளி மாணவ, மாணவிகள் சீரழிவுக்கு இதுவும் ஒரு காரணம். ஆசிரியர்களை அவ்வப்போது இடமாறுதல் செய்துகொண்டே இருக்க வேண்டும்'' என்றார்கள்.

ஆவினங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி துவங்கப்பட்டு நூறு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பழமைவாய்ந்த இப்பள்ளியில் படித்தவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆசிரியர் பணிகளிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தொலைதொடர்புத் துறை, கல்வி அதிகாரிகள், மருத்துவர்கள் எனப் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அப்படிப்பட்ட மேன்மையான பள்ளி. தற்போது சில மாணவர்களின் வக்கிரச் செயலால் தலைகுனிவை எதிர்கொள்கிறது.

-சக்கரை