Advertisment

சீமான் மாறிவிட்டார்! -விலகிய தம்பிகள் ஆதங்கம்!

sse

நாம் தமிழர் கட்சிக்குள் சமீபகாலமாக பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது. அதனை பிரதிபலிக்கும்விதமாக நவம்பர் 27-ஆம் தேதி, திருச்சி உழவர் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட் டது. இந்த கூட்டத்தினை நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய மாநில, மண்டல, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் இணைந்து நடத்தியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியில் மாநில அளவி லான நிர்வாகிகளாக இருந்த வெற்றிக்குமரன், நவம்பர் 26-ஆம் தேதி திருச்சியில் செய்தி யாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

Advertisment

see

அந்த சந்திப்பின்போது, “"நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள் அனைத்தும் எங்களுடையதுதான். எனவே நாங்கள் அதை ஆதரிக்கிறோம். ஆனால் சீமானை ஆதரிக்கவில்லை. அதற்குக் காரணம், நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சொந்தமானதோ அல்லது சீமான் தொடங்கியதோ இல்லை. நாங்கள் எல்லாரும் இந்த கட்சி ஆரம்பிக்கும் காலத்திற்கு முன்பு ஒரு இயக்கமாக செயல் பட்டுவந்தோம். அப்போது சீமானின் ப

நாம் தமிழர் கட்சிக்குள் சமீபகாலமாக பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது. அதனை பிரதிபலிக்கும்விதமாக நவம்பர் 27-ஆம் தேதி, திருச்சி உழவர் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட் டது. இந்த கூட்டத்தினை நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய மாநில, மண்டல, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் இணைந்து நடத்தியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியில் மாநில அளவி லான நிர்வாகிகளாக இருந்த வெற்றிக்குமரன், நவம்பர் 26-ஆம் தேதி திருச்சியில் செய்தி யாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

Advertisment

see

அந்த சந்திப்பின்போது, “"நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள் அனைத்தும் எங்களுடையதுதான். எனவே நாங்கள் அதை ஆதரிக்கிறோம். ஆனால் சீமானை ஆதரிக்கவில்லை. அதற்குக் காரணம், நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சொந்தமானதோ அல்லது சீமான் தொடங்கியதோ இல்லை. நாங்கள் எல்லாரும் இந்த கட்சி ஆரம்பிக்கும் காலத்திற்கு முன்பு ஒரு இயக்கமாக செயல் பட்டுவந்தோம். அப்போது சீமானின் பேச் சில் ஒரு வசியம் இருந்தது. அதனால் நாங் கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுங்கள் என்று கூறி அவரை முன் நிறுத்தினோம். அதன்பிறகு எந்த ஒரு அறிக் கையாக இருந்தாலும், மேடையில் பேசுவதாக இருந்தாலும், எந்த ஒரு முடிவெடுப்பதாக இருந்தாலும் அனைவருடனும் கலந்து பேசி, அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு இறுதியாக முடிவுசெய்து செயல்படுவோம்.

Advertisment

ss

ஆனால் காலம் மாற மாற அவர் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. அதற்குப் பதிலாக அவர் என்ன நினைக்கிறாரோ அதைப் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சில் துளிகூட ஜனநாயகம் இல்லை. அவர் தற்போது மேடைகளில் பேசும்போதெல்லாம் தமிழ் தேசியத்தை முன்நிறுத்திப் பேசுகிறார். அவரை பலர் இயக்கிவருகின்றனர். அதற்கு பல உதா ரணங்கள் சொல்லமுடியும். சீமான், சசிகலா வைச் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து எந்த முக்கிய நிர்வாகிகளுக்கும் தெரியாது. ஆனால் அவருக்குப் பின்னால் அவரை இயக்குபவர்கள் அறிவுறுத்தலின்படி அங்கு நடித்துவிட்டு வந்துவிட்டார். அடுத்து சமீபத்தில் ரஜினியின் சந்திப்பு. தமிழ்த் தேசியத்திற்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இவர்களை ஏன் சீமான் சென்று சந்திக்கவேண்டும்?

சீமானை இயக்கும் ஒருவர் அவருடன் இருக்கிறார். அவருடைய பெயரை நாங்கள் சொல்லவிரும்பவில்லை. அவர் ஆர்.எஸ்.எஸ். ஸின் சித்தாந்தத்தையும், அதைப் பின்பற்று கிறவருமாக இருப்பதால், தற்போது அவர் யாரை சந்திக்கச் சொல்கிறாரே, அதை சீமான் செயல்படுத்திவருகிறார். இந்த கட்சியில் பொதுச் செயலாளர் இருக்கிறார். அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற ஒரு மருத்துவர். அவருக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது என்று தெரியவில்லை. பெயரளவில் ஒரு பொருளாளர் இருக்கிறார். இந்தப் பொறுப்புகள் எல்லாமே பெயரளவில் மட்டுமே இருக்குமே தவிர யாரும் அந்தப் பொறுப்புக்கு ஏற்ற பணிகளைச் செய்யமுடி யாது. அவர்களுக்கு செய்யவும் தெரியாது. அப்படிப்பட்டவர்களாக பார்த்துதான் சீமான் அந்த பொறுப்புகளில் ஆட் களை நியமிப்பார்.

see

கட்சியில் திரள்நிதி என்ற ஒன்று வசூலிக் கப்படும். வெளிநாடுவாழ் தமிழர்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலு மிருந்து நிதி உதவி வரும். அந்தப் பணத் தை நாங்கள் கட்சி ஆரம் பித்த முதல் இரண்டு ஆண்டுகள் எவ்வளவு நிதி யுதவி பெறப்பட்டது. அதில் எதற்காக, என் னென்ன செலவு செய்தோம் என்ற வருடாந்திர வரவுலி செலவு கணக்குகளை பதிவேற்றம் செய்து அனைவரும் அறிந்து கொள்ளும்படி செய்தோம். ஆனால் அதன்பிறகு யாரும் அதைச் செய்யாமல் சீமான் பார்த்துக்கொண்டார். இன்று அப்படிப் பெறப்படும் திரள்நிதி எவ்வ ளவு, அதில் என்னென்ன செலவு செய்யப் பட்டுள்ளது என்று யாருக்கும் எதுவும் தெரி யாது. பொருளாளருக்குக்கூட தெரியாது.

தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து பலர் விலகிச்செல்வதற்கு காரணம் தி.மு.க. தான் என்றும்,. மாவட்டச் செயலாளர்களுக்கு பணம் கொடுத்து கட்சியை பிளவுபடுத்தி யுள்ளதாகவும் பல தகவல்கள், வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆனால் அப்படி எந்த ஒரு நிகழ்வும் இங்கு நடைபெறவில்லை. நாம் தமிழர் கட்சியிலிருந்த, இருக்கின்ற ஒவ்வொரு தொண்டனும் தங்களுடைய மனைவியின் தாலியைக்கூட அடகு வைத்து கட்சி நிகழ்ச்சி களை நடத்தியவர்கள். அதனால் நாங்கள் யாரிடமும் பணம் பெற்றுக்கொண்டு விலகவேண்டிய தேவையும் இல்லை, அவசியமும் இல்லை.

எங்களுடைய கொள்கையில் நாங்கள் இன்றும், என்றும் மாறப்போவதில்லை. தமிழ்த்தேசியத்தை நாங்கள் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்'' என்று வெற்றிக்குமரன் தன்னுடைய கருத்தை பதிவுசெய்தார்.

தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைத்துக்கொள்வதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரபுவிடம் பேசுகை யில், "தற்போதைக்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அவருடைய கட்சி யில் இணைவது குறித்து நாங்கள் இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. பின்னர் யோசித்து முடிவெடுப்போம்'' என்று கூறினார்.

nkn041224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe