"சிறைச்சாலை என்ன செய்யும்?

என் உடலை வேண்டுமானால் சிறையில் வைக்கலாம்..

என் லட்சியத்தை சிறை தொடக்கூட முடியாது' -என்கிறது கலைஞரின் கருத்தோவியம். அதனை உறுதிசெய்திருக் கின்றார் செந்தில்பாலாஜி. இதேவேளையில், "முன்னிலும் உரம் பெற்றவராக சிறையிலிருந்து வெளியேவரும் செந்தில்பாலாஜி யை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது. உறுதி அதனினும் பெரிது' என ட்வீட் போட்டு வரவேற்றி ருக்கின்றார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனால் மீண்டெழுந் துள்ளது கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல தி.மு.க.

se

Advertisment

"இன்று பிணை... நாளை விடுதலை, பிணையில் வந்ததற்கே சங்கிகள் புலம்புகின்றனர். நிரபராதி என்று தீர்ப்பு வரும்போது பைத்தியங்களாகிவிடுவார்கள். தமிழ்நாட்டில் காவி அரசியலால் மாற்றம் காண நினைத்த வானதி போன்றவர்களுக்கு இப்படி ஏமாற்றம் வருவதில் வியப்பில்லை' என்பதுபோல செந்தில்பாலாஜியின் வருகைக்காக கோவை மாவட்டம் முழுவதும் வெடி வெடித்து, இனிப்புக் கொடுத்து கொண்டாடினர்.

சிங்காநல்லூரை சேர்ந்த கட்சி நிர்வாகி ஒருவரோ, "நாம் தான் வெல்கின்றோம்.. நாம மட்டும் தான் வெல்கிறோம்! என்கின்ற செந்தில்பாலாஜியின் தாரக மந்திர வார்த்தைகள், 25 ஆண்டுகள் தொடர் தோல்வியில் துவண்டுகிடந்த கோவை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தி.மு.க. தொண்டனையும் உசுப்பேற்றி கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முதல் கடந்த பாராளுமன்றத் மன்ற தேர்தல்

ss

Advertisment

வரை வெற்றி பெற்றுக்கொடுத் தது. பாராளுமன்றத் தேர்தல் பொழுது மட்டும் செந்தில்பாலாஜி சிறையில் வாசம்! எனினும் செந்தில்பாலாஜியின் மந்திர வார்த்தைகளால் பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியும் வசமானது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் தேர்தல் பொறுப் பாளராக அன்றைய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்ச ரான செந்தில்பாலாஜியை நியமனம் செய்தார்.

அப்போது கோவையில் நடந்த முதல் தேர்தல் செயல்வீரர்கள் கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய வார்த்தைகள்தான் "நாம்தான் வெல்கின்றோம்.. நாம் மட் டும்தான் வெல்கிறோம்!' என்கிற வார்த்தை கள். அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை அ.தி.மு.க. கோட்டை என்ற பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு 99% வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் சி.டி.தண்டபாணி மறைவுக்குப் பிறகு தி.மு.க. பெறும் வெற்றி என்றே சொல்லவேண்டும். அதன்பிறகு கோவை என்றால் செந்தில்பாலாஜி என்ற நிலை உருவானது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டார். கோவையும் வனவாசத்தில் சிக்கியது'' என்கின்றார் அவர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, நான்தான் அடுத்த மேயர் என பலர் தலைமைக்கு படையெடுத்த நிலையில், எந்தவொரு பின்புலம் சாராத சாதாரண கட்சிப் பெண்மணிதான் மேயராக இருக்கவேண்டும் என கோவை மாநகராட்சி மேயராக கல்பனாவை தேர்வுசெய்து தலைமைக்குப் பரிந்துரை செய்தார் செந்தில் பாலாஜி. அதன்படி அவரும் மேயர் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் மேயராகப் பணியாற்றிய நிலையில், கவுன்சிலர்கள் ஒன்று கூடி அவர் பதவியை ராஜினாமா செய்யக் காரணமாக அமைந்தனர். இது செந்தில்பாலாஜிக்கும், கட்சிக்கும் செய்த துரோகமாக பலரால் பேசுபொருளானது. அதுபோல், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் வேலுமணி வார்டில் வெற்றி பெற்றார் என்ற காரணத்தால் மட்டுமே வெற்றிச்செல்வன் என்பவருக்கு துணை மேயர் பதவியை வழங்கினார் செந்தில்பாலாஜி. அவரும் மேயருக்கு எதிரான நடவடிக்கையில் பின்புலமாக இருந்திருக்கின் றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ss

"அரசியல்ரீதியாக பார்க்கும்போது கோவை மாவட்டத்தில் ஆளும் தி.மு.க. கட்சியின் நிலை என்பது அதோகதிதான். இதற்கு காரணம் கோவை மாவட்டத் தில் உழைத்தவனை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு கொடுப்பவனுக்கு கட்சியில் வார்டு செயலாளர் முதல் மாவட்ட அமைப்பாளர் வரை பதவிகளை வாரி வழங்கும் புரோக்கர்களாக சில மா.செ.க்கள் செயல்பட்டு வருவதுதான். கொல்லைப்புறத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் கூட்டணி அமைத்து 9 வேட்பாளர் களை வீழ்த்தி, தான் எப்படியாவது அமைச்சர் பதவியை பெற்றுவிடவேண்டும் என ஒரு மாவட்டச் செயலாளர் செயல்பட்டதன் விளைவாகத்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கோவை மாவட்டத்தில் படுதோல்வி யடைந்தது. அதுபோல், செந்தில்பாலாஜியின் சிறைவாசத் திற்கு பிறகு அதுவரை அமைதியாக அடங்கி கட்சிப் பணியாற்றிவந்த மா.செ-க்கள் தங்கள் ஆட்டத்தினை ஆரம்பித்தனர். எதற்கெடுத்தாலும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் கிடைப் பது கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி, கழகப் பணி செய்ய வந்தவர்களை மீண்டும் முடக்கிவைத்தனர். உழைத்தவனுக்கு பதவி என்பது எல்லாம் அண்ணா, கலைஞர் காலம். தற்போது தளபதி காலம். 10 கதவு கள் உள்ளது. ஒவ்வொரு கதவும் திறக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்தாற் போல் கொடுக்கவேண்டியதை கொடுக்க வேண்டும் என கட்சியை, கட்சித்தலைமை யை விமர்சித்து மாநகர மா.செ. கார்த்திக் பேசியது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது.

இதற்கும் ஒருபடி மேலே சென்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி படங்களை கட்சி போஸ்டர், திருமண அழைப்பிதழ்கள், நோட்டீஸ், இன்னபிறவற் றில் பயன்படுத்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் தலைமைக்குச் சென்றது.. அதுமட்டுமின்றி, இனி இவர் சிறையிலிருந்து வெளியில் வர வாய்ப்பே இல்லை... கோவை மாவட்டத்தில் நான்தான் அதிகார மையம் என பரப்புரையைச் செய்தனர் சில மா.செ.க்கள். ஆனால், செந்தில்பாலாஜி வருகைக்குப் பின் புழல் சிறைவாசலில் முதல் ஆளாக வரவேற்கக் காத்திருந்தனர் அந்த சிலர்'' என்கின்றார் கோவில்பாளைய நிர்வாகி ஒருவர்.

கழகத்தின் முதல் அமைப்பாளரும், மூத்த வழக்கறிஞருமான ஜி.டி. ராஜேந்திரனோ, "கட்சியில் என்னைப் போன்ற சீனியர் களுக்கு மரியாதை குறைவு. தேர்தல் பணிக்குழுவின் பொழுதுகூட எங்களது ஆலோசனை அவர்களுக்கு தேவைப்படவில்லை. அதனால் கோவை மாவட்டத்தையே இழந்தோம். அவர்களைப் பொறுத்தவரை பணம் இருக்கும் வியாபாரிகள் மட்டுமே இலக்கு. அவர்கள்தான் அவர்களுக்கு கட்சிக்காரர்கள். எங்களைத் தெரி யாது. ஆனால் செந்தில்பாலாஜி வருகைக்குப் பிறகு கோவை தி.மு.க.வில் எழுச்சி இருந்தது. அதன் பின் மீண்டும் வியாபாரி களே தலைதூக்கினர். இப்பொழுது செந்தில்பாலாஜியின் வருகை இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டி, கழகத்தின் களப்பணியில் உத்வேகத்தோடு போராடும் போர்க்குணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த நேரத்தில் ஏற்பட்ட எழுச்சியும், உணர்ச்சியும் அதனை நிரூபிக்கிறது'' என்கின்றார் அவர்.

இது இப்படியிருக்க, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற ரீதியில் கோவை மாவட்டத் தை ஐந்தாகப் பிரித்தால், சட்டமன்றத்திற்கு கோவை மாவட்டத் திலிருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வந்துவிடுவார்கள். மா.செ.க் களும் கட்சிக்காக உழைப்பார்கள் என்கின்ற பார்முலாவை செந்தில்பாலாஜியின் காதுகளுக்கு கொண்டுசென்றதாக தகவல். இதன்படி, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, கவுண்டம் பாளையம் கோவை மாநகர் வடக்கு மாவட்டமாகவும், கோவை தெற்கு மாவட்டம் சூலூர், கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகவும், கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளை உள்ளடக்கியதாகவும், கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தாகவும், கோவை மாவட்ட வடக்கு தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் ஒன்றியம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆகையால் புதிய மா.செ.க்கள் லிஸ்ட் செந்தில்பாலாஜி கையில் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

படங்கள்: விவேக்