"தேர்தல் வேலையை முன்னரே துவங்கிவிட்டோம். அதற்காகத்தான் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பய ணம் துவங்கினோம் எனத் தன்னை சுறுசுறுப்பாகக் காட்டிக்கொண்டா லும், செங்கோட்டையன் போர்க் கொடி தூக்கியது, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் விலகல் என ஒவ்வொன்றும் எடப்பாடியின் சுறுசுறுப்பை மந்த மாக்கியது என்பது தான் உண்மை. இத்தகைய சூழலில், மாவட்டவாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக ஐ.டி.விங் நிர்வாகிகளை நியமித்தது குறித்தான அறிக்கை தலைமைக் கழகத் திலிருந்து வெளியாக, கட்சியிலுள்ள மூத்த முன்னாள் அமைச்சர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் ராஜ்சத்யனை கட்சியிலி ருந்து வெளியே அனுப்புங்கள்' எனப் போர்க்கொடி தூக்கியுள்ளது எடப் பாடியின் படபடப்பை அதிகரித் துள்ளது.
கடந்த 1ஆம் தேதியன்று, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள பூத் பாகம் கிளைக்கழக நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, அவர் களின் பணிகளை முறைப்படுத்துவதற் காக மாவட்ட வாரியாக பொறுப் பாளர்கள் நியமனம் செய்யப்பட் டுள்ளதாக தலைமை கழகத்தி லிருந்து அறிக்கை வெளியா னது. இதில், நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 84 மாவட்டங்களுக்கு, மாவட்டத்திற்கு மூவர் என்ற ரீதியில் ஐ.டி.விங் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க் கள், கழக அமைப்புச் செயலர்களென மூத்த நிர் வாகிகள் மட்டுமே இருக்கும் பூத் கமிட்டி பொறுப்பில், ஐ.டி.விங்கிலிருப் பவர்களை எப்படி நியமனம் செய்யலாம்.? என மூத்த அமைச்சர்கள் மல்லுக்கட்டினர்.
"அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ்.ஸை வெளியேற்ற திரைமறைவில் பல வேலை களை செய்தவர் ராஜ்சத்யன். அதனை மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பாராட்டினர். இதனை தனக்கு சாதக மாக்கிக்கொண்ட ராஜ்சத்யன், சென்னை, சேலத்திலிருக்கும் எடப்பாடி பழனிச் சாமியின் வீட்டில், அவரை எந்தெந்த நிர்வாகிகள் சந்திப்பது, எப்போது சந்திப்பது என முடிவெடுத்ததோடு, அத்தகைய சந்திப்புகளில் தானும் உடனிருந்து அவர்களை சங்கடப் படுத்தினார். குறிப்பாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமியை ரகசியமாக சந்திக்கவந்தாலும், ராஜ்சத்யன் உடன் அமர்ந்துகொள்வதால் ஏகக்கடுப்பில் இருந்தனர். இச்சூழலில், பூத் கமிட்டி பொறுப்பாளர் அறிவிப்புக்குப்பின், "ராஜ்சத்யனை வெளியேற்றுங்கள்' கோஷம் வலுவாக எழுந்துள்ளது'' என்கிறார் கோவை கட்சி நிர்வாகி ஒருவர்.
சில மாதங்களுக்கு முன், ஐ.டி.விங் மாநில நிர்வாகி பிரசாத், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானபோது, ராஜ் சத்யன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆளுந்தரப் புக்கு எதிராக சரியாக செயல்படவில்லை யென்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங் கள் எழுந்தன. இதனையே சாக்காக வைத்து, ராஜ் சத்யனை கட்டம்கட்ட நினைத்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர், எடப்பாடியின் சுற்றுப்பயணத்திற்கு ஆந்திராவிலிருந்து தனி டீமை உருவாக்கி, தமிழகம் முழுவதும் வலம்வர வைத்தனர்
கோவை மாவட்டத்திலுள்ள ஐ.டி.விங் நிர்வாகி ஒருவரோ, "மணி டீமால் களமிறக் கப்பட்ட ஆந்திரா டீமின் பணி, எடப்பாடி பழனிச்சாமிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ராஜ்சத்யனுக்கு விருப்பமில்லை. இச்சூழலில், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனத்துக்கு அறிவிப்பு வந்ததுமே, மூத்த நிர்வாகிகளுக்கு ஆப்பு வைக்கும்விதமாக, ஐ.டி.விங்கிலிருப்பவர் களையே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமித்து, அந்த லிஸ்ட்டை எடப்பாடியின் கவனத்திற்கு கொண்டுசென்றார் ராஜ்சத்யன். சுற்றுப் பயணத்திலிருந்த எடப்பாடியோ, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்த பிறகு நியமனம் செய்யலாமெனத் தெரிவித்தாலும், ராஜ் சத்யனின் விடாப்பிடியான நச்சரிப்பால், கட்சியின் 84 மாவட்டங்களுக்கு தலா மூன்று பேர் வீதம் அடங்கிய பூத் கமிட்டி பொறுப் பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி. தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும், அந் தந்த மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடு குறித்தும், யார் வேட்பாளராக வரவேண்டுமென் றும் பரிந்துரை செய்யலாம். இதன்மூலம் கட்சி நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என எண்ணி யாரும் எதிர்பாராத நேரத்தில் இத்தகைய நிர்வாகிகள் லிஸ்டை வெளியிடச் செய்துள்ளார் ராஜ் சத்யன்'' என்கிறார் அவர்.
இது இப்படியிருக்க, "பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக ஐ.டி.விங் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட அறிக்கை வெளிவந்த வுடன் மூத்த அமைச்சர்கள் சிலர், இது நமக்கு எதிராகவே முடியும். நம்மை கண்காணிக்கவே இத்தகைய குழுவை ராஜ் சத்யன் ஏற்பாடு செய்துள்ளார். இது தவறான முன்னுதாரணம். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரப் பயணத் தில் ஈடுபட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட் டோர் செங்கோட்டையன் விவகாரத்தை ஆலோசனை செய்ததோடு, அவரது கட்சிப் பதவி பறிப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட அன்றே ராஜ்சத்யனையும் தகவல் தொழில்நுட் பப் பிரிவின் மாநில செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய அறிக்கையை வெளியிட வேண்டும் என எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் ஏனோ அதனை எடப்பாடி பழனிச்சாமி தற்போதுவரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கோட்டையன் வழியில் ராஜ்சத்யனா? என்பதனை வருகின்ற காலங்கள் முடிவு செய்யும்.
-வேகா