டப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பி. எஸ்.ஸுக்கும் இடையே வெடித்துள்ள தலைமைப் போராட்டம் உச்சக்கட் டத்தை எட்டியிருக்கும் நிலையில், "ஓ.பி. எஸ்.ஸின் முடி வோ வேற லெவல்'’ என்கின்றனர் அவருக்கு மிக நெருக்கமானவர்கள்.

ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். இரு வருக்குமிடையே தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நீதிமன்ற யுத்தத்தில் இறுதியாக, ‘"பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது'’ என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தை நாடிய மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், சி.மணிசங்கர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோரின் கோரிக்கையை அவசர மனுவாக ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், "தேர்தலை நடத்தலாம். ஆனால், பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு வெளிவரும் வரை அதாவது மார்ச் 24 வரை முடிவுகளை அறிவிக்கக்கூடாது'’என உத்தரவிட்டது.

ops

Advertisment

இந்தத் தீர்ப்பு எடப்பாடிக்கு மட்டு மல்லாமல், ஓ.பி.எஸ். தரப்புக்கும் சாதகமென்று கூறப்படுவது குறித்து சட்ட வல்லுனர்கள் சிலரிடம் பேசினோம். "அரசியல் தீர்வு காணாமல் நீதிமன்றத்தை நாடுவது சரியா?’ என 2 நீதிபதிகள் அமர்வு கேள்வி கேட்ட போதே, கட்சி எடப் பாடியாரின் கைகளுக்குள் சென்றுவிட்டது என்பதை யும், தற்போதைய நிலை தற்காலிகமே என்பதையும் ஓ.பி.எஸ். நன்கறிவார். மேலும், இதுபோன்ற அரசியல் வழக்கு களில், கட்சி நிர்வாகிகள், கட்சி யின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதை மட்டுமே நீதிமன்றம் கருத்தில்கொண்டு அதற்கேற்ப தீர்ப்பு வழங்குவது வழக்கம். இந்த மூன்றில் 2 சாதகமாக இருப்பது எடப்பாடியாருக்கு பலம். எனவே, ஓ.பி.எஸ். மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதே நிதர்சனம்'' என கூறினார்கள்.

"ஒருவேளை எடப்பாடியா ருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், என்ன செய்யக் காத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.?' என அவருக்கு நெருக்க மான வட்டாரங்களில் விசாரித் தோம். "ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங் கிணைப்பாளர் பதவிகள் இன்னும் இருப்பதாகவும், இன்றுவரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வரும் நிலையில், ஜெயலலிதா வுக்கும், முதல்வராக்கிய சசிகலாவிற் கும் துரோகம் செய்துவிட்டு, தனக் கேற்றபடி கட்சியின் தீர்மானங் களைத் திருத்தி கட்சியைக் கைப் பற்ற முயற்சித்து வருகிறார் எடப் பாடி. துவக்க காலத்தில், எம்.ஜி.ஆர். எப்படி தி.மு.க.விலிருந்து நீக்கப்பட் டாரோ, அதேதான் தற்போதும் நடந்துள்ளது. எனவே, எம்.ஜி. ஆரைப் போல முடிவெடுப்பது ஒன்றும் தவறில்லையே?''”எனக் கேள்வி கேட்டவர்கள், "விரக்தியின் விளிம்பிலிருக்கும் ஓ.பி.எஸ்., சசி கலா, டி.டி.வி.தினகரன், இருவருமே கைவிடக்கூடிய சூழலில், தனிக் கட்சி துவங்கத் தயாராகி விட்ட தாகவும், கட்சியின் பெயரைக்கூட முடிவு செய்துவிட்டதாக'வும் கூறினார்கள். கட்சியின் பெயரில் ஜெயலலிதாவின் பெயர் கட்டாயம் இருக்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்தனர்.

கட்சியின் பெயர், "செல்வி ஜெயலலிதா ஜனநாயக முன்னேற் றக் கழகம்' என்று இருக்குமோ?!

Advertisment