Advertisment

அப்படிச் சொன்னால்தான் சீமானுக்குப் புரியும் -கே.எஸ்.அழகிரி பளிச் பேட்டி!

ksalagiri

காங்கிரசின் தற்போதைய செயல்பாடு -அதன் மீதான விமர்சனம் -சீமானுடனான மோதல் எல்லாவற்றுக்கும் நக்கீரனுடனான நேர்காணலில் பதிலளித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

Advertisment

கட்சிக்கு தலைமை இல்லை, தலைவரும் இல்லை என்று உங்கள் கட்சியின் மூத்த தலைவர்களே சொல்லி வந்த நிலையில், முழுநேர தலைவராக இருப்பதாக சோனியா சொல்லியிருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு திருப்தியா?

Advertisment

ksalagiri

சோனியா முழுநேர தலைவரா, இடைக்கால தலைவரா என்கிற விவாதமே தவறான விவாதம். இடைக்கால தலைவர் என்பது ஒரு தொழில்நுட்ப வார்த்தை. கட்சியின் அமைப்பு விதிகளில் இருக் கக்கூடிய வார்த்தை. அகில இந்திய காங்கிரஸ் கூடி ஒருவரை அங்கீகரிக்கும் வரை ஒருவர் இடைக்கால தலைவராக இருப்பார் என்பது அதனுடைய பொருள். அதனை நாகரிகமாக தெளிவுபடுத்திவிட்டார் சோனியா அம்மையார்.

ராகுல், ப்ரியங்கா ஆகியோரை தலைவராக நியமிப்பதை எது தடுக்கிறது?

எங்கள் கட்சியின் தலைவராக இருப்பது யார் என்பதை நாங்கள்தான் முடிவு செய்திருக்கிறோம். அவர் களது காலம் வரும்வரை இவ

காங்கிரசின் தற்போதைய செயல்பாடு -அதன் மீதான விமர்சனம் -சீமானுடனான மோதல் எல்லாவற்றுக்கும் நக்கீரனுடனான நேர்காணலில் பதிலளித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

Advertisment

கட்சிக்கு தலைமை இல்லை, தலைவரும் இல்லை என்று உங்கள் கட்சியின் மூத்த தலைவர்களே சொல்லி வந்த நிலையில், முழுநேர தலைவராக இருப்பதாக சோனியா சொல்லியிருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு திருப்தியா?

Advertisment

ksalagiri

சோனியா முழுநேர தலைவரா, இடைக்கால தலைவரா என்கிற விவாதமே தவறான விவாதம். இடைக்கால தலைவர் என்பது ஒரு தொழில்நுட்ப வார்த்தை. கட்சியின் அமைப்பு விதிகளில் இருக் கக்கூடிய வார்த்தை. அகில இந்திய காங்கிரஸ் கூடி ஒருவரை அங்கீகரிக்கும் வரை ஒருவர் இடைக்கால தலைவராக இருப்பார் என்பது அதனுடைய பொருள். அதனை நாகரிகமாக தெளிவுபடுத்திவிட்டார் சோனியா அம்மையார்.

ராகுல், ப்ரியங்கா ஆகியோரை தலைவராக நியமிப்பதை எது தடுக்கிறது?

எங்கள் கட்சியின் தலைவராக இருப்பது யார் என்பதை நாங்கள்தான் முடிவு செய்திருக்கிறோம். அவர் களது காலம் வரும்வரை இவர்கள் இருப்பார்கள் அல்லது அவர்கள் ஏற்கும்வரை இவர்கள் இருப்பார்கள் அல்லது காங்கிரஸ் கட்சி அறிவிக்கும்வரை இருப்பார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கும் சீமானுக்கும் என்ன பிரச்சனை? இரண்டு பக்கங்களிலிருந்தும் கடும் சொற்கள் வீசப்படுகிறதே?

எல்லோருமே அவரவர் கொள்கையை சொன்னால் தவறில்லை. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது அநாகரீகமானது. இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை, இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங் களை ஒன்றாக இணைத்து இலங்கை அரசியல் சட்டத்தினுடைய 13-ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி, இரண்டு மாகாணங்களையும் ஒரு மாநிலமாக ஆக்கி ஒரு முதலமைச்சரை அங்கு தேர்தல் மூலமாக கொண்டு வந்து, தமிழ் மாகாணம் ஒன்றை உருவாக்கி, ஒரு தமிழரை முதலமைச்சராக்குவது என்பது தான் காங்கிரஸ் கட்சியினுடைய கொள்கை. இலங்கையில் உள்ள ஏராளமான தமிழர்கள் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.

இலங்கையை உடைத்து அங்கு தனி ஆட்சி கொண்டு வர வேண்டும் என்பதோ, அந்த நாட்டை இரண்டாக ஆக்க வேண்டும் என்பதோ, இந்திய அரசின் கொள்கையோ, காங்கிரஸ் கொள்கையோ அல்ல.

சீமான் போன்றவர்கள், அவர்களுடைய கொள்கையை திரும்பத் திரும்ப சொல்வதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் மற்றவர் களை துரோகி, இழிவானவர்கள், நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று சொல்வது கதைக்கு உதவுமேயொழிய உண்மைக்குப் பயன்படாது. எனவே அதற்கு எதிர்க்குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

காமராஜர் சிலைக்கு சீமான் மரியாதை செலுத்திய பிறகு அந்த சிலையை சுத்தம் செய்திருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். சீமான் தொட்டால் தீட்டா?

சீமான் தொட்டால் தீட்டு என்று நாங்கள் கருதவில்லை. தீயவர்கள் போய் காமராஜர் சிலையை தொடக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து. எங்கள் கட்சியைச் சேர்ந்த லாரன்ஸ் என் பவர்தான் அதனை செய்தார். இது அவருடைய உணர்வு. சீமான் போன்றவர்களுக்கு அப்படி பதில் சொன்னால்தான் புரியும். என்னை மாதிரியானவர் கள் சொன்னால் அவருக்கு புரியவில்லை. காமராஜர் காங்கிரஸுக்கு வேண்டியவரா, சீமானுக்கு வேண்டியவரா? அது என்ன பொய் உறவு? இந்த நாட்டில் யாரைப் பார்த்தாலும் என் பாட்டன், முப்பாட்டன், நாலாவது பாட்டான், பத்தாவது பாட்டன் என சொல்லிக்கொண்டிருந் தால் அதற்கெல்லாம் பொருள் என்ன? கொள்கை யை பேசுங்கள். சுயவிளம்பரத்திற்காக பேசினால் லாரன்ஸ் போன்றவர்கள் உருவாவார்கள். இந்த செயலை நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் சொல்லி யும் செய்யவில்லை. ஆனால் தொண்டர்களின் இதுபோன்ற உணர்வுகளை எங்களால் தடுக்க முடியாது.

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் தேவையற்றது என்ற கருத்து நிலவுகிறதே?

இந்த நாட்டினுடைய வறுமையைப் பற்றி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி ஏதும் அறியாதவர்கள் பேசும் பேச்சு. ஐ.நா. மன்றம் இந்த திட்டத்தைப் பற்றி பேசுகிறபோது, ஆசிய ஆப்பிரிக்கா நாடுகளில் 10 ஆண்டுகளில் 15 கோடி குடும்பங்களை வறுமைப் பிடியிலிருந்து வெளிக்கொண்டு வந்த ஒரே திட்டம் என்று சொல்லி சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

ksalagiri

வானமே கூரை, வரப்பே தலையணை என வாழும் ஏழைகளுக்காக சோனியாவும் மன்மோகன்சிங்கும் கொண்டுவந்த திட்டம். அது வும் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு மட்டும்தான். அதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

இந்த திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது...

அது பொய். விவசாயம் வருடம் முழு வதும் நடக்கிற தொழில் அல்ல. விவசாயம் மூன்று மாதங்கள் மட்டுமே நடைபெறும். அந்த காலத்தில் இந்த திட்டம் நடைபெறாது. வருடத்திற்கு 100 நாள்தான் அந்த வேலை. மீதமுள்ள நாட்களில் அவர்கள் மற்ற வேலை செய்யலாம். உடலுழைப்பை மட்டுமே நம்பி வாழக்கூடிய வயதானவர்களை, கைக்குழந்தை வைத்திருப்பவர்களை, கர்ப்பிணிப் பெண் களை விவசாயத்திற்கோ, தொழிற்சாலை களுக்கோ வேலைக்கு கூப்பிடுவது கிடையாது. இந்திய சமூகத்தில் ஏழை மக்களுக்காக, சொத்தற்றவர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். எனக்குத் தெரிந்து, எனது 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் இப்படி யொரு புரட்சிகரமான திட்டம் இதுதான். சிறு சிறு குறைபாடுகள் இருக்கலாம். அதனை சரிசெய்ய வேண்டும். கல்மனம் படைத்தவர்கள், எதையும் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், அரைவேக்காட்டுத்தன மாக இருக்கிறவர்கள், எடுத்ததையெல்லாம் பேசலாம் என கருதுகிறவர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிரானவர்கள். அவர்கள் இங்கு மட்டுமல்ல... இந்தியா முழுக்க இருக்கிறார்கள்.

படம்: விவேக்

nkn231021
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe