"ஹலோ தலைவரே, மணல் பிசினஸிலிருந்து ஒதுங்கிட் டேன்னு சொன்ன ஒரு தொழிலதிபரின் டைரிக்கு இப்ப பரபரப்பா உயிர் கொடுக்கப்பட்டிருக்கு.''”

"யாரு சேகர் ரெட்டியா?''”

sekar reddy

"அவரேதாங்க தலைவரே, 2016-ல் புது 2000 ரூபாய் நோட்டு வந்தப்ப வருமானவரித்துறை அதிரடி ரெய்டு நடந்தது. அப்ப, அவருடைய சீக்ரெட் டைரியை அதிகாரிகள் கைப்பற்றினாங்க. ரெய்டு தொடர்பாக வருமான வரித்துறை போட்ட வழக்கில் இருந்து, குற்றத்துக்கான போதுமான ஆதாரம் இல்லைன்னு சொல்லி, ரெட்டியை விடுவிச்சிடிச்சி நீதிமன்றம். அப்படிப்பட்ட வழக்கில் கைப்பற்றப்பட்ட டைரியை எடுத்து, சேகர் ரெட்டியிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக இப்ப பலருக் கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கு.''”

Advertisment

"யார் யாருக்கு நோட்டீஸ்?''”

"அப்ப அதிகார பவர்ல இருந்த ஓ.பி.எஸ், எடப்பாடி, தங்கமணி, எம்.சி.சம்பத், ’முக்குலத்தோர் புலிப்படை’ நடிகர் கருணாஸ், இன்னொரு சாதிக்கட்சித் தலைவர்ன்னு சிலருக்கு, இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கு. இந்த வரிசையில் தற்போது தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருக்குறவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கு. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அவர் அமைச்சராக இருந்தபோது, சேகர் ரெட்டியிடம் கை கோர்த்திருந்ததா டைரி சொல் கிறதாம். அ.தி.மு.க. தரப்பு இந்த நோட்டீஸைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தி.மு.க. தரப்புக்கு இது ஷாக் கொடுத் திருக்கு. அப்போது கவர்ன ரிடம் தி.மு.க. கொடுத்த புகார் மனுவின் அடிப்படையிலேயே சேகர் ரெட்டி குறிவைக்கப் பட்டார். இப்போது அவர் டைரியை வைத்து தி.மு.க. அமைச்சரைக் குறிவைக்கிறது டெல்லி. அ.தி.மு.க. மாஜிக்களை லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தி.மு.க. குறிவைத்ததால், இப்போது வருமான வரித்துறை மூலம் தி.மு.க.வைக் குறிவைக்கிறதாம் பா.ஜ.க.''”

"பரபரப்புக்கு நடுவிலும், முதல்வரின் நடைப்பயிற்சி வீடியோ ஒன்னு வைரலானதே?''”

Advertisment

stalin

"ஆமாங்க தலைவரே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அதனால் எவ்வளவு பணிகள் இருந்தாலும் தினமும் நடைப்பயிற்சி யைத் தவறாமல் கடைப் பிடித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி அடையாறு தியோஸபிகல் சொசைட்டி வளாகத்திற் குள், அமைச்சர் மா.சு. வுடன் அவர் நடைப் பயிற்சி மேற்கொண்ட போது, வாக்கிங் சென்ற பொதுமக்களில் சிலர், ஆச்சரியமாக அவரிடம் உரையாடினர். அப்போது ஒரு பெண்மணி அவரை அணுகி, ’சார், எப் போதுமே இளமையா... மார்க்கண்டேயனாவே இருக்கீங்களே எப்படி சார்?’என்று கேட்க, அதற்கு மிகவும் வெட்கத்தோடு பதில் சொன்னார் ஸ்டாலின். ஆட்சியின் திட்டங்களை மக்கள் பாராட்ட, முதல்வர் கைகட்டி அதைக் கேட்டுக்கொள்ள, இந்த வீடியோ காட்சிதான் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்திக்கிட்டு இருக்கு.''”

"ம்... முதல்வர் வாக்கிங்கின்போது போலீஸ் பாதுகாப்பு கிடையாதா?''”

"முதல்வராக எடப்பாடி இருந்தபோது, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு மிகவும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டி ருந்தது. அதேபோல முதல்வர் ஸ்டாலினுக்கும் அதிகப்படி யான போலீஸ் பாதுகாப்பு கொடுத்தபோது, எனக்கான பாதுகாப்பைக் குறையுங்கள்னு சொல்லிவிட்டார். அதனால், 30 சதவீதமாக அவரது ரெகுலர் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இன்னும் குறையுங்கள் என்று முதல்வர் கேட்க, ’ஸாரி சார்... புரோட்டகால்படி, இதற்குமேல் குறைக்க முடியாதுன்னு சொல்லிவிட்டது காவல்துறை. இந்தநிலையில், அவர் வாக்கிங் செல்லும்போது அந்த 30 சதவீத பாதுகாப்பையும் தவிர்த்துவிட்டு, ஒரே ஒரு போலீஸ் ஜீப் மட்டும் பேருக்கு வந்தால் போதும்னு சொல்லிவிட்டார் ஸ்டாலின்.''

"நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் 200-க்கும் அதிகமான அறிவிப்பு களை முதல்வர் ஸ்டாலின் அறிவிச்சாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, இவ்வளவு திட்ட அறிவிப்புகளில், மிக முக்கியமான 3 அறிவிப்புகள் எல்லோரின் கவனத்தையும் ஈர்த் திருக்கு. குறிப்பாக, மெரினா கடற்கரையில் 2.21 ஏக்கரில் 39 கோடி மதிப்பீட்டில் கலைஞருக்கு நினைவிடம் அமைப்பது, மதுரையில் 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 மாடி கொண்ட பிரமாண்டமான கலைஞர் நூலகம் அமைப்பது, சென்னை கிண்டியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.89 ஏக்கரில் பன்னோக்கு உயர் சிகிச்சை அரசு மருத்துவமனை உருவாக்குவது ஆகியவை பிரதானமான வை. இதற்கான பணிகளை விரைந்து தொடங்கணும்னு முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார். இவற்றுக்கான திட்ட வரைபடக் கோப்புகள், நிதித்துறையின் ஒப்புதலுக்காக இப்போது காத்திருக்கிறதாம்.''

"தலைமைச் செயலாளர் இறையன்பும் பரபரப்பா செயல்படுகிறாரே?''”

rr

"ஆமாங்க தலைவரே, பொதுவாக தலைமைச் செயலாளராக இருப்பவர்கள், நிர்வாக பணிகளை கவனிப்பது, கோப்புகளை ஆராய்வது, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடுவதுன்னு இருந்துடுவாங்க. ஆனால், தற்போதைய தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு, மேற்கண்ட பணிகளை கவனிப்பதோடு களப் பணிகளிலும் இறங்கி விடுகிறார். இப்ப மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியுடன், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்கள், கழிவு நீரகற்றும் கால்வாய்கள் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா?ன்னு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் இறையன்பு. அப்போது தேவையான உத்தரவுகளையும் அவர் உடனுக்குடன் பிறப்பிக்க, அதிகாரிகள் தரப்பு ’அடடே’ போடுகிறது.''”

"பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் சீட்ஷேரிங் உரசல் உண்டாகி இருக்குதே?''’

"ஆமாங்க தலைவரே, உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கூட் டணியில் உள்ள பா.ஜ.க, தரப்பு, தங்களுக்கு 25 சதவீத இடங்களை கேட்டது. அதற்கான பேச்சுவார்த்தையை அக்கட்சி சார்பில் கரு.நாக ராஜனும், கராத்தே தியாகராஜனும் ஆரம்பித்தனர். மூன்றுநாள் நடந்த அந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவில்லை. பா.ஜ.க.வுக்கு 4 சதவீத இடங்களை மட்டுமே தருவோம்ன்னு அ.தி.மு.க. சொல்லிவிட்டதால், பா.ஜ.க. தரப்பு கொதிநிலையில் இருக்கிறது. அதற்குள்ளாகவே, அ.தி.மு.க. போட்டியிடும் இடங்களை ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் அறி வித்துவிட்டனர். இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா? வேண் டாமா?ன்னு 22-ந் தேதிவரை விவாதித்துக்கொண்டிருந்தது பா.ஜ.க.''”

"பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி மா.செ.க்களுக்கு டோஸ் விட்டிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி, தனித்துப் போட்டியிடுவதாக பா.ம.க. பகிரங்கமாக அறிவித்தது. எனினும் வட தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க.வுடன் ரகசியக் கூட்டணி வைத்துக் கொண்டு போட்டி யிட, அந்தந்த மாவட்ட பா.ம.க.வினர் திட்டமிட்டு, அதற்கான காய் நகர்த்தலில் ஈடுபட்டனர். இதை யறிந்து சம்பந்தப்பட்ட பா.ம.க. மா.செ.க்களுக்கு செம டோஸ் கொடுத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். அதுமட்டுமல்லாமல், அனைத்துப் பதவிகளுக்கும் பா.ம.க.வினரை போட்டியிட வைக்கிறார்களா? இல்லையா? என மாவட்ட நிர்வாகிகளைக் கண்காணிக்க, 9 மாவட்டங் களுக்கும் பொறுப்பாளரையும் நியமித்திருக்கிறார் ராமதாஸ்.''”

"உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சைடிலும் சலசலப்பு தெரியுதே?''”

"உண்மைதாங்க தலைவரே, கூட்டணிக் கட்சிகளின் பலம் தி.மு.க. பக்கம் அதிகமா இருந்தாலும், அவற் றின் சீட் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. இதை நிறைவேற்ற தி.மு.க. திணறியதால் அந்த சைடிலும் அதிருப்தி நிலவுது. இதனால் போட்டி வேட் பாளர்கள் களமிறங்கும் போக்கும் அதிகரிக்குது. அதாவது, தி.மு.க.வை எதிர்த்து தோழமைக் கட்சியினரும், தோழமைக் கட்சியினரை எதிர்த்து தி.மு.க.வும் போட்டியிட, பல இடங்களிலும் வரிந்துகட்டுகின்றனர். வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் 25-ந் தேதி வெளியாகிறது. அன்றைக்குத் தான் போட்டி வேட்பாளர்கள் வாபஸ் பெற்றார் களா? களத்தில் நிற்கிறார்களா? என்பது தெரியும்.''”

"தமிழக காவல்துறை தலைவரான டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுடன் புதிய கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை செய்திருக்காரே?''”

rr

"தமிழக சட்டம் ஒழுங்கு குறித்தும், தீவிர வாதிகள் நடமாட்டம் குறித்தும் டி.ஜி.பி. சைலேந் திரபாபுவை ராஜ்பவனுக்கு அழைத்து, தீவிரமாக விவாதித்திருகிறார் கவர்னர். அப்போது அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, சிறைவாசிகள் 700 பேரை விடுதலை செய்ய இருந்தது குறித்துத் தனக் குள்ள சந்தேகங்களையும் பல கேள்விகளையும் டி.ஜி.பி.யிடம் கேட்டிருக்கிறார் கவர்னர். மேலும், அவர்களை விடுதலை செய்வதில் தனக்கு உடன் பாடில்லை என்றும் அப்போது அவர் சொன்னதாகவும் சொல் கிறார்கள். அதேபோல் உளவுத் துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதத்தையும் தனியே அழைத்த கவர்னர், தி.மு.க.வுக்கு எதிராக யார் புகார் கொடுத்தாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுங் கன்னு செக் வைக்கும் விதத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறாராம்.''”

"போக்குவரத்துத் துறையில் பரபரப்பு அதிகமா இருக்குதே?''”

”ஆமாங்க தலைவரே, அங்க கலெக்ஷன் மேளா, வெகு ஜோரா நடக்குதாம். இப்ப அங்கங்க இருக்கும் ஆர்.டி.ஓ. அதிகாரிகளிடம், நீங்க இப்ப இருக்கும் இதே இடத்தில் தொடரணும் என்றாலும், அல்லது வேறு இடத்துக்கு மாற்றலாகிச் செல்லணும் என்றாலும், அதுக்கு ரேட் ஒரு ’சி’. அதைக் கொடுத்துட்டு, உங்க சாய்ஸை நீங்க டிக் அடிக்கலாம் என்கிறார்களாம். அதேபோல் அந்தத் துறையில் இருக் கும் ஒவ்வொரு பதவியில் இருப்பவர்களிடமும் அதிரடி வசூல் நடக்குதாம்.''”

"அமைச்சரவை மாற்றம்?''”

"தீவிர டிஸ்கஷன் நடந்திருக்கு. போதிய அளவு வெயிட்டான இலாகாக்கள் இல்லை என்று குமுறிக் கொண்டிருக்கும் சீனியர் அமைச்சர் களுக்கு கூடுதல் துறைகள் கிடைக்க வாய்ப்பிருக்குதாம். ஊரக வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சி இப்படிப்பட்ட அடிஷனல் துறைகளில் மாற்றங்கள் இருக்கலாம்னு கோட்டையில் பரபரப்பா பேச்சு அடிபடுது.''”

rra

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். அண்மையில் நடந்த அ.ம.மு.க. தினகரன் மகள் திருமணத்தில் சசிகலா கலந்துக் கிட்டாலும், அதற்கு குடும்ப உறவுகள் பலரும் அழைக்கப்படலையாம். குறிப்பாக சசிகலாவின் சகோதரரான திவாகரன், ஜெ.ஜெ.டி.வி. பாஸ் கரன் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு போகலை யாம். அதேபோல், ’ திருமணத்தில் சம்பிரதாய உணர்வோடுதான் கலந்துக்கறேன். இதனால், நான் அவரது அரசியலை ஆதரிக்கிறேன்ன்னு அர்த்தமல்லன்னு முக்கிய உறவுகளிடம் சொன்னாராம் சசி...''”