2026 சட்டமன்றத் தேர்தல் அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, தன் தலைமையை உறுதிப்படுத்தவும் முக்கியமெனக் கருதுகிறார் இ.பி.எஸ். எதிர்க்கட்சி யாக இருந்தபடி தன் தலைமையில் சந்திக்கப் போகும் முதல் சட்டமன்றத் தேர்தலில் தோற்றால் கட்சி கலகலத்துப் போய்விடும், தன் தலைமையே கேள்விக்குறியாகிவிடும் என நினைக்கிறார். கூட்டணியில் பிற கட்சிகளை இணைப்பது, தொகுதிப்பங்கீடு, மறைமுகப் பேச்சுவார்த்தை தாண்டி, சொந்தக்கட்சியில் எந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திவருகிறார். அதிலும் குறிப்பாக, தனித் தொகுதிகள் மீது தீவிர கவனம் செலுத்துகிறார் என்கிறார்கள். 

Advertisment

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் வி.சி.க. பலம்வாய்ந்தது. இந்நிலையில், தி.மு.க. பக்கம் வி.சி.க. இருப்பதால் அது அவர்களுக்கு கூடுதல் பலம். அப்படியிருந்தாலும் கடந்த இரண்டு தேர்தல்களாக பட்டியல் சமூக வாக்குகள் எங்கள் கட்சிக்கு குறைய வில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறுபான் மையின வாக்குகள் 80 சதவீதம் அளவுக்கு எங்களுக்கு கிடைக்காது. இதனால் பட்டியல் சமூக வாக்கு களைக் குறிவைத்து இயங்கும்படி பொதுச் செய லாளர் சொல்லியுள்ளார். தனித்தொகுதிகளில், அ.தி. மு.க.வை சேர்ந்த, மக்கள் செல்வாக்குள்ள பட்டிய லின பிரமுகர்களின் பட்டியலை மா.செ.க்களிடம் கேட்டுவாங்கியுள்ளார். தனியார் ஏஜென்சி மூலமாக வும், தனது பி.ஆர். டீமிடமும்கூட கேட்டுள்ளார். 

Advertisment

தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில், பொன்னேரி, பூந்தமல்லி, திரு.வி.க. நகர், எழும்பூர், ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், மதுராந்தகம், அரக் கோணம் உள்ளிட்ட 44 தொகுதிகளும், பழங்குடி (எஸ்.டி) சமூகத்துக்கு ஏற்காடு, சேந்தமங்கலம் என இரண்டு தொகுதிகளோடு சேர்த்து மொத்தம் 46 தனித்தொகுதிகள் உள்ளன. இதில் எங்களது கட்சியில் தற்போதுள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களாக உள்ளார்கள். 2016 தேர்தலில் 30 பேரும், 2011-ல் 46 தனித் தொகுதிகளிலும், 2006-ல் 12 தனித்தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெற்றிருந்தது. அதற்கு காரணம், எல்லா தேர்தலிலும் தனித்தொகுதிகள் மீது தனிக்கவனம் செலுத்தி, பொதுத்தொகுதியை விட கூடுதலாகவே பணம் ஒதுக்கித் தரப்படும். இதனாலயே தொடர்ந்து தனித்தொகுதிகளை தக்கவைத்து வருகிறது எங்கள் கட்சி. 

இதற்கு முன்பு, தொகுதி மக்களுக்கு பெயரே தெரியாத யாராவது ஒருவரை நிறுத்தி வெற்றி பெறவைப்பார்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். அப்படியொரு பவர் தன் முகத்துக்கு இல்லை என்பதை தெரிந்தே வைத்திருக்கிறார் இ.பி.எஸ். அதனால் இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் மிக முக்கியம் எனக் கூடுதல் கவனமெடுத்து வேட் பாளர்களை தேர்வு செய்கிறார். பொதுத்தொகுதி களைவிட தனித்தொகுதிகளில் பல மடங்கு கவனம் செலுத்துகிறார். அவருக்கு கிடைத்த ரிப்போர்ட்டில், வடக்கு மண்டலத்தில் பொன்னேரி, பூந்தமல்லி, திரு.வி.க.நகர், எழும்பூர், ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், குடியாத்தம், செங்கம், வந்தவாசி, கொங்கு மண்ட லத்தில் ராசிபுரம், தாராபுரம், கிருஷ்ணராயபுரம், மத்திய மண்டலத்தில் துறையூர், பெரம்பலூர், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், சீர்காழி, கீழ் வெள்ளூர், திருத்துறைப்பூண்டி, திருவிடைமருதூர், கந்தர்வக்கோட்டை, தென்மாவட்டங்களில் மானாமதுரை, சோழவந்தான், பெரியகுளம், பரமக்குடி, ஒட்டபிடாரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளில் சிலவற்றை தவிர மற்ற தனித்தொகுதிகளில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள், செல்வாக்குள்ள பிரபலமான நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் அவ்வளவாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. 

Advertisment

திட்டக்குடியில் அமைச்சர் சி.வி.கணேசன், திருவிடைமருதூரில் உயர் கல்வித்துறை அமைச் சர் கோவி.செழியன், ராசிபுரத்தில் அமைச்சர் மதிவேந்தன், தாராபுரத்தில் அமைச்சர் கயல் விழியை எதிர்த்து நிற்கும் அளவுக்கு தகுதியான வேட்பாளர்கள் யார் உள்ளார்கள் எனத் தேடச் சொல்லியிருக்கிறார். அங்கு மட்டுமல்ல திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், வந்தவாசி, பூந்தமல்லி, திரு.வி.க. நகர், எழும்பூர் உட்பட தனித்தொகுதிகளில் ஓரளவு பிரபல மான பிரமுகர்கள் இருந்தால் தெரியப்படுத்துங் கள் என நிர்வாகிகளிடம் சொன்னதால் தேடுதல் வேட்டை நடக்கிறது. அவர்களுக்கு சீட் தந்து, தேர்தலுக்கான மொத்த பணத்தையும் செலவு செய்ய முடிவுசெய்துள்ளார். இதில் சில தொகுதி களில் ஆளுங்கட்சியான தி.மு.க.வில் பட்டியல் சமூக பிரமுகர்களிடம், "எங்கள் கட்சிக்கு வாங் கள், எம்.எல்.ஏ. சீட் உறுதி. தேர்தல் செலவு முழுவதையும் கட்சியே ஏற்றுக்கொள்கிறோம், நீங்கள் ஒத்த ரூபாய்கூட செலவு செய்யத் தேவையில்லை' என அ.தி.மு.க.வின் முக்கிய நிர் வாகிகள் ரகசியமாக பேசிக்கொண்டிருக்கிறார் கள். எதிர்பார்த்த ரிசல்ட் இன்னும் கிடைக்க வில்லை, இருந்தும் வேறு சில ஆஃபர்கள் தந்து முயற்சித்தபடி இருக்கிறார்கள்' என்றார்கள்.

ஆளுங்கட்சி தரப்பிலுள்ள பட்டியல் சமூக பிரமுகர்களிடம் பேசியபோது, "அரக்கோணம், கே.வி.குப்பம், ஊத்தங்கரை, அரூர், திண்டிவனம், வானூர், கள்ளக்குறிச்சி, கெங்கவல்லி, ஆத்தூர், பவானிசாகர், நிலக்கோட்டை உட்பட பல தொகுதிகள் படுவீக்காக உள்ளன. அங்கு தகுதி யான வேட்பாளர்கள் இருந்தாலும், அவர்களை மேலே வரவிடாமல் டம்மியான வேட்பாளர் களை நிறுத்தவைக்கிறார்கள், அந்த மாவட்டங் களில் அதிகாரத்திலுள்ள நிர்வாகிகள். தலைவரும், சின்னவரும் தனித்தொகுதிகள் மீது தனிக்கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்'' என்கிறார்கள்.