மூத்த பத்திரிகையாளர் என்ற பெயரில் நடிகை காயத்ரிசாயிடம் அத்துமீறிய பிரகாஷ் எம்.ஸ்வாமி வழக்கில், வழக்கை ரத்துசெய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 90-களில் வெளியான "அஞ்சலி' திரைப்படத்தில் நடித்த காயத்ரிசாய், சென்னை கோபாலபுரம் பகுதியில் தன் மகளுடன் வசித்து வருகிறார். இவரிடம், முகநூல் லைவ் வீடியோவில், தான் மூத்த பத்திரிகையாளர் என்றும், பிரதமர் மோடி உள்பட பி.ஜே.பி.யின் மூத்த தலைவர்கள் தனக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறி அறிமுகமானார் பிரகாஷ் எம்.ஸ்வாமி. பின் பாலியல்ரீதியாக அத்துமீற முயற்சிக்கவே அது பிரச்சினை யானது.

dd

2019, மே 27 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, ஜூலை மாதம் 2018 மாலை, காயத்ரியின் மகனுக்கு பாஸ்போர்ட் தொடர்பாக உதவுவதாகக் கூறிக்கொண்டு அவரது வீட்டிற்கு பிரகாஷ் எம்.ஸ்வாமி சென்றுள்ளார். அவர் காயத்ரி அருகே அமர்ந்து அவர் தோள்மீது கையைப் போட்டு தவறாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். பயத்தில் காயத்ரி கத்தியதும் வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்றியிருக் கிறார்கள்.

Advertisment

"பிரகாஷ் எம்.ஸ்வாமி பல ஆண்டுகளாக இது போல் பல பெண்களிடம் தவறாக நடந்துவந் துள்ளார். இதை வெளி யில் சொல்லக்கூடாது என்பதற்காக மிகப்பெரிய தலைவர்களுடன், தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி அவர்களை மிரட்டி யிருக்கிறார்''’என்று குற்றம்சாட்டுகிறார் காயத்ரி சாய். இந்த, சம்பவத்திற் குப் பிறகு தொலைபேசி மற்றும் இணையதளம் வாயிலாக தரக்குறைவான குறுஞ்செய்திகளை அனுப் பிய பிரகாஷ் எம்.ஸ்வாமி தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் எனவும் காயத்ரி தனது முகநூல் பதிவுகளில் கொந்தளித்துள்ளார்.

மாரடைப்பால் இறந்துபோன என் கணவரை, நானே கொன்றுவிட்டதாக பிரகாஷ் எம். சாமி தவறாக செய்தி பரப்பினார். காவல்நிலையத்தில் பலமுறை புகாரளித்தும் பிரகாஷ் எம்.ஸ்வாமியின் தனிப்பட்ட செல்வாக்கால் புகாரை எடுக்காத தால் நீதிமன்றம் மூலம் நடந்த நீண்ட போராட்டத்திற்கு பிறகே எட்டு மாதங்கள் கழித்து சென்னை இராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாஷ் எம்.ஸ்வாமியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

தன் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு. தனக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குவதைத் தடுக்கும் உள் நோக்கத்துடன் இந்த புகார் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே தனக்கு எதிரான முதல் தகவலறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில் பிரகாஷ் எம்.ஸ்வாமி மீதான வழக்கிற்கு இடைக்கால தடைவிதித்து காவல்துறை மற்றும் புகார்தாரரான காயத்ரிசாய் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப் பட்டிருந்த நிலையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் பிரகாஷ் எம்.ஸ்வாமி தாக்கல் செய்த ஆவணங்கள் சந்தேகமளிக்கும் வகையில் உள்ளதால் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்துசெய்ய முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisment

ff

இது தொடர்பாக ராயப்பேட்டை காவல் உதவி ஆணையர் சார்லஸ் ஷியாம் துரைராஜிடம் பேசினோம். “"நீதிமன்றத்தில் பிரகாஷ் எம்.ஸ்வாமி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், எஃப்.ஐ. ஆர். ஐ ரத்து செய்யும்படி மனு செய்திருந்தார். நீதிபதி இந்த மனுவை ரத்து செய்ததால் விரைவில் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்''’என்று தெரிவித்தார்.

ff

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்ட நடிகையான காயத்ரி சாய், “"ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டிவந்தனர் இதனால் பிரகாஷ் எம்.ஸ்வாமி முன்ஜாமீன் பெற்றார். மேலும் கடந்த நான்காண்டுகளாக போலீஸ் தரப்பிலிருந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் தாமதம் செய்துவருகின்றனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு பிரகாஷ் எம்.ஸ்வாமி, நீதிமன்றத்தில் குவாஷ் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை நீதிபதி ரத்து செய்ததால் நம்பிக்கை பிறந்துள்ளது. சமூகத்தில் கணவனை இழந்து தனியாகப் போராடிவரும் பெண் களுக்கு காவல்துறைதான் உதவவேண்டும். நீதியே வெல்லும் என்ற நம்பிக்கையில் போராடிவருகிறேன்''’என்று கூறினார்.