பொதுமக்களை பாது காக்கும் வேலியாக இருக்க வேண்டிய காவல்துறையினரே பயிருக்கு சேதம் விளைவிக்கக் கூடியவர்களாக மாறிவருகிறார் கள். இதற்கு சில சம்பவங் களை சாட்சியாக்கலாம்.
திருச்சி முக்கொம்பு அணைப்பகுதியில் சுற்றிப்பார்க்க காதலனுடன் வந்த இளம் பெண்ணை காவல்துறையினரே மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
திருச்சி, ஜீயபுரம் எஸ்.ஐ. சசிகுமார், நவல்பட்டு போலீஸ்காரர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து போலீஸ்காரர் சங்கர் ராஜபாண்டியன், போக்குவரத்து போலீஸ்காரர் சித்தார்த்தன் ஆகியோர் முக்கொம்பு அணைப் பகுதிக்கு சென்று, மது அருந்திவிட்டு, காதல் ஜோடிகளிடம் சில்மிஷம் செய்துள்ளனர். அப்போது, அங்கிருந்த காதலர்களான அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, துவாக்குடியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஆகியோரிடம் வம்புசெய்து மிரட்டி, இளைஞனை விரட்டிவிட்டு, சிறுமியை காரில் ஏற்றிச்சென்று பாலியல் தொல்லை கொடுத் துள்ளனர். இதில் சிறுமி அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்தியதில், மூன்று போல
பொதுமக்களை பாது காக்கும் வேலியாக இருக்க வேண்டிய காவல்துறையினரே பயிருக்கு சேதம் விளைவிக்கக் கூடியவர்களாக மாறிவருகிறார் கள். இதற்கு சில சம்பவங் களை சாட்சியாக்கலாம்.
திருச்சி முக்கொம்பு அணைப்பகுதியில் சுற்றிப்பார்க்க காதலனுடன் வந்த இளம் பெண்ணை காவல்துறையினரே மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
திருச்சி, ஜீயபுரம் எஸ்.ஐ. சசிகுமார், நவல்பட்டு போலீஸ்காரர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து போலீஸ்காரர் சங்கர் ராஜபாண்டியன், போக்குவரத்து போலீஸ்காரர் சித்தார்த்தன் ஆகியோர் முக்கொம்பு அணைப் பகுதிக்கு சென்று, மது அருந்திவிட்டு, காதல் ஜோடிகளிடம் சில்மிஷம் செய்துள்ளனர். அப்போது, அங்கிருந்த காதலர்களான அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, துவாக்குடியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஆகியோரிடம் வம்புசெய்து மிரட்டி, இளைஞனை விரட்டிவிட்டு, சிறுமியை காரில் ஏற்றிச்சென்று பாலியல் தொல்லை கொடுத் துள்ளனர். இதில் சிறுமி அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்தியதில், மூன்று போலீசார் மற்றும் எஸ்.ஐ. ஆகியோரை சஸ்பெண்ட் செய்தனர். இதுகுறித்து ஜீயபுரம் மகளிர் போலீசார், மேற்படி காவலர்களை கைது செய்த நிலையில், அவர்களை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார் டி.ஐ.ஜி. வருண் குமார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பூவரசூர் பகுதியை சேர்ந்தவர் மிகாவேல். இவர் திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில் காவலராக பணியாற்றும்போது பாலியல் குற்றச்சாட்டுகளால் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவரது பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய இளவரசு, அப்பகுதியில் 11வது வகுப்பு படித்துவந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவல ரிடம் புகாரளிக்கப்பட்டது. கரூர் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையை அடுத்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும் அவரது நண்பருக்கும் ஏற்பட்ட தகராறில், மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமனிடம் உதவி கேட்க, அவரோ, சிறுமியை போலீஸ் பூத்துக்குள் அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது போக்சோவில் கைதாகியுள்ளார்.
மதுரை திடீர் நகர் சிறப்பு எஸ்.ஐ. ஜெயபாண்டியன், திருப்பரங்குன்றம் மலையில் சாமி தரிசனம் செய்யவந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க, அச்சிறுமி அழுதுகொண்டே பெற்றோரிடம் தெரிவிக்க, சைல்ட்லைன் அலுவலர்களிடம் புகாரளித்தனர். போலீசார் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட, போக்சோ சட்டத்தில் திருப்பரங்குன் றம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயபாண்டியனை கைது செய்துள்ளனர். இதையடுத்து ஜெயபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதில் பெரும் அதிர்ச்சிதரக்கூடிய சம்பவம், கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலையிலுள்ள கரியாலூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் பிரபு, கிரிமினல் குற்றவாளியாகவே மாறி பல சம்பவங்களை செய்திருப்பதாகும். கரியாலூர் பகுதியிலுள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனை செய்யச்சென்றபோது, பிரபு மட்டும் பெட்டிக்கடைக்காரரின் வீட்டுக்கே சென்று, அங்கிருந்த 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இச்சம்பவம் குறித்த புகாரில், விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், குற்றத்தை உறுதிசெய்ய, அவர்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டு, கைது செய்தனர்.
பிரபு குடியிருந்த காவலர் குடியிருப்பு வீட்டில், நாட்டுத் துப்பாக்கிகள், கள்ளச்சாராயம் கடத்தும் டியூப்புகள், ஆணுறைகள் கண்டறியப் பட்டது அதிர்ச்சியளித்தது. அப்பாவி மலைவாழ் பெண்களிடமும் பிரபு அத்துமீறியிருக்கலாமென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அதே கரியாலூர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றிவந்த யுவராஜ் என்பவர், மலைவாழ் மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போது, சாலையில் அரை நிர்வாணத் துடன் நின்றுகொண்டு அவர்களிடம் அருவருப்பான வார்த்தைகளைப் பேசுவதும், சைகை செய்வதுமாக பாலியல் சீண்டல்களை செய்தது குறித்த வீடியோ வெளிவர, யுவராஜை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
தங்களுடைய பொறுப்பான பதவியின் மகத்துவம் புரியாமல், பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவலர்களே இதுபோல் பெண்களை போகப்பொருளாகக் கருதி, சிறுமிகளிடமும், பெண்களிடமும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு கைதாகும் சம்பவங்கள் அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறையில் பணி செய்யும் சக பெண் களிடமும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதை காணமுடிகிறது. இவர்கள் பல ஆண்டுகளாக ஒரே மாவட்டத்திலேயே பணி செய்துவருவதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இன்னும் சிலர், மேலதிகாரிகளிடம் எடுபிடிகளாக வேலை பார்த்து அவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. மாட்டிக்கொண்டாலும் அதிகாரி களால் காப்பாற்றப்பட்டு விடுவோம் என்ற தைரியமே இப்படி செயல்பட வைக்கிறது என்கிறார்கள். இப்படியான காவலர்களை களையெடுப்பதே சமூகத்தில் நிலவும் குற்றங்களைத் தடுக்க உதவும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-எஸ்.பி.எஸ்.