முதியோர் சலுகை ரத்து! 9000 கோடி லாபம் பார்த்த ரயில்வே!

ss

ரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் வந்ததிலிருந்தே ரயில்வே துறை, நடுத்தர அடித்தட்டு வர்க்க மக்களைவிட்டு விலகிச்செல்லத் தொடங்கிவிட்டது. கடந்த பத்தாண்டு காலத்தில், மோடி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரயில்களில் பெரும்பாலும் ஏசி ரயில்களாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டுக்குள் இயங்கக்கூடிய ரயில்களின் குறைந்த கட்டணமே 1000 ரூபாய்க்கும் மேற்பட்டதாக இருப்பதால், நடுத்தர, நடுத்தட்டு வர்க்கத்தினர் ரயில் பயணத்தை பெருஞ்செலவாகப் பார்க்கும் சூழல்.

tr

மேலும், சென்னையிலிருந்து தமிழ்நாட்

ரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் வந்ததிலிருந்தே ரயில்வே துறை, நடுத்தர அடித்தட்டு வர்க்க மக்களைவிட்டு விலகிச்செல்லத் தொடங்கிவிட்டது. கடந்த பத்தாண்டு காலத்தில், மோடி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரயில்களில் பெரும்பாலும் ஏசி ரயில்களாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டுக்குள் இயங்கக்கூடிய ரயில்களின் குறைந்த கட்டணமே 1000 ரூபாய்க்கும் மேற்பட்டதாக இருப்பதால், நடுத்தர, நடுத்தட்டு வர்க்கத்தினர் ரயில் பயணத்தை பெருஞ்செலவாகப் பார்க்கும் சூழல்.

tr

மேலும், சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்லும் ரயில்களிலுள்ள ஸ்லீப்பர் கோச்சுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். இதனால், ஸ்லீப்பர் கோச்சுகளில் இடம்பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதேபோல், மன்மோகன் சிங் காலத்தில் தட்கல் முன்பதிவுக்கான இருக்கைகள் எண்ணிக்கை 25% என்றிருந்ததை, மோடியின் ஆட்சிக்காலத்தில் 50 சதவீதமாக உயர்த்தியதோடு நில்லாமல், அதை 60%, 70% அளவுக்கு உயர்த்தி தட்கல் முன்பதிவுகளின் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக ரயில்வே துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அதோடு, ப்ரீமியம் தட்கல் என்பது மீட்டர் வட்டியைப்போல் நம்முடைய பணத்தைப் பிடுங்குவதாக உள்ளது.

அது மட்டுமா? கொரோனா பரவலுக்கு முன்புவரை ரயில்வே கட்டணங்களில் மூத்த குடிமக்கள் சலுகைக்கட்டணம் என்பது இருந்தது. அதன்படி 8 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதமும், 60 வயது பூர்த்தியடைந்த ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதமும் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காலகட்டத்தில், 2020 மார்ச் 20ஆம் தேதி இந்த சலுகைக்கட்டணத்தை மோடி அரசு திடீரென ரத்து செய்தது. அப்படி ரத்து செய்யப்பட்டதை கொரோனா பரவல் முடிந்த பின்னர் திரும்பக் கொண்டுவராமல், அப்படியே மூடுவிழா நடத்தியது. இதன்காரணமாக மூத்த குடிமக்கள் அதிகக் கட்டணத்தில் ரயிலில் பயணித்தனர்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மூத்த குடிமக்கள் சலுகைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டதால் ரயில்வே துறைக்கு கடந்த ஐந்தாண்டுகளில் கிடைத்த லாபம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரயில்வே அமைச்சகத்தின் கீழுள்ள ரயில்வே தகவல் சேவை மையம் அளித்துள்ள பதிலில், கடந்த 2020 மார்ச் முதல், 2025 மார்ச் வரையிலான 5 ஆண்டுகளில், 31 கோடியே 35 லட்சம் மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களை மேற்கொண்டிருப்பதாகவும், அதன்மூலம், ரூ.20 ஆயிரத்து 133 கோடி வருவாய் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதில், முதியோர் சலுகைக்கட்டணத்தின்படி அவர்கள் பயணித்திருந்தால் ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.8 ஆயிரத்து 913 கோடி குறைவாகவே வருவாய் கிடைத்திருக்கும். எனவே, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 9 ஆயிரம் கோடி அளவுக்கு மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு லாபம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இது, முதியோரின் வயிற்றில் அடித்துச் சம்பாதித்த பணம்தானே?

nkn190425
இதையும் படியுங்கள்
Subscribe