இளைஞர் சமூகத்துக்கு வழிகாட்டும் கலைஞர் புகைப்படக் கண்காட்சி! -அசத்திய சேகர்பாபு

kalaignar

தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் ‘திருவாரூர் முதல் சென்னை மெரினா’ வரையிலான வரலாற்றை அறிய, அரிய புகைப்படங்களுடன் கூடிய நவீன கண்காட்சியாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் சென்னை பாரீஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக ‘"காலம் உள்ளவரை கலைஞர்'’ எனும் புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தப் புகைப்படக் கண்காட்சியை கடந்த 1ம் தேதி திரைப்பட கலைஞர் பிரகாஷ்ராஜ் திறந்துவைத்தார்.

இந்த புகைப்படக் கண்காட்சியின் சிறப்பு, வெறும் புகைப்படங்கள் மட்டுமின்றி, இன்றைய தலைமுறையினரும் எளிதாக கலைஞர் குறித்து அறிந்துக்கொள்ள ஏதுவாக தொழில் நுட்பங்களின் உதவியுடன் பல்வேறு புதிய விஷயங்களையும் உருவாக்கியுள்ளனர். கண்காட்சிக்குள் நுழைந்ததும் 40 வயதில் கலைஞர், தமிழைப் போற்றி கவிதை பாடுகிறார். இது ஹாலோகிராபி தொழில்நுட்பத்தின் அடிபடையில் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தபடியாக பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கிய ‘"வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல்'’எனும் குறும்படம் இடம் பெற்றுள்ளது. அதேபோல், நவீன தொழில்நுட்பத்துடன் 3டி கேமராவில் பதிவு செய்த கலைஞரின் வரலாற்று காவியமும், கலைஞர் வழியில் தொடரும் தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கிக்ச கூறும் 3டி காட்சியும் வடிவமைக்கப்பட்

தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் ‘திருவாரூர் முதல் சென்னை மெரினா’ வரையிலான வரலாற்றை அறிய, அரிய புகைப்படங்களுடன் கூடிய நவீன கண்காட்சியாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் சென்னை பாரீஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக ‘"காலம் உள்ளவரை கலைஞர்'’ எனும் புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தப் புகைப்படக் கண்காட்சியை கடந்த 1ம் தேதி திரைப்பட கலைஞர் பிரகாஷ்ராஜ் திறந்துவைத்தார்.

இந்த புகைப்படக் கண்காட்சியின் சிறப்பு, வெறும் புகைப்படங்கள் மட்டுமின்றி, இன்றைய தலைமுறையினரும் எளிதாக கலைஞர் குறித்து அறிந்துக்கொள்ள ஏதுவாக தொழில் நுட்பங்களின் உதவியுடன் பல்வேறு புதிய விஷயங்களையும் உருவாக்கியுள்ளனர். கண்காட்சிக்குள் நுழைந்ததும் 40 வயதில் கலைஞர், தமிழைப் போற்றி கவிதை பாடுகிறார். இது ஹாலோகிராபி தொழில்நுட்பத்தின் அடிபடையில் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தபடியாக பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கிய ‘"வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல்'’எனும் குறும்படம் இடம் பெற்றுள்ளது. அதேபோல், நவீன தொழில்நுட்பத்துடன் 3டி கேமராவில் பதிவு செய்த கலைஞரின் வரலாற்று காவியமும், கலைஞர் வழியில் தொடரும் தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கிக்ச கூறும் 3டி காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முரசொலி அலுவலகத்தில் கலைஞர் அமர்ந்திருப்பது போல் மிகவும் தத்ரூபமாக அவரின் சிலை வடிமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் பிறந்த திருவாரூர் இல்லம். 13 வயதில் அவர் மேற்கொண்ட இந்தி எதிர்ப்பு போராட்டம், டால்மியாபுரம் இரயில் நிலையத்திற்கு தமிழில் கல்லக்குடி என பெயர் மாற்றம் கோரி தண்டவாளத்தில் படுத்தது, கலைஞரின் திருமணப் படங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. வெறும் படங்களாக மட்டுமின்றி, கலைஞர் மேற்கொண்ட போராட்டங்களும், கைதுகளும் தொடர்பாக முழுமையான தகவலும் இடம்பெற்றுள்ளது. பெண் சமூதாயம் முன்னேறினால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறும் என மகளிருக்கு பல திட்டங்களை வகுத்தார். அந்தத் திட்டங்கள் குறித்தான விவரங்கள் தனியே பட்டியிலிடப்பட்டிருந்தது. குறிப்பாக, கலைஞர் தன் தாய் காலமான பிறகு எழுதிய "என்னோடு கலந்துவிட்டாய் அம்மா'’எனும் வரிகள் இதுவரை நாம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. திருச்செந்தூர் சுப்ரமணியபிள்ளை கொலைக்கு கலைஞர் நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் படம், கோவா விடுதலை வீரர் ரானடே போர்ச்சுக்கல் சிறையில் இருந்து விடுதலை அடைய உதவிய போப்பாண்டவருக்கு நன்றி தெரிவிக்க அண்ணா வேண்டுகோள் விடுத்திருந்தார். 1970ல் கலைஞர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது, போப்பாண்டவரை நேரில் சந்தித்து அண்ணா வைத்த வேண்டுகோளை அங்கு நிறைவேற்றினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம், குடும்பத்தினருடன் கலைஞர் இருக்கும் புகைப்படம், திரைத்துறையிலும், நாடகத்துறையிலும், கலைஞரின் பங்களிப்புகள் குறித்தான படம், நாடகத்தில் வேடம் ஏற்று நடித்திருந்த கலைஞரின் படம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

இந்த புகைப்படக் கண்காட்சியில் கலைஞர் தமிழ்நாட்டிற்கு செய்த பல முக்கிய திட்டங்களில் சிலவற்றை தொகுத்து ஒரு புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த படம் அங்கு வந்த அனேகமானவர்களை கவர்ந்திழுத்தது. ‘முதல்வர் முத்தமிழறிஞரின் முத்திரைப் பதிவுகள்’ எனும் தலைப்பில் இடம்பெற்றிருந்த அந்தப் படத்தில் அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் 1969ல் பதவி ஏற்றபின் 1975வரை அவரது ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த திட்டங்கள் பட்டியிலிடப்பட்டிருந்தது. அந்த பட்டியலில்,1969ம் ஆண்டு: மனுநீதித் திட்டம், காவல்துறை முதல் ஆணையம் -1970ம் ஆண்டு: குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் - சுற்றுலா வாரியம். சேலம் உருக்காலை திட்டம் நில உச்ச வரம்பு சட்டம், நீராகும் கடலுடுத்த... தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், கல்லக்குடி பெயர் மாற்ற வெற்றி விழா அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் சட்டம் 1971ம் ஆண்டு: கிராமங்களுக்கு இணைப்புச் சாலை திட்டம், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் தனித்துறைகள், தனி அமைச்சர்கள், திட்டக்குழு உருவாக்கம் சிப்காட் தொழில் வளாகங்கள் தோற்றம் 1972ம் ஆண்டு: அரசு ஊழியர் ரகசிய குறிப்பேட்டு முறை ஒழிப்பு 1973ம் ஆண்டு: பேருந்துகள் நாட்டுடைமை சாலை சந்திப்புகளில் மேம்பாலத் திட்டம் காவல் துறையில் மகளிர் நியமனம் 1974ம் ஆண்டு: பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் வாரிசுக்குக் கருணை அடிப்படையில் நியமனம்.

ஆதிதிராவிடர் இலலச கான்கிரீட் வீட்டு வசதித் திட்டம். மாநில சுயாட்சித் தீர்மானம். பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்புத் திட்டம். அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்பு. மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுத் திட்டம். சிங்கசரவேலர் மீனவர் வீட்டுவசதித் திட்டம்

1975ம் ஆண்டு:திருக்கோயில்களில் கருணை இல்லங்கள் விதவை மகளிர்க்கு இலவசத் தையல் இயந்திரங்கள். விதவை மகளிர்க்கு உதவித் தொகை உள்ளிட்டவை கவனிக்கத்தக்கவை. இந்தப் புகைப்படக் கண்காட்சியில் கலைஞர், இராசாத்தி அம்மாள், கனிமொழி மூவரும் இணைந்து எடுத்திருந்த படம் இடம்பெற்றிருந்தது. இதில், கனிமொழி எம்.பி.யின் சிறுவயது படம் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த ‘காலம் உள்ளவரை கலைஞர்’ புகைப்படக் கண்காட்சியில், பா.விஜய் எழுதி இயக்கிய கலைஞர் பிறப்பு முதல் அவரது இறுதி நாள் வரையிலான ஒரு குறும்படமும் திரையிடப்பட்டது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் காலமான அன்று எழுதிய, ‘"ஒரு முறை அப்பா என்று அழைத்துகொள்ளவா'’எனும் கவிதையும் இடம் பெற்றிருந்தது. இந்தக் காணொளியில், தந்தை பெரியார் கருப்புக் கொடியை கலைஞர் முன் வைத்து, இதுதான் நமது இயக்கக் கொடி என அறிமுகம் செய்யும்போது, கலைஞர் அருகில் இருந்த சிறு ஊசியை எடுத்து தனது கையின் கட்டை விரலில் கீறி, அதிலிருந்து வந்த ரத்தத்தை அந்தக் கருப்பு கொடியில் வைத்து கருப்பில் சிவப்பு, இதுவே நமது புரட்சி என இயக்கக் கொடியை வடிவமைத்த விதமும் படமாக்கப்பட்டிருந்தது.

கடந்த 6ஆம் தேதி இந்த புகைப்பட கண்காட்சியை நக்கீரன் ஆசிரியர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரி செல்வி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பார்வையிட்டனர். இவர்களுடன் இந்த புகைப்பட கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் சேகர்பாபுவும் இருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி, இந்த குறும்படத்தை பார்த்துமுடித்துவிட்டு எழுந்தபோது, சில துளிகள் கண்ணீர் சிந்தினார். கனிமொழி எம்.பி. தனது சிறு வயது புகைப்படத்தை பார்த்ததும் புன்னகைத்தார்.

இந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்களுடனும், இளைஞர்களுடனும் பேசியபோது, ""கொடி உருவான வரலாற்றை இதன் மூலம்தான் அறிந்தோம். காணொளி மூலம், கலைஞர் நம் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு போராடியிருக்கிறார். இன்று நமக்கு கிடைக்கும் சிறுசிறு விஷயங்களுக்காக எவ்வளவு போராடியிருக்கிறார். இதனை எல்லாம் பார்த்தபோது மனசு சூடாக மாறியது. இனி நாமும் அவர் போராடி வளர்த்தெடுத்ததைக் காத்து மேல்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்பதை உணர்ந்தோம்''’என்றனர்.

இந்த புகைப்படக் கண்காட்சியை தமிழ்நாட்டிலுள்ள இளம்தலைமுறைகள் அனைவரும் பார்வையிட்டால்தான், திராவிட இயக்கங்களின் வரலாறும், கலைஞர்... திராவிட இயக்கத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் செய்த பல்வேறு பணிகளையும் எளிய முறையில் அறிந்துகொள்ளும்படி வெகு சிறப்பாக நேர்த்தியாக ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து இந்தக் கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு நேர்த்தியாக உருவாக்கியுள்ளார் என பார்வையிட்ட அனைவரும் வெகுவாக பாராட்டிச் சென்றனர்.

இதையும் படியுங்கள்
Subscribe