சீமான் ஒரு தற்குறி! -தோழர் சிறீதரன் சுகு -தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

ss

மிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் சிறீதரன் சுகு. இவர், தீண்டாமைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களுக்காக சிங்கள அரசால் பலமுறை கைது செய்யப்பட்டு, இலங்கையின் கொடும் சிறையான வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டவர். நக்கீரன் யூடியூப் சேனல் நடத்திய சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து தோழர் சிறீதரன் சுகு பங்கெடுத்து தனது கருத்துக்களை பதிவுசெய்தார்.

ss

சமீபகாலமாக, தமிழ்நாட்டில் திரா விடத்திற்கு எதிராகவும், பெரியா ருக்கு எதிராகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடுமையாகப் பேசி வருகிறார். பெரி யார் குறித்து உங்கள் பார்வை என்ன?

தமிழகச் சூழலில், தென்னிந்தியச் சூழலில் பெரியார் உருவானது மிகப்பெரிய விஷயம். முந்தைய காலத்தில் சமூக நீதி மறுக்கப்பட்டது. பெண்களுக்கான உரி மைகள் மறுக்கப்பட் டன. அப்போது, பாதிக்கப் பட்டவர்களின் குரலாக பெரியார் இருந்தார். பெரியார் தனி மனிதர் அல்ல, வரலாற்றுப் பூர்வமான வெளிப்பாடு அவர். எங்களுக்கு அவர் சம்பந்தப்பட்ட நபர்களோடு நீண்ட தொடர்பு இருந்தது.

எனக்கு 15, 16 வயது இருக்கும்போது யாழ்ப்பாணத்திலுள்ள திறந்தவெளி அரங்கில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசிய பேச்சு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ரயில்வே நிலையங்களில் 'பிராமணாளுக்கு மாத்திரம்' என்று போர்டு இருந்தது. அதற்கு முன்பாக பெரியார் அமர்ந்து, அந்த போர்டை கழட்டச் சொல்லி சத்தியாகிரகம் இருந்தார். ஒரு தெருவில் ஒரு வீட்டிற்கு வெளியே மட்டும் 'இது பதிவிரதை வாழும் வீடு' என போர்டு மாட்டியிருந்தால் மற்ற வீடுகளுக்கு என்ன அர்த்தம்? எ

மிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் சிறீதரன் சுகு. இவர், தீண்டாமைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களுக்காக சிங்கள அரசால் பலமுறை கைது செய்யப்பட்டு, இலங்கையின் கொடும் சிறையான வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டவர். நக்கீரன் யூடியூப் சேனல் நடத்திய சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து தோழர் சிறீதரன் சுகு பங்கெடுத்து தனது கருத்துக்களை பதிவுசெய்தார்.

ss

சமீபகாலமாக, தமிழ்நாட்டில் திரா விடத்திற்கு எதிராகவும், பெரியா ருக்கு எதிராகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடுமையாகப் பேசி வருகிறார். பெரி யார் குறித்து உங்கள் பார்வை என்ன?

தமிழகச் சூழலில், தென்னிந்தியச் சூழலில் பெரியார் உருவானது மிகப்பெரிய விஷயம். முந்தைய காலத்தில் சமூக நீதி மறுக்கப்பட்டது. பெண்களுக்கான உரி மைகள் மறுக்கப்பட் டன. அப்போது, பாதிக்கப் பட்டவர்களின் குரலாக பெரியார் இருந்தார். பெரியார் தனி மனிதர் அல்ல, வரலாற்றுப் பூர்வமான வெளிப்பாடு அவர். எங்களுக்கு அவர் சம்பந்தப்பட்ட நபர்களோடு நீண்ட தொடர்பு இருந்தது.

எனக்கு 15, 16 வயது இருக்கும்போது யாழ்ப்பாணத்திலுள்ள திறந்தவெளி அரங்கில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசிய பேச்சு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ரயில்வே நிலையங்களில் 'பிராமணாளுக்கு மாத்திரம்' என்று போர்டு இருந்தது. அதற்கு முன்பாக பெரியார் அமர்ந்து, அந்த போர்டை கழட்டச் சொல்லி சத்தியாகிரகம் இருந்தார். ஒரு தெருவில் ஒரு வீட்டிற்கு வெளியே மட்டும் 'இது பதிவிரதை வாழும் வீடு' என போர்டு மாட்டியிருந்தால் மற்ற வீடுகளுக்கு என்ன அர்த்தம்? என்ன கற்பிக்கிறீர்கள்? எனக் கேட் டார். அதன்பின்னர் போர்டுகள் கழட்டப்பட்டதை சொன்னார்.

அதற்கு பிறகு நான் தமிழகத்திற்கு வந்த போது ஆனைமுத்து, குடந்தை ஆ.பி.எஸ். ஸ்டாலின் உள்ளிட் டோருடன் நல்ல தொடர்பு இருந்தது. அவர்களிடம் திராவிட வாசனை இருந்தது. அவர்களுடன் பழகியபோது பெரிய அனுபவங் கள் கிடைத்தது. நாங்களும் இலங்கையில் சாதிக்கு எதிரான, தீண்டாமைகளுக்கு எதிரான, பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட் டங்களை நடத்தி வந்தோம். அப்போது இங்கே இருப்பது இன முரண்பாடு என்றும், பிரச்சனைகளை திசை திருப்புகிறீர்கள் என்றும் எங்களை சொன்னார்கள். அம்பேத்கர் செல்வாக்கு செலுத்திய வட இந்தியாவிலும் துரதிர்ஷ்டவசமாக வர்ணாஸ்ரம தர்மம் இன்னும் கட்டிக்காக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு அதனைத் தகர்த்து எறிந்திருக்கிறது. தமிழ்நாட்டின் அந்த வாசனை இந்தியா முழுக்க போயிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை பெரியாரை மட்டம் தட்டுபவர்களை தற்குறி என்றுதான் சொல்லுவோம். வரலாற்றில் வாராது வந்த மாமணி பெரியார் என்பது தான் எங்களது அபிப்பிராயம்.

தமிழ்நாடு ஒரு இரும்புக் கோட்டையாக இருக்கக் காரணம் பெரியார். பெண்கள் ஒடுக்கு முறை, மதவாதம், மூடநம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது தமிழ்நாடு. அண்ணா உருவானது, சாதாரண மக்கள் கல்வியில் முன்னேறியது எனப் பெரியாரின் பாத்திரம் முக்கியமான பாத்திரம். துரதிருஷ்டவசமாக, இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தில் கோமியத்தை பற்றி பேசும் அளவுக்கு வந்திருக்கிறது. பெரியார் வேண்டும். இன்றைக்கும் வேண்டும். என்றைக் கும் வேண்டும். இது எங்களது ஆத்மாவில் உள்ள விசயம்.

பிரபாகரன் துப்பாக்கி பயிற்சி கொடுத்தார் உள்ளிட்ட நிறைய விஷயங்களை சொல்கிறார் சீமான். இதனை இலங்கையில் உள்ள தமிழர்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இவர் சொல்வதில் எது உண்மையென்பது அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். நீங்க சொல் கிற மனிதனைப் பற்றிய மதிப்பீடு எங்களுக்கு இருக்கு. சமூக வலைத்தளங்களில் ஒரு கவலை எனக்கு இருக்கு. இந்த மாதிரியான ஆட் களுடைய வீடியோவை பார்க்கிறது, அபிப் பிராயம் சொல்வது, புலம் பெயர்ந்தவர்களிட மும், இங்கே உள்ளவர்களிடம் இருக்கிறது. இது ஒரு சீரழிவு எனச் சொல்லுவேன். நான் இதுபோன்ற ஆபாசமான வலைத்தளங்களை, ஆபாசமான கருத்துக்களை சொல்பவர்களை, பெண்கள் தொடர்பாகவும், சமூகம் தொடர் பாகவும் பிற்போக்கான கருத்துக்கள் சொல்பவர் களை அவ்வளவாக வாசிக்கிறது இல்லை.

ஆனால் ஒரு கட்டத்தில் சீமான் சொல் வதை நான் பார்க்கும்போது, பெரியார் கையில் இருக்கும் தடியும், பிரபாகரன் கையில் இருக்கும் துப்பாக்கியும் ஒன்று எனச் சொன்னதை பார்த்தேன். அதற்கு பிறகு முன்னுக்குப் பின்னாகப் பேசுகிறார். மிகவும் வக்கிரமாகவும், ஆபாசமாகவும் பேசுகிறார். நாங்கள் எங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் அவரின் வீடியோக்களை இப்போது பார்ப்பது இல்லை. இந்தப் போக்கு முறியடிக்கப்பட வேண்டும். இந்தப் போக்குகள் வெல்லாது. வரலாற்றில் காளான் போன்று இல்லாமல் போகும்.

பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல. பெரியார் ஒரு இயக்கம். அந்த இயக்கம் தொடர்ச்சியாக இயங்கி வந்திருக்கிறது. நாங்கள் அந்த இயக்கத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, பெரியார் போல் செயல் படணும் என்று எங்களது தோழர்களுக்கு சொல்லுவோம். பெரியார் மதத்திற்கு எதி ரானவர் என்கிறார்கள். அவர் மதத்தை எதிர்த் தது எதனால்? மதம் சாதிய ஒடுக்குமுறைக்கும், பெண்கள் ஒடுக்குமுறைக்கும் துணையாக இருக் கிறது என்பதால்தான் எதிர்த்தார். பெரியார் கொள்கைகள் உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டும். மதச்சார்பின்மை உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும். மூட நம்பிக்கைகள் இல்லாத சமூகம் வேண்டும். இவை எல்லாவற்றையும் உலகத் தமிழர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

பெரியார் யார்? அது ஒரு அழுகிப்போன, ஊசிப்போன வெங்காயம். அதை வைத்து குழம்பும் வைக்க முடியாது, நிலத்தில் போட்டாலும் விளையாது என்கிறாரே சீமான்?

இப்படிப் பேசுவதை சகித்துக்கொள்ள முடி யாது. இந்தியாவின் சுதந் திரத்திற்கும் சமூக நீதிக்கும் பங்களித்தவர்களை இப்ப டிப் பேசுவது விமர்சனம் இல்லை. இது அவதூறு. சீமான் இப்படிப் பேசுவ தால் பெரியார் பற்றிய செய்திகளை அடக்கிவிட முடியாது. சீமான் பெரியா ருக்கும், பெரியாரிஸ்டு களுக்கும் பயப்படுகிறார். நேரு பெயரை எப்படி இப்போது திட்டமிட்டு மறைக்கிறார்களோ, அதேபோல் தமிழ்நாட்டில், தென்னிந்தியாவில் வாராத வந்த மாமணியான பெரியாரை இருட்டடிப்பு செய்வதற்காக முயற்சி நடக்கிறது. பதர் மாதிரியான அற்பப் பேர்வழிகளின் இதுபோன்ற பேச்சுக்கள் தற்காலிகமானது, எடுபடாது.

புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் நிதி கொடுப்பதால்தான் இப்படி பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் நீங்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

யாரும் இல்லாதபோது கற்பிதங்களை உருவாக்கி ஒரு கீழ்த்தரமான நாலாந்தரமான அரசியல் செய்கிற வேலை. ஒட்டுமொத்த புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் நிதி கொடுப்பது இல்லை. இப்படி பணம் கொடுத்து வேடிக்கை பார்க்கிற, வழிபாடு நடத்துகிற விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு கூட்டம் வெளிநாட்டில் இருக்கிறது. இங்கே இருக்கிறவர் களின் வறுமை, துன்பம், நன்மை, தீமைகள் தெரியாத ஒரு கூட்டம் வெளிநாடுகளில் இருக்கிறது. அவர்கள் படுபிற்போக்கானவர்கள். அவர்களுக்கு சமூக நீதி, தேச விடுதலை, இலங்கையில் உள்ள பல பிரச்சனைகள் தெரியாது. தமிழ்நாட்டு அரசியலும் தெரியாது. இந்திய அரசியலும் தெரியாது.

புலிகளுக்கு சொந்தமான சொத்துபத்துக் கள் வெளிநாடுகளில் இருந்தது. இறுதிப் போருக் குப் பின்னர் அந்த சொத்துபத்துக்களில் சிலர் போர்டு மாட்டிக் கொண்டு திருடிக்கொண் டனர். இதை வைத்துப் பிழைத்த கூட்டம் வெளி நாட்டில் உள்ளது. அப் படிப்பட்ட கூட்டம் பிழைப்பதற்கு இப்படிப் பட்ட ஆட்கள் தேவை. அந்த வகையில் இப்படி இட்டுக்கட்டி, பொய் சொல்கிற, பகுத்தறிவுக்கு புறம்பான அரசியல்வாதி கள் தேவைப்படுகிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் பொழுதுபோக்கும் கும்பல், இங்கேயும் சில பொழுதுபோக்கும் அரசியல் தலைவர்களை உருவாக்கும் போக்கும் நடக்கிறது. அதை வைத்து இங்கே சில அரசியல் சூழலை உரு வாக்கலாம் என நினைக்கிறார்கள்.

என்னிடமும் சொன்னார்கள்... சீமான் என்ற ஒருவர் இருக்கிறார், நன்றாக பேசுகிறார், சுத்தத் தமிழனாக இருக்கிறார் என்றார்கள். நான் கண்டுக்கவில்லை. சுத்தத் தமிழன் என்று யாரைச் சொல்வது. இன்று டி.என்.ஏ. டெஸ்ட் எல்லாம் வந்துவிட்டது. டெஸ்ட் எடுத்தால் அப்போது தெரியும். தூய ரத்தத்தைப் பற்றிப் பேசுவது படுபிற்போக்குத்தனமானது!

-கீரன்

nkn080225
இதையும் படியுங்கள்
Subscribe