"ஹலோ தலைவரே, பரபரப்பான அரசியல் சூழல் களுக்கிடையில் கோட்டையை சங்கடப்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறியிருக்கு.''”

"ஆமாம்பா, முதல்வர் நிகழ்ச்சியிலேயே அதிகாரிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டிருக் கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, சென்னை வியாசர்பாடியில் சுமார் 47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மின்சாரப் பேருந்து மனையை கடந்த வாரம் திறந்து வைத்தார் முதல்வர். அதோடு, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சுமார் 208 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட  120 மின்சார பேருந்துகளின் இயக்கத்தை யும் தொடங்கி வைத்தார். இந்த விழாவின்போது போக்குவரத்துக் கழகத்தின் இணை இயக்குநர் அண்ணாதுரையை அழைத்து, குறிப்பிட்ட பேருந்தைக் காட்டி,  அதில் முதல்வர் ஏறி ஆய்வு செய்கிறார், அந்த பேருந்தில் பெண் கண்டக்டர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்று  முதல்வரின் செயலாளர் உமாநாத் அறிவுறுத்தி யிருக்கிறார். இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பேருந்தில் பெண் கண்டக்டர் இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் அண்ணாதுரை. இதற்காக பேருந்தில் ஏறி எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று அவர் பார்வை யிட்டபோது, முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் இருந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அண்ணாதுரையை அழைத்து, "எதற்கு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறாய்?' எனக் கேட்க, முதல்வரின் செயலாளர் உமாநாத்தின் உத்தரவை விளக்கியிருக்கிறார் இணை இயக்குநர் அண்ணாதுரை. அப்படிச் சொல்லியும் ஒருமையில் பேசி இணை இயக்குநரை கேவலப்படுத்தியிருக்கிறார் இன்ஸ்பெக்டர்.''” 

Advertisment

"அப்புறம்?''”

"இன்ஸ்பெக்டரின் அப்ரோச்சால் கடுப்பான போக்குவரத்துக்கழக அதிகாரிகள், விழா முடியட்டும் என அமைதியாக இருந்துள்ளனர். விழா முடிந்ததும் இன்ஸ்பெக்டரிடம் சென்ற இணை இயக்குநர் அண்ணாதுரை, "இப்போ பேசுங்க... உங்களுக்கு என்ன பிரச்சனை?' என்று கேட்க, "நீ எதுக்கு பஸ்ல ஏறுன? செகரட்டரி சொன்னாலும் எங்ககிட்டே கேட்கணும். மயிருத்தனமான வேலையெல்லாம் வெச்சிக்காத?' என்று இன்ஸ்பெக்டர் ஒருமையில் பேசி யிருக்கிறார். உடனே ஆத்திரமடைந்த அண்ணாதுரை, "நான் இணை இயக்குநர் அந்தஸ்துல இருக்கேன். உங்க எஸ்.பி.க்கு இணையான கேடர் நான். என்னை ஒருமையில் பேசற நீ என்ன பெரிய மயிரா? விழாவே நாங்க ஏற்பாடு செய்தது. முதல்வருக்கு பாதுகாப்புக்கு வந்தா, அந்த வேலையை மட்டும் கவனி. அதை விட்டுட்டு எங்க வேலை யில தலையிட்டால் நல்லாயிருக்காது. உங்க மாதிரி ஆட்களால்தான் எங்க முதல்வருக்கு கெட்ட பேரு' என்றெல் லாம் சத்தம் போட்டிருக்கிறார். இதனையடுத்து மற்ற அதிகாரிகள், அண்ணாதுரையை சமாதானப்படுத்தியிரு க்கிறார்கள். ஆனாலும் உயரதிகாரிகளிடம் இது குறித்து அண்ணாதுரை புகார் கொடுத்ததோடு, முதல்வரின் பாதுகாப்பு படை எஸ்.பி.யை சந்தித்தும் புகார் தெரி வித்திருக்கிறார். இதுதான் கோட்டையில் உள்ள போக்குவரத்துத் துறையில் பரபரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.''”

"சரிப்பா, கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசு  சுப்ரீம் கோர்ட்டை அணுக இருக்கிறதே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவெடுத்திருக்கிறதாம். காரணம், டிராய் என்கிற டெலிபோன் அத்தாரிட்டி கமிட்டி, கொடநாடு விவகாரம் நடந்த நேரத்தில் அந்தப்பகுதியில் பதிவான டெலிபோன் உரையாடல்களை மாநில காவல்துறைக்குத் தராமல், நந்தியாய் குறுக்கே நின்று இழுத்தடித்து வருகிறது. கேட்டால் ஒலிநாடாவாக உள்ள இந்த உரையாடல் பதிவுகளை டிஜிட்டலாக மாற்றவேண்டு மானால் அதற்குப் பலகோடி ரூபாய் தேவை என்கிற காரணத்தைச் சொல்லிவருகிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த டிராயால், இந்த வழக்கில் தொடர்புடை யவர்கள், சுதந்திரமாகச் சுற்றிவருகிறார்கள். எனவே, இந்த உரையாடல் பதிவுகளை ஒப்படைக்க வேண்டும் என்று டிராய் மீது வழக்கறிஞர் வில்சன் முலம் வழக்கைத் தொடர, தமிழக அரசு தயாராகிவருகிறது.''”

"தி.மு.க. அணியை உடைக்கும் முயற்சியில் நடிகர் விஜய் களமிறங்கியதாகச் சொல்கிறார்களே?''”

vijay

"தி.மு.க. அணியிலுள்ள கட்சிகளில் கம்யூனிஸ்டு களைத் தங்கள் பக்கம் கொண்டுவர முடியுமா? என  ஆர்வம் காட்டுகிறார் த.வெ.க. விஜய். தி.மு.க.வை எதிர்த்து எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது அவருக்கு உற்ற துணையாக இருந்தது கம்யூனிஸ்டுகள்தான். எனவே அதே பாணியில் அவர் காய்நகர்த்த  ஆரம்பித்திருக்கிறார். இதற்காக சில தூதுவர்களை அவர் காம்ரேட்டுகளிடம் அனுப்ப... அவர்கள் அந்தத் தூதுவர்களிடம் ’எம்.ஜி.ஆர். காலகட்டத்தின் அரசியல் நிலையே வேறு. மக்களை மதத்தால் பிரிக்கும் பா.ஜ.க. என்ற கட்சியே அப்போது இல்லை. இப்போதைய ஒரே தேவை, பா.ஜ.க.வை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பதுதான். தி.மு.க. இந்திய அளவில் பா.ஜ.க. எதிர்ப்பில் வலுவாக உள்ளது. சினிமா கவர்ச்சியின் மூலம்  கட்சி தொடங்கிய விஜய் பெறப்போகும் வாக்குகள் மதவாத பா.ஜ.க.வுக்கு சாதகமாகத்தான் அமையும். குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் நடிகர் விஜய் பக்கம் சிதறாமல் தடுக்கவேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக்கு உள்ளது. சிறுபான்மை யினருக்கு அரணா உள்ளது தி.மு.க. அணிதான். எனவே நாங்கள் தி.மு.க. அணியில்தான் தொடர்ந்து பயணிக்கவுள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு விஜய்க்கு கிடைக்கும் வாக்குகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்வோம்’எனச் சொல்லியிருக்கிறார்கள். எனினும் வேறு கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க முடியுமா? என்று பரபரக்கிறது த.வெ.க.''

"ஓமந்தூரில் 8ஆம் தேதி ராமதாஸ் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுகிறாரே?''”

"சமீபத்தில் டெல்லி சென்ற அன்புமணி, பா.ம.க.வை கைப்பற்றுவது குறித்து சட்ட ரீதியிலான அனைத்து வழி களையும் அங்கே ஆராய்ந்து விட்டு வந்திருக்கிறார். அதேபோல் நாங்கள்தான் உண்மையான பா.ம.க. என்று தேர்தல் கமி ஷனையும் அவர் அணுகுகிறார். இதையறிந்த ராம தாஸ், அன்புமணி யின் இந்த முயற்சியை முறி யடிக்க, அவரை நீதிமன்றத்தில் சந்திக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்த நிலையில், 8ஆம் தேதி ஓமந்தூரில் பா.ம.க.வின் செயற்குழுவைக் கூட்டவிருக்கும் டாக்டர் ராமதாஸ், பா.ம.க.வின் செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கத் திட்டமிட்டிருக்கிறார். மேலும் அவரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கவேண்டும் என்றும் அவர் சொல்லிவருகிறாராம். ராமதாஸின் நலன் விரும்பிகளோ, இவ்வளவு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டாமே என்று ஆலோசனை சொன்னார்களாம். ஆனால் ராம தாஸோ இறுக்க மாகவே இருக்கிறா ராம். அன்புமணியை பா.ம.க.வின் அடிப் படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்குகிறாரோ இல்லையோ, செயல் தலைவர் பதவி அன்புமணியிடமிருந்து பறிக்கப்படுவது உறுதி என்கிறார்கள் தைலாபுரத்துக்கு நெருக்கமானவர்கள்.''” 

"அமித்ஷாவின் தமிழகப் பயணம் திடீரென ரத்தாகியிருக்கிறதே?''”

"ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 7ஆம் தேதி தமிழகம் வரவிருந்தார். கட்சிப்பணிகள் காரணமாக அவர் அந்தப் பயணத்தை  ரத்து செய்ததாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான உண்மை காரணம் வேறு. நடிகர் விஜய், தங்கள் கூட்டணிக்கு வருவார் என்கிற எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதேபோல் எடப்பாடி யிடமிருந்தும் கூட்டணி ஆட்சிக்கான கிரீன் சிக்னல் கிடைக்கும் என்றும் அமித்ஷா எதிர்பார்த்தாராம். இந்த இரண்டு விசயமும் நடக்காததால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார் அமித்ஷா. அதனால்தான் அவர் இந்தமுறை தமிழகப் பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்கிறார்கள். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க.வுக்கான நிர்வாகிகள் பட்டியலை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது அக்கட்சியின் தேசியத் தலைமை. அதை வெளியிட்டால் தமிழக பா.ஜ.க.வில் கோஷ்டி யுத்தம் அதிகரிக்கலாம் என்று தயங்குகிறதாம் டெல்லி.'' ”

"ஆம்ஸ்ட்ராங் மனைவி புதுக்கட்சி தொடங்கி இருக்கிறாரே?''”

rang1

"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வருடம் ஜூலை 5 ஆம் தேதி  படுகொலை செய்யப்பட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுஷ்டிக்கப்பட்டது. பொத்தேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் முழுஉருவச் சிலையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாயின் தாயார் கமல்பாய் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ’"தமிழ் மாநில பகுஜன் சமாஜ்'’என்ற புதிய கட்சியை, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தொடங்கினார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்று தி.மு.க. அரசுக்கு எதிராக ஆவேசமாகப் பேசினார். முன்னதாக ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்குச் சென்றிருந்த அவர்,  பொற்கொடியிடம், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும். உங்கள் வெற்றிக்கு பா.ஜ.க. துணை நிற்கும். அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்கிறோம் என்று அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால், இதற்கு எந்த பதிலையும் பொற்கொடி சொல்லவில்லையாம். விரைவில் தமிழகம் வரவிருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாôவிடம், பொற்கொடியை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தும் ரகசியத் திட்டத்திலும் இருக்கிறாராம் நயினார்.''”

"திருபுவனம் விவகாரத்தில் அதிகாரிகள் முதல்வரிடமிருந்து பலவற்றையும் மறைப்பதாகச் சொல்கிறார்களே?''”

"திருபுவனம் அஜித்குமார் காவல் துறையினரால் மிகக்கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம், முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத்துக்கு சங்கடத்தையும்  நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பின்னணியில் தி.மு.க. பிரமுகர்களின் ஆதரவும், உயரதிகாரிகளின் உத்தரவுகளும் இருப்பதால், யார் அவர்கள் என்கிற கேள்வியை  பலரும்  கேட்டுவருகின்றனர். இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்ட குடுபத்தினரிடம் ஸாரி கேட்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டார் ஸ்டாலின். அவரைச் சுற்றியுள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரால்தான் இத்தகைய நெருக்கடியை அவர் சந்திக்க வேண்டியிருக்கிறது. உண்மையான பல தகவல்களை இந்த அதிகாரிகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதில்லை. இதையறிந்த அமைச்சர்கள் சிலரே ‘இந்த அதிகாரிகள், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் அந்தப் பக்கம் தாவிவிடுவார்கள். அதனால் போலீஸ் அதிகாரிகளை முழுதாக நம்பாமல், அவர்களின் அதிகாரத்திற்கு முதல்வர் கடிவாளம் போட வேண்டும். இல்லையேல்,  அந்த அதிகாரமே ஒரு கட்டத்தில் முதல்வரையே தாக்கலாம்’என்கிறார்கள் ஆதங்கத்தோடு.''” 

" ஆன்லைன் பெர்மிட் முறையால கிராவல் திருடியவர்கள் கைபிசைந்தபடி இருக்காங்க ளாமே''”

"ஆமாங்க தலைவரே, தமிழகம் முழுக்கவே சவுடு, கிராவல் எடுப்பதற்கான அனுமதி ராஜப்பா தரப்புக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. மணல் அள்ளுவது சம்பந்தமான விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், மணலை அள்ளுவது, அதற்கான அனுமதி குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பும் தரவில்லை. இதுதொடர்பான வழக்கு அடுத்த வாரம்தான் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அதில் எப்படி தீர்ப்பு வருகிறது என்று பார்த்து அதுசம்பந்தமான ஒப்பந்தங்களை யாருக்கு வழங்கலாம் என தமிழக அரசு முடிவெடுக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது கிராவல் குவாரிகளுக்கு, கிராவல் அள்ள ஆன்லைன் பெர்மிட் முறையை நடைமுறைப் படுத்தியிருப்பதால், அதைவைத்து ஒருமுறை மட்டுமே அள்ளமுடியும். முன்புபோல் அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, ஒரு பெர்மிட்டை வைத்து பலமுறை கிராவல் அள்ளமுடியாது என்பதால் கிராவல் திருடிய கும்பல் ஏகக் கடுப்பில் இருக்காங்களாம்.''””

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். திருபுவனம் இளைஞர் அஜித்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில் மூலகாரணமாக இருந்த, பேராசிரியை நிகிதா, திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியிலுள்ள  ’எம்.வி.எம். அரசு  மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்’ தாவரவியல் துறைத் தலைவராகப் பணிபுரிகிறார். இவருக்கு அந்தக் கல்லூரியிலேயே நல்லபெயர் இல்லை என்கிறார்கள். ’இவர் மனரீதி              யாக டார்ச்சர் செய்கிறார். எனவே, இவரை வேறு கல்லூரிக்கு மாற்றுங்கள்’ என்று அங்குள்ள மாணவிகள், கடந்த ஆண்டே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த சம்பவமும் நடந்திருக்கிறது.  நிகிதா மீது ஏகத்துக்கும் புகார்கள் இருப்பதால், அவர் மீது துறைரீதியிலாக நடவடிக்கை எடுக்க உயர் கல்வித்துறை தற்போது முடிவெடுத்திருக்கிறது.''’