யிலாடுதுறை நகரத்தின் சாக்கடைக் கழிவுகள் முழுவதும் காவிரியில் விடப்பட்டுவந்த நிலையில், அதற்கு நல்லதொரு தீர்வாக 96, 2001-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது பாதாள சாக்கடை திட்டத்தைக் கொண்டுவந்தது தி.மு.க.

ss

மக்கள் பயன்பாட்டில் இருந்த இந்த பாதாள சாக்கடையில் 2009-ஆம் ஆண்டே நுழைவுத் தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதும், தொட்டிகள் இடிந்து விழுவதும், கழிவுநீர்க் குழாயில் அடைப்புகள் ஏற்படுவதுமான பிரச்சினை கள் தொடங்கியது. ஆகவே, "இந்த பாதாள சாக்கடைத் திட்டத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும், ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்' என போராடி வருகின்றனர்.

இந்த திட்டமானது 2012-ஆம் ஆண்டுவரை குடிநீர் வடிகால் வாரியத்திடமும், 2012-ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை தனியார் பராமரிப் பிலும் இருந்து வருகிறது. 3406 நுழைவுத் தொட்டி கள், 8 கழிவு நீரேற்று நிலையங்கள், என 66 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பாதாள சாக்கடையில் சமீபகாலமாக எந்த நேரம்... எங்கு உடைபடப்போகிறதோ என்கிற பெரும் அச்சத்தில் வாகன ஓட்டி களும், பொதுமக்களும் இருக்கின்றனர்.

Advertisment

swவழக்கறிஞரும் காவிரி அமைப்பின் செயல்பாட்டாளருமான சிவச்சந்திரனிடம் இது குறித்து நாம் பேசிய போது, ""பாதாள சாக்கடை திட்ட மானது நகராட்சியின் கட்டுப்பாட் டின் கீழேவந்ததுமே அரசியல் கட்சி களின் தலையீடும் ஆரம்பிச்சிடுச்சு. டெண்டர் விடுவதில் கமிஷன், வேலை பார்ப்பதில் கமிஷன் என ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் பணம் பார்க்கிறார்கள். பாதாள சாக்கடை பராமரிப்பு பணத்தை பங்கு போட்டுக் கொள்கின்றனர். அதனால் இந்த திட்டமே நாசமாயிடுச்சு'' என்கிறார்.

நகராட்சி ஊழியர் ஒருவர் நம்மிடம் இது குறித்து பேசுகையில், ""இந்த திட்டம் துவங்கியதில் இருந்தே குழப்பம்தான். அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏவாக இருந்த ஜெகவீரபாண்டியன், பாதாள சாக்கடை திட்டத்தில் அனுபவமே இல் லாத சுந்தரபாண்டியன் என்பவரிடம் திட்டத்தைக் கொடுத்துவிட்டார். இதனால் இத்திட்டம் நாசமானது. அடுத்தடுத்து வந்தவர்களும் இதில் ஊழல் செய்வதிலேயே குறியாய் இருந்துவிட்டனர். இதனால், கோடை காலத்தில் விரிசல் ஏற்படுவதும், மழை காலத்தில் உள்வாங்கிக் கொள்வதுமாக இருக்கிறது பாதாள சாக்கடை. மயிலாடுதுறைக்கு தீராத தலைவலியாக இருக்கும் இந்த விவகாரம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்''’’ என்கிறார்.

இந்த விவகாரம் பூதாகரமாவதை உணர்ந்து நாகைக்கு புதிதாக வந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் பிரவின் பி.நாயர், மூன்று நாட்கள் முகாமிட்டு பாதாள சாக்கடையில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். அவரிடம் நாம் பேசியபோது,""முதற்கட்ட பணிகளை முடுக்கிவிட்டுள்ளேன்... விரைவில் சரி செய்யப்படும்'' என்கிறார்.

Advertisment

-க.செல்வகுமார்