வீரப்பன் குறித்த சுவாரஸ்ய மான, அழுத்தமான ஆவணத்தொடர், இதனைத் தயாரித்தது நக்கீரனின் துணை நிறுவனம்.
ஆடு திருடி கோபாலகிருஷ்ணனே.. என்று காவல்துறை அதிகாரிக்கு வீரப்பனின் சவாலோடு தொடங்கும்போதே அது பார்வையாளர்களை உள்ளிழுத்துக் கொள்கிறது
இந்தத் தொடரின் சிறப்பே வழக்க மான காவல்துறைக் கண்ணோட்டத்தில் வீரப்பன் கதையைச் சொல்லாமல், தெளி வான அரசியல், சமூகப் பார்வையோடு சொல்லப்பட்டிருப்பதுதான்..
இதன் எழுத்தாளர்களான ஜெயச் சந்திரன் ஹாஸ்மி, வசந்த் போன்றோரின் பாராட்டுதற்குரிய பங்களிப்பாக இதனை நான் உணர்கிறேன் இதன் போக்கு மூன்று தளங்களில் நகர்கிறது..
1. சட்டத்தின் பார்வையில் வீரப்பன்
2. வீரப்பன் பார்வையில் காவல்துறை வனத்துறை அதி காரிகள்
3. மனிதாபிமானப் பார்வையில் -வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையின் வதை முகாம்களில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள்
வீரப்பன் சந்தனமரங்களை வெட்டினார், யானைத்தந்தங்களைக் கடத்தினார், காட்டிக் கொடுத்தவர்களையும், காவல்துறை வனத்துறை அதிகாரிகளையும் கொன்றார்.. இதில் புதிதாகச் சொல்ல ஏதுமில்லை.. தன் தரப்பு நியாயங்களை வீரப்பனே சொல்லும் காணொளிகளே இத்தொடரின் சுவாரஸ்யமான பகுதி..
"ஆரம்பத்தில் நான் செய்த குற்றத்திற்காக என்னைக் கைது செய்து சட்டப்படியான தண்டனையைக் கொடுத்திருந்தால், அதை அனுபவித்துவிட்டு சராசரி வாழ்க்கைக்குத் திரும்பி யிருப்பேன்
மாறாக, வனத்துறை அதிகாரி சீனிவாசன் என்னைக் கொல்லத் திட்டமிட்டார், உயிரைக்
வீரப்பன் குறித்த சுவாரஸ்ய மான, அழுத்தமான ஆவணத்தொடர், இதனைத் தயாரித்தது நக்கீரனின் துணை நிறுவனம்.
ஆடு திருடி கோபாலகிருஷ்ணனே.. என்று காவல்துறை அதிகாரிக்கு வீரப்பனின் சவாலோடு தொடங்கும்போதே அது பார்வையாளர்களை உள்ளிழுத்துக் கொள்கிறது
இந்தத் தொடரின் சிறப்பே வழக்க மான காவல்துறைக் கண்ணோட்டத்தில் வீரப்பன் கதையைச் சொல்லாமல், தெளி வான அரசியல், சமூகப் பார்வையோடு சொல்லப்பட்டிருப்பதுதான்..
இதன் எழுத்தாளர்களான ஜெயச் சந்திரன் ஹாஸ்மி, வசந்த் போன்றோரின் பாராட்டுதற்குரிய பங்களிப்பாக இதனை நான் உணர்கிறேன் இதன் போக்கு மூன்று தளங்களில் நகர்கிறது..
1. சட்டத்தின் பார்வையில் வீரப்பன்
2. வீரப்பன் பார்வையில் காவல்துறை வனத்துறை அதி காரிகள்
3. மனிதாபிமானப் பார்வையில் -வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையின் வதை முகாம்களில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள்
வீரப்பன் சந்தனமரங்களை வெட்டினார், யானைத்தந்தங்களைக் கடத்தினார், காட்டிக் கொடுத்தவர்களையும், காவல்துறை வனத்துறை அதிகாரிகளையும் கொன்றார்.. இதில் புதிதாகச் சொல்ல ஏதுமில்லை.. தன் தரப்பு நியாயங்களை வீரப்பனே சொல்லும் காணொளிகளே இத்தொடரின் சுவாரஸ்யமான பகுதி..
"ஆரம்பத்தில் நான் செய்த குற்றத்திற்காக என்னைக் கைது செய்து சட்டப்படியான தண்டனையைக் கொடுத்திருந்தால், அதை அனுபவித்துவிட்டு சராசரி வாழ்க்கைக்குத் திரும்பி யிருப்பேன்
மாறாக, வனத்துறை அதிகாரி சீனிவாசன் என்னைக் கொல்லத் திட்டமிட்டார், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோடி தலை மறைவானேன்.. பழிவாங்குவதற்காக அந்த அதிகாரியைக் கொன்றேன். அதன்பிறகும் காவல்துறை என்னை சட்டப்படி தண்டிக்க முயற்சி செய்யாமல் கொலை செய்யவே முயன்றார்கள்.. நானும் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டேன்' என்கிற ரீதியில் செல்கிறது வீரப்பனின் தன்னிலை விளக்கம்.
என்ன சொல்லியும் தன்னுடைய குற்றங்களை அவர் நியாயப்படுத்திவிட முடியாது.. ஆனால் அவருடைய விவரிப்பில் இருக்கும் வசீகரத்தை நீங்கள் கடந்துபோய்விட முடியாது. ஏனெனில் வீரப்பனைப் போலவே அந்தப்பகுதியில் பலர் சத்தனக்கடத்தல், தந்தக் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆதரவில்லாமல் யாரும் அதனைச் செய்திருக்கமுடியாது, வீரப்பன் உட்பட.
அதேபோல் வீரப்பன் வெகுண்டெழுந்து இவ்வளவு பெரிய குற்றச்செயல்களைச் செய்யத் தூண்டியதும் அதிகாரிகளின் தவறான அணுகுமுறைதான் என்பதும் உண்மைதான். அதிகாரிகளின் செல்வாக்கால் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், ஒருகட்டத்தில் அதே அதிகாரத்திற்கெதிராகத் திரும்புவார்கள்.. அப்போது அதிகாரவர்க்கம் அந்தக் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தாமல் போலி மோதலில் கொல்லவே முயலும். இதன் நோக்கம் அந்தக் குற்றவாளியை உருவாக்கிய அதிகாரத்திலுள்ள குற்றவாளிகளைக் காப்பாற்றுவதே.
வீரப்பன் கதையிலும் இதேதான் நடந்தது.
சரணடைதல், பொதுமன்னிப்புப் பெறுதல், பூலான்தேவி போல நேரடி அரசியலில் ஈடுபடுவது ஆகியவையே வீரப்பனின் எதிர்காலத் திட்டங்களாக இருந்திருக்கின்றன.. இதை அவர் வெளிப்படையாகவும் சொல்கிறார்.
1996-ல் "ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடாதீர்கள்' என்று நேரடியாகவே அவர் வேண்டுகோள் வைக்கிறார்.
அந்தத் தேர்தலில் அந்தப்பகுதியில் தனது கட்சி தோற்றதற்கும், பர்கூரில் தானே தோற்றதற்கும் வீரப்பனே காரணம் என்பதை உணர்ந்து வன்மம் கொண்டார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்து வீரப்பனைக் கொன்று தீர்த்தபிறகே அவரது வன்மம் ஓய்ந்தது.
அந்த வன்மத்தின் காரணமாகவே காவல்துறை அதிகாரிகளுக்கு இரட் டைப் பதவி உயர்வு, வீட்டுமனைகள், பதக்கங்களை அவர் வாரி வழங்கினார்
வீரப்பன் வாழ்ந்தார், கொல்லப் பட்டு வீழ்ந்தார் என்பது அவரது தனிப்பட்ட கதை.. ஆனால் அவருக்கும் அவரைப் பிடிக்க வந்த அதிரடிப்படைக்கும் நடுவில் சிக்கி சின்னாபின்னமான பொதுமக்கள், வீரப்பனின் ஆட்கள் என்று பொய்யாகக் கொல்லப்பட்ட அப்பாவிகள், சீரழிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் என வெகுமக்கள் பார்வைக்கு வராத பாதிக்கப்பட்ட எளிய மக்களின் வேதனையை இந்தத்தொடர் காட்சிப்படுத்தியிருக்கிறது என்பதுதான் இதனை வெறும் பரபரப்பைத் தாண்டி, பாராட்டத்தக்க ஆவணமாக்கி யிருக்கிறது..
களத்திலிருந்த பத்திரிகையாளர்கள் அண்ணன் கோபால், சுப்பு, ஜீவா தங்கவேல், வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், தமயந்தி ஆகியோர் சொல்லும் தகவல்கள் அதிர்ச்சி யூட்டுவதாகவும், அழுத்தம் தருவதாகவும் இருந்தன.
வாச்சாத்தியில் ஒரு நாள் நடந்த கொடூரம், வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மாதக்கணக்கில் நடந்திருக்கிறது..
இந்த மனித உரிமை மீறல்களை, பொதுச்சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவந்து, அதனை ஆராய சதாசிவம் கமிஷனை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அழைத்துவந்து சாட்சியம் சொல்ல வைத்ததுவரை நடந்ததெல்லாம் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை..
இந்தப் போராட்டத்தில் அண்ணன் நக்கீரன் கோபால் உறுதியாக நின்றார். கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தமிழ்த்தேசிய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என இடை விடாத போராட்டங்களே இந்த வதைமுகாம் கொடுமைகளுக்கெதிரான விசாரணையை சாத்தியப்படுத்தின..
இந்த நெடிய போராட் டத்தின் முழுவலியை இந்தத் தொடரின் நான்காவது அத்தியாயம் தாங்கி நிற்கிறது.. அதுவே இத்தொடரை வெறும் வீரப்பன் கதை என்பதைத் தாண்டி மேன்மைப்படுத்துகிறது
வனத்தின் பிரம்மாண்டத்தை மட்டுமன்றி இந்த மக்களின் வலியையும் ஆவணப்படம் அருமை யாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது..
அண்ணன் கோபால் அவர்கள் இத்தனை ஆண்டுகள் காப்பாற்றி வைத்த வீரப்பன் காணொளி இத்தொடரின் பொக்கிஷம்.. எனினும் அதற்கு இணையாக புனைவுக் காட்சிகளை அமைத்து படம் பிடித்திருக்கிறார்கள்.
இது இந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் என்பதோடு மீண்டுமொரு மீளாய்வுக் குத் துணைபுரிய வேண்டும்.
தேடுதல் வேட்டை என்ற பெயரில் பாலியல் கொடுங்குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை அடையாளம் காட்டியது.
பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நஷ்டஈடு வழங்கப் பரிந்துரைத்தது. இதன்படி அதிகாரத்திலிருந்த எந்தக் குற்றவாளியும் தண்டிக் கப்படவில்லை. முறையான நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை.
உண்மையில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அந்த மக்களில் பலருக்கு தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கோர்வையாக சொல்லத் தெரிய வில்லை.
சிலர் பயந்துகொண்டு ஆணையத்தின் முன் சாட்சி சொல்ல வரவில்லை, எனவே சதாசிவம் கமிஷனை அடிப்படையாகக் கொண்டு, அரசு மீண்டும் ஒரு குழு அமைக்கவேண்டும்.
மலைவாழ் மக்களின் இயல்புகளை அறிந்த வி.பி.குணசேகரன் போன்ற சமூக ஆர்வலர்கள், சந்துரு போன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு அக்குழு அமைய வேண்டும்.
அதிரடிப்படையினால் பாதிக்கப் பட்டவர்களின் முழுப்பட்டியல் மற்றும் வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலையும் அக்குழு தயாரிக்க வேண்டும்.
அவர்களின் இழப்பிற்கேற்ற நிவாரணத்தொகையை வழங்க வேண்டும். அத்துடன் பொய் வழக்குகளில் அலைக் கழிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
வீரப்பன் சரகத்தில் பணிபுரிந்த காவல்துறையினருக்கு சுமார் நூறுகோடிக்கு மேல் பரிசுத்தொகை வாரிவழங்கப்பட்டது. ஆனால் அவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மக்கள் வாழ்விழந்து சிறைத்தண்டனைகளை அனுபவித்தார்கள்.. கொல்லப்பட்டார்கள்.
இது என்ன நியாயம் என்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொடர் கேள்வியெழுப்பியிருக்கிறது
இதன் தயாரிப்பாளர் பிரபாவதி, இயக்குநர் சரத்ஜோதி, எழுத்தாளர்கள் ஜெயச்சந்திர ஹாஸ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட படைப்பாக்கக் குழுவினர், ழங்ங் 5 தளத்தின் குழுவினர் அனைவருக்கும் பாராட்டும், வாழ்த்துகளும்!
(விமர்சனங்கள் தொடரும்...)