Advertisment

ஒளிவு மறைவின்றி நூல்கள் தேர்வு! உறுதியளித்த முதல்வர்!

dd

மிழ்நாடு நூலகத்துறையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நூல்கள் கொள்முதல் செய்வதில் பல்வேறு ஊழல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து விரிவான செய்தியை கடந்த செப்.13-15 தேதியிட்ட இதழில் "நூலகத்துறை மோசடி! கொதிப்பில் பதிப்பாளர்கள்!' என்ற தலைப்பில் கட்டுரையாகப் பல்வேறு ஆதாரங்களுடன் பிரசுரித்திருந்தோம். பல்வேறு பதிப்பகத்தார் களின் குமுறல்களைத்தான் நாம் வெளிப்படுத்தியிருந்தோம். அவற்றில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும், அதன் தொடர்ச்சியாகத் தற்போதும், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கான கொள்முதல்வரை நடைபெற்ற தவறுகளையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

Advertisment

f

நாம் சுட்டிக்காட்டியிருந்த தவறுகள் என்னவென்றால்...

-நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வதற்காக கமிட்டியெல்லாம் இருந்த போதும், நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத்துக்கு ஆணை பிறப்பிக்கும் நம்பர் 1... அதாவது அவருக்கு மூளையாகச் செயல்படுபவருக்கு பிடித்த பதிப்பகங்

மிழ்நாடு நூலகத்துறையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நூல்கள் கொள்முதல் செய்வதில் பல்வேறு ஊழல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து விரிவான செய்தியை கடந்த செப்.13-15 தேதியிட்ட இதழில் "நூலகத்துறை மோசடி! கொதிப்பில் பதிப்பாளர்கள்!' என்ற தலைப்பில் கட்டுரையாகப் பல்வேறு ஆதாரங்களுடன் பிரசுரித்திருந்தோம். பல்வேறு பதிப்பகத்தார் களின் குமுறல்களைத்தான் நாம் வெளிப்படுத்தியிருந்தோம். அவற்றில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும், அதன் தொடர்ச்சியாகத் தற்போதும், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கான கொள்முதல்வரை நடைபெற்ற தவறுகளையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

Advertisment

f

நாம் சுட்டிக்காட்டியிருந்த தவறுகள் என்னவென்றால்...

-நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வதற்காக கமிட்டியெல்லாம் இருந்த போதும், நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத்துக்கு ஆணை பிறப்பிக்கும் நம்பர் 1... அதாவது அவருக்கு மூளையாகச் செயல்படுபவருக்கு பிடித்த பதிப்பகங்களிலிருந்து தான் அதிக கொள்முதல் நடக்கிறது. இப்படியான சூழல் மாற்றப்பட வேண்டும்.

-பொது நூலகங்களுக்காக நூல்கள் கொள்முதலில் கடந்த பல ஆண்டுகளாகவே வெளிப்படையான அறிவிப்புகள், தேர்வுகள் நடைபெறாமல், மறைமுகக் கமிஷன் காரணமாக, சிபாரிசுகள் அடிப்படையில் சில குறிப்பிட்ட பதிப்பகங்கள், நூல் விற்பனை நிலையங்களின் வெளியீட்டு நூல்கள் மட்டுமே பெரும் எண்ணிக்கையில் வாங்கப்பட்டிருக் கின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

-பபாசி அமைப்பு நடத்தும் புத்தகக் கண்காட்சியில் இடம்பெறாத, பெயரே தெரியாத பதிப்பகங்களின் வெளியீடுகள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதும், பதிப்பகத் துறையில் பல்லாண்டு காலமாக வெற்றிகரமாக ஈடுபட்டுவரும் பதிப்பகங்கள் ஒதுக்கப்படுவதும் தற்போது பெருத்த சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

-சில பதிப்பகங்களிடமிருந்து பெறப்பட்ட நூல்களுக்கு கமிஷன் பெறவேண்டி அனுப்ப வேண்டிய தொகையைவிடக் கூடுதலாக லட்சக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு, பின்னர் திரும்பப் பெறுவதும் நடந்திருக்கிறது. இது கண்ணுக்குத் தெரிந்து நடக்கும் லஞ்சத் தாண்டவம்.

மறைந்த பிரபல எழுத்தாளர்களின் நூல்களை, வேறு நபர்கள், அப்படியே காப்பி செய்து அவர்களின் பெயரிலேயே வேறு பதிப்பகங்களின் பெயரில் வெளியிட்டு அதை நூலகங்களுக்கு விற்று கல்லா கட்டியிருக் கிறார்கள். எக்கச்சக்கமான நபர்களைக் கொண்ட தேர்வுக்கமிட்டி இருந்தபோதும் நூல்களைப் புரட்டிக்கூடப் பார்க்காமல் வாங்கியிருப்பதன் மூலம், மோசடிகளுக்கு துணை நின்றிருப்பது தெரியவருகிறது. இதுகுறித்த ஆதாரங்களையும் நாம் வெளி யிட்டிருந்தோம். இதுபோன்ற மோசடிகள், சட்டப்படியாக தண்டனைக்குரியவை என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

ff

அதேபோல், கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு முதற்கட்டமாக 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ், ஆங்கிலம் என இரண் டாகப் பிரித்து, தமிழுக்கு 760 பதிப்பாளர்களிட மிருந்து 1 லட்சத்தி ஆறாயிரம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஆங்கில நூல்களை, 200 பதிப்பகங்களிடமிருந்து 2 லட்சத்தி 55 ஆயிரம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தமிழ் நூல்களைவிட ஆங்கில நூல்கள் அதிக மாக வாங்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மொழிக்கு மதிப்பளிக்கும் ஆட்சியில், நூலகத்துறை மட்டும் தமிழைவிட ஆங்கிலத்துக்கு அதிக மதிப்பளித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். நம்முடைய ஆதாரப்பூர்வமான, விரிவான கட்டுரையின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது.

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி புதனன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற "கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூல் வெளியீட்டு விழாவில், விகடன் குழும இயக்குநர் ஸ்ரீநிவாசன், நூலகத்துறையில் நூல்கள் கொள்முதலில் நடக்கும் தவறுகளைச் சரிசெய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த முதல்வர், "எனது உரையினைத் தொடங்குவதற்கு முன்னால், வரவேற்புரை ஆற்றியிருக்கக் கூடிய ஸ்ரீநிவாசன் அவர்கள் இங்கே, நம்பிக்கையோடு எடுத்து வைத்திருக்கக்கூடிய, அவருடைய கோரிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்ல விரும்புகிறேன். அவர் எடுத்து வைத்திருக்கக்கூடிய கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை முதலில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் இந்த நூல்கள் வாங்கக்கூடிய விஷயத்தில் நடந்திருக்கக்கூடிய பல்வேறு தவறுகள் இங்கே சொல்ல முடியாது. சொல்வதும் முறையல்ல. ஆனால் அவை எல்லாம் சரிசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. சரி செய்வதற்கே இவ்வளவு நாட்கள் ஆகியிருக்கிறது. அதற்குள் நான் போக விரும்பவில்லை. சீனிவாசன் சொன்னது போன்று ஒளிவு மறைவின்றி நூல்களைத் தேர்வு செய்ய ஆன்லைன் வழியாக விண் ணப்பங்களைப் பெற்று, அதனைத் தேர்வு செய்ய நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழு அமைப்பதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்று பேசினார்.

இதன்மூலம், முதல்வர் உறுதியளித்தபடி இனிவரும் காலங்களில் நூல்கள் கொள் முதல் தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என நம்புவோம்.

-ஆதவன்

படங்கள்: ஸ்டாலின்

nkn270923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe