சீனிவாசனுக்கு எதிராக செந்தில்குமார்! ஆத்தூரில் இந்திரா பெரியசாமி! - திண்டுக்கல் நிலவரம்

dindugal

 

கொங்கு மண்டலத்திற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.விற்கு கணிசமான எம்.எல். ஏ.க்களை தருவது திண்டுக்கல் மாவட்டம் என்றால் அது மிகையல்ல! கடந்த கால வரலாறுகளும் அதனையே பிரதிபலிக்கும். மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பாலும் அ.தி.மு.க., தி.மு.க. என இரு கட்சிகளும் 4:3 என்ற விகிதத்திலேயே ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி தொகுதி களைக் கைப்பற்றிவருகின்றன. அதேபோல வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக வந்துவிடக்கூடாது என்று தி.மு.க. தலைமை நினைக்கிறது. எப்படியாவது இந்த மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளையும் இம்முறை கைப்பற்றியாக வேண்டுமென்று பல வியூகங்களை முன்னெ டுத்து களமிறங்கியுள்ளது தி.மு.க. தலைமை.

"பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது திண்டுக்கல் மாவட்டம். இதில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் தி.மு.க. வசமும், மீதமுள்ள திண்டுக்கல், நத்தம் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகள் அ.தி.மு.க. வசமும் உள்ளன. அ.தி.மு.க., தி.மு.க.வை பொறுத்தவரை, நிர்வாக ரீதியாக மாவட்டம் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றாலும் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் இரண்டும் வேறு வேறு சட்டமன்றத் தொகுதிகளை கொண் டுள்ளன. தி.மு.க. கட்சியில் பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திலும், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் நத்தம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மேற்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. தி.மு.க. கட்சியின் கிழக்கு மா.செ-வாக ஐ.பி.செந்தில்குமாரும், மேற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் சக்கரபாணியும் மா.செ.வாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி ஆகியோர் அமைச்சர்களாக பணி யாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், வரவுள்ள தேர்தலில், மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளையும் கைப்பற்றினால் புதுமுக அமைச்சருக்கு வாய்ப்பு இருக் கின்றது என் கின்ற தகவ லும் கட்சியில் இருக்கிறது. அது நிஜமாக வேண்டுமென்றால் தங்களது 'சேஃப் ஜோனாக' கருதும் சட்டமன்றத் தொகுதியினை விட்டுவிட்டு, தலைமை கூறும் தொகுதிக்கு வரவேண்டுமென அழுத்தமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் மாவட்டத்திற்கான முதன்மையாக வியூகம்'' என்கிறார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.

dindugal1

கடந்த முறை மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் நிலக்கோட்டையை கூட்டணிக்கட்சி யான மக்கள் விடுதலை கட்சி முருகவேல்ராஜனுக்கும், திண்டுக்கல்லை சி.பி.எம். கட்சி பாண்டிக்கும் ஒதுக் கியது தி.மு.க. இந்த முறை அவ்வாறு வாய்ப்பில்லை என்கின்றனர் விபரமறிந்த சிலர். 1977 முதல் நடந்த தேர்தல்களில் இதுவரை 6 முறை சி.பி.எம். கட்சியும், அ.தி.மு.க. 3 முறையும், தி.மு.க. ஒரு முறையும் திண்டுக் கல்லில் வெற்றியை ருசித்திருக்கின்றன. எங்களுக்கு எம்.பி. மட்டுமே திண்டுக்கல் மாவட்டத்திற்கு போதும். வேறொரு மாவட்டத்தில் சீட் கொடுங்கள். அந்த சீட், அந்த மாவட்டத்தில் எங்கள் கட்சியை வளர்க்க உதவும் எனக்கூறி சி.பி.எம். திண்டுக்கல் தொகுதியிலிருந்து விலகிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையாகும் பட்சத்தில், பழனி சட்டமன்றத் தொகுதியில் பலமாக இருக்கும் சி.பி.ஐ.க்கு பழனியைக் கூட்டணிக்காக தாரை வார்க்கும் தி.மு.க. அப்படி இல்லையெனில் சி.பி.எம்.தான் என்கின்ற பேச்சும் மாவட்டத்தில் பரவலாக உண்டு. பழனியில் இருக்கும் கட்சியின் கிழக்கு மா.செ. செந்தில்குமாரை திண்டுக் கல்லில் நிறுத்தி வெற்றியை ருசிக்க வேண்டுமென தி.மு.க. கணக்கு போடுகிறது. அ.தி.மு.க.வின் பலமிக்க சீனிவாசனுக்கு சரிசம பலமுள்ள ஐ.பி.செந்தில்குமார் தான் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் என்பதும் மாவட்ட தி.மு.க.வை உற்சாகமடைய வைத்துள்ளது.

அந்த வகையில், மாவட்டத்திலுள்ள ஏனைய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ள, போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்களை பார்க்க லாம். கடந்த காலங்களில், 'தட்டி வா என்றால் வெட்டி வருவார்'  எனக் கலைஞரால் பாரட்டப் பெற்ற அமைச்சர் ஐ.பெரியசாமியே ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  இந்த நிலையில், வயோதிகத்தைக் காரணம் காட்டி, கட்சிப் பணி போதுமென்று விலகிக்கொண்டு, தன்னுடைய மகள் இந்திராவை ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளர் என ஐ.பெரியசாமி கைகாட்டலாம் என்கின்றனர். (தற்போது இந்திரா, கூட்டுறவு வங்கியின் இயக்குநராக உள்ளார்)

மாவட்டத்திலேயே தி.மு.க.விற்கு தான் இந்தத் தொகுதி எனக் கண்ணை மூடிக் காட்ட வேண்டிய தொகுதி ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி தான். 1996ஆம் ஆண்டு முதன்முதலில் தி.மு.க. சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சக்கரபாணி, இத்தொகுதியில் டபுள் ஹாட்ரிக் அடித்துள்ளார். இந்த முறை 7வது வெற்றிக்காகக் காத்திருக்கிறார் என்பதால் தி.மு.க. வேட்பாளர்களில் ஒட்டன்சத்திரத்தில் மட்டும் சக்கர பாணிக்கு மாற்று கிடையாது. இவர் கடந்த ஆறு முறை வெற்றிபெற்ற போதும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆறு நபர் களும் வெவ்வேறு நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பழனி சட்டமன்றத் தொகுதியை விட்டுவிட்டு ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல்லிற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், தி.மு.க. சார்பில் பழனியில் போட்டியிட பழனி நகர செயலாளர் வேலுமணிக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேவேளை இத்தொகுதி கூட்டணிக்கு விட்டுக்கொடுக்கப்பட்டால் சி.பி.எம். சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் மற்றும் நகர்மன்றத் துணைத் தலைவராக பதவி வகிக்கும் கந்தசாமி மற்றும் சி.பி.ஐ. சார்பில் ஆய்க்குடி பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகியும் வேட்பாளருக்கான போட்டிப் பட்டியலில் உள்ளனர்.

dindugal2

நத்தம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்த வரை ஆண்டி அம்பலமே தி.மு.க.விற்கான வேட்பாளர் என்றாலும், வயோதிகம் காரணமாக அவருக்கு மறுக்கப்பட்டால் நத்தம் பேரூராட்சித் தலைவர் சிக்கந்தர் பாஷா என்பவரும் போட்டி வேட்பாளராகக் களத்தில் உள்ளார். தனித்தொகுதியான  நிலக்கோட் டையை பொறுத்தவரை, நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கரிகால பாண்டியன் மற்றும் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்திர பாண்டியனும் தி.மு.க. வேட்பாளராகக் களப்போட்டி யில் உள்ளனர். இதே வேளையில், இந்த தொகுதியை கூட்டணிக்கட்சியான விடுதலை சிறுத்தைகள் கேட் பதற்கும் வாய்ப்பு உண்டு என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

வேடசந்தூர் தொகுதி தற்பொழுது தி.மு.க. வசம் இருப்பினும், போட்டி வேட்பாளராக பலமிக்க அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம் இறங்க வாய்ப்புண்டு என்பதால் இந்தத் தொகுதியை தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி. தற்போதுள்ள எம்.எல்.ஏ. காந்திராஜனு டன் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியில் வேடசந்தூர் ஒ.செ. வீராசாமி நாதன் மற்றும் கவிதா ஆகியோ ரில் ஒருவர் தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் ஏழு தொகுதிகளையும் கைப் பற்றுவதும், குறிப்பாக திண்டுக்கல்லைக் கைப்பற்று வதும் இன்றியமையாத ஒன்று. இதே வேளையில், திண்டுக்கல்லில் வெற்றி பெறுபவர் அமைச்சராகும் வாய்ப்புள்ளது என்பதால், மாவட்டத்தில் ஐ.பெரிய சாமி சிஷ்யர் சக்கரபாணியுடன் அமைச்சராக இணை வது ஐ.பி.செந்தில்குமாரே என சிலாகிக்கின்றனர் மாவட்ட தி.மு.க.வினர்.                

-நா.ஆதித்யா

nkn260725
இதையும் படியுங்கள்
Subscribe