Skip to main content

கவர்னருடன் செல்ஃபி! அதிகாரிகளிடம் நெருக்கம்! -நிர்மலா வாக்குமூலம்!

Published on 28/04/2018 | Edited on 29/04/2018
கல்லூரி மாணவிகளைத் தவறான நோக்கத்தோடு அழைத்த வழக்கில், 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. விசாரணை, 6 மணி நேரம் சந்தானம் விசாரணையை ‘ஹாயாக’ எதிர் கொண்டுவிட்டு, மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைபட்டுக் கிடக்கிறார் பேராசிரியை நிர்மலா தேவி. //--> //--> நிர்மலாவின் அந்தரங்க நட்பு வட்டத்தில் உள்ள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

ddd

 

 

ddd

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

இந்தநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜரானார்கள். அப்போது, அடுத்த மாதம் 4 -ஆம் தேதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி காஞ்சனா, அன்றைய தினம் மூன்று மாணவிகளிடம் சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

 

 

 

Next Story

நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜர்! பூட்டிய அறையில் கல்லூரி செயலரிடம் குறுக்கு விசாரணை!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் சாட்சியாக உள்ள தேவாங்கர் கல்லூரி செயலர் ராமசாமி ஆகியோர் இன்று (12/03/2020) ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 

PROFESSOR NIRMALA DEVI COURT COLLEGE SECRETARY INVESTIGATION

காலை 10.30 மணிக்கு பூட்டிய அறையில் தொடங்கிய விசாரணை,  உணவு இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்தது. மாலை 05.30 மணி வரை நீடித்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தபோது, கல்லூரி செயலர் ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். 
 

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய ராமசாமி,  வயதின் காரணமாகவோ என்னவோ, மிகவும் களைப்புடன் காணப்பட்டார். வரும் 27- ஆம் தேதி மூவரும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றும் இதே ரீதியில் பூட்டிய அறையில் காலை முதல் மாலை வரை விசாரணை நடைபெறும் என்றார், இவ்வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர்.